அழகானவன், கச்சிதமானவன், வித்தியாசமானவன்.... ஸ்வீடனிலிருந்து வரும் வாகனங்களை இப்படி வகைப்படுத்தலாம். கார்களில் வால்வோ இந்த ரகம் என்றால், பைக்குகளில் தற்போது ஹுஸ்க்வர்னா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

கடந்தாண்டு நடைபெற்ற Indian Bike Week 2019 நிகழ்ச்சியில் வெளியானபோதே, இந்த 250சிசி பைக்குகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இது மாதிரி இதுவரை நம் நாட்டுச் சாலைகளில் பார்த்ததில்லை என்பது, ஹுஸ்க்வர்னாவுக்குத் தேவையான அறிமுகத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. ஹுஸ்க்வர்னாவின் விட்பிலின் (Vitpilen), ஸ்வேட்பிலின் Svartpilen என்ற இரண்டு 250சிசி பைக்குகளும் ஓட்டுவதற்கு எப்படி இருக்கின்றன?

டிசைன் மற்றும் எர்கனாமிக்ஸ்

ஒயினுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. சிம்பிளான இந்த பானம் பழையதாகும்போது, அதன் மதிப்பு கூடிவிடுகிறது. அந்த சாராம்சத்தைப் பின்பற்றி, தனது பைக்குகளை வடிவமைக்கிறது ஹுஸ்க்வர்னா. எனவே, மற்ற நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குகளில் காணப்படும் பளிச் கிராஃபிக்ஸ், ஷார்ப்பான ஃபினிஷ் ஆகியவை இங்கே கிடையாது. அதற்குப் பதிலாகக் குறைவான ஸ்டிக்கர்கள், ஸ்மூத்தான பாடி லைன்களுடன் இந்த 250சிசி பைக்குகள் தனித்துத் தெரிகின்றன. இவற்றைப் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, ஒட்டுமொத்த பாடிபேனல்களே இரண்டுதானோ என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதன்படி பெட்ரோல் டேங்க்கிலிருந்து பேனல், பைக்கின் நடுப்பகுதி வரை வந்துவிடுகிறது. அங்கிருந்து பைக்கின் பின்பக்கம் வரை நீளும் பேனல் மற்றுமொரு பகுதி ஆகும். பில்லியன் சீட்டுக்குக் கீழே அமைந்திருக்கும் டெயில் லைட்டும், அதன் இருபுறமும் உள்ள LED இண்டிகேட்டர்களும் க்யூட் ரகம்.

பின்பக்க Tyre Hugger-லேயே நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருப்பது வித்தியாசமாக இருந்தாலும், இதை எத்தனை பேர் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்பது சந்தேகமே. மேலும் மழைக்காலத்தில் சேறு நம் மீது தெளிக்காமல் இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். பில்லியன் கிராப் ரெயில், பைக்கின் டிசைனோடு கொஞ்சம் பொருந்தாமல் துருத்திக் கொண்டிருக்கிறது. இரு பைக்குகளிலும் உள்ள ஹுஸ்க்வர்னா Crown லோகோ உடனான பெட்ரோல் டேங்க் மூடி, Neon Yellow தையல் வேலைப்பாடுகள் கொண்ட சீட்கள், வட்டமான Single Pod LCD இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் & ரியர் வியூ மிரர்கள், LED DRL உடனான LED ஹெட்லைட், பேக்லிட் ஸ்விட்ச்கள் - அதன் தோற்றத்துக்குக் கூடுதல் அழகு தருகின்றன.

விட்பிலின் 250, ஸ்வேட்பிலின் 250... ஆகிய இரண்டுமே ஒரே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகின்றன என்பதால், அடிப்படைத் தோற்றத்தில் இரண்டுமே சமமாகவே இருக்கின்றன. ஆனால் இவற்றின் டிசைனில் ஆங்காங்கே இருக்கும் டீட்டெய்லிங் காரணமாக, இந்த 250சிசி பைக்குகள் தமக்கான அடையாளத்தைப் பெற்றுவிட்டன. இதில் கஃபே ரேஸராகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விட்பிலின் 250-ல், எதிர்பார்த்தபடியே ஸ்போர்ட்டியான க்ளிப் ஆன் ஹேண்டில்பார் மற்றும் பின்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆனால் இதில் சிங்கிள் பீஸ் சீட்டே வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பைக்கில் உட்காரும்போதே, தானாக ஒரு ஸ்போர்ட்டி ஃபீலிங் வந்துவிடுகிறது.

நெடுந்தூர/நெடும்நேரப் பயணங்களுக்கு இந்த காம்பினேஷன் சரியாக இருக்காது. மற்றபடி இதிலுள்ள 5 ஸ்போக் அலாய் வீல்களில் MRF Revz C1 ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவே ஸ்வேட்பிலின் 250 என்றால், அது ஸ்க்ராம்ப்ளர் ஆக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. எனவே Brace உடனான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், முன்தள்ளி இருக்கும் சீட்டிங், பிளாஸ்டிக் டேங்க் Bag Rack, ஸ்ப்ளிட் சீட்கள், எக்ஸாஸ்ட் Sheild என மிளிர்கிறது. மேலும் இதிலுள்ள 8 ஸ்போக் அலாய் வீல்களில், MRF Revz FD Dual Purpose டயர்கள் இடம்பெற்றுள்ளன. மற்றபடி இரண்டிலுமே பாடி பேனல்கள் குறைவு என்பதால், ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமைச் சுற்றி பைக்கின் வயர்கள் வெளியே தெரிவது நெருடல். இந்த ஃப்ரேம் டியூக் 250-ல் இருப்பதுதான் என்றாலும் ஹுஸ்க்வர்னாவின் தாழ்வான பின்பக்கத்துக்கு ஏற்ப Sub-Frame புதிதாக உள்ளது. அதுவும் ரிம் ஸ்ட்ரிப்பில் இருக்கும் ஹுஸ்க்வர்னா பிராண்டிங், வெரி நைஸ்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

விட்பிலின், ஸ்வேட்பிலின் இரண்டிலுமே இருப்பது, கேடிஎம் டியூக் 250 பைக்கிலுள்ள அதே 248.8சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் (30bhp பவர் - 2.4kgm டார்க்). இந்த சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின், 4 வால்வ் - DOHC - ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது. விரட்டி ஓட்டுவதற்குப் பெயர் பெற்ற இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின், மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் பவர் டெலிவரியை மனதில் வைத்து ட்யூன் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப 4,000 ஆர்பிஎம் வரை இன்ஜினின் செயல்பாடு டல்லாகவே இருக்கிறது. இதனால் நெரிசல்மிக்க நகர்ப்புறங்களில் அடிக்கடி கியர்களை மாற்ற நேரிடும்.

இங்கிருந்து 7,500 ஆர்பிஎம்முக்கு வரும்போது, பெர்ஃபாமென்ஸில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் இதன் பிறகு ரெட்லைன் வரை, இன்ஜின் பவர்ஃபுல் பட்டாசாகத் தெறிக்கிறது. இதற்கு உறுதுணையாக, 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் கியர்களை மாற்றுவது துல்லியமாக உள்ளது. எனவே 0 - 100 கிமீ வேகத்தை, வெறும் 9.25 விநாடிகளில், இந்த 166 கிலோ எடையுள்ள பைக்குகள் எட்டிப்பிடித்து விடுகின்றன. இது டொமினார் D250-யைவிட ஒரு விநாடி குறைவு என்பது கவனிக்கத்தக்கது. விட்பிலின் மற்றும் ஸ்வேட்பிலின் ஆகியவற்றை விரட்டி ஓட்டும்போது, சீட் - ஹேண்டில்பார் - ஃபுட்பெக்ஸ் ஆகியவற்றில் அதிர்வுகளை உணர முடிகிறது. இது நகர்ப்புறங்களில் குறையாகத் தெரியவில்லை என்றாலும், நெடுஞ்சாலைகளில் ரைடருக்கு நெருடலாக இருக்கலாம்.

ஓட்டுதல் அனுபவம்

விட்பிலின் 250-ன் ரைடிங் பொசிஷன், கேடிஎம்மின் RC பைக்கைப் போலவே அமைந்திருக்கிறது. இதனுடன் பைக்கின் இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் கிரிப்பான டயர்கள் சேரும்போது, திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இதுவே ஸ்வேட்பிலின் 250-ன் ரைடிங் பொசிஷன், டியூக் போல இருக்கிறது. அகலமான ஹேண்டில்பார் காரணமாக, கொஞ்சம் ரிலாக்ஸான ஓட்டுதல் கிடைக்கிறது. இதிலிருப்பது Block Pattern டயர்கள் என்றாலும், வழக்கமான சாலைகளில் அதன் ரோடு கிரிப் நன்றாகவே இருந்தன. அதிக வேகத்திலும் பைக்கின் நிலைத்தன்மை நச் ரகம்தான். ஆனால் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, இரு ஹுஸ்க்வர்னா பைக்குகளும் அதில் ஏற்படும் அதிர்வுகளை ரைடருக்குக் கடத்துகின்றன.

மற்றபடி கேடிஎம் 250 போலவே 1,357மிமீ வீல்பேஸ் - WP Apex 43மிமீ USD ஃபோர்க் & அட்ஜஸ்டபிள் மோனோஷாக் - 17 இன்ச் MRF டயர்கள் - டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான Bybre டிஸ்க் பிரேக்ஸ் (முன்: 320மிமீ, பின்: 230மிமீ) அமைப்புதான் இவற்றிலும் இருக்கின்றன. ஆனால் விட்பிலின் 250 மற்றும் ஸ்வேட்பிலின்250 ஆகியவற்றில் இருக்கும் 9.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், டியூக் 250-ல் இருப்பதைவிடச் சுமார் 4 லிட்டர் சிறியது. மேலும் 149 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் & வழக்கமான சஸ்பென்ஷன் டிராவல்தான் என்பதால், ஸ்வேட்பிலின் 250 பைக்கில் ஆஃப் ரோடிங் எல்லாம் போக முடியாது! தவிர கேடிஎம்மைவிட 20மிமீ அதிகமான சீட் உயரம் இருப்பதால் (842மிமீ), சராசரி உயரத்தில் இருப்பவர்களால் இரு கால்களையும் தரையில் ஊன்ற முடியுமா என்பது கேள்விக்குறிதான். பிரேக்கிங்கைப் பொறுத்தவரை, அது டீசன்ட்டாகவே உள்ளது. டியூக் 250-ல் இருக்கும் Super Moto மோடு இங்கேயும் இருப்பது ப்ளஸ். மற்றபடி விட்பிலின், ஸ்வேட்பிலின் இரண்டிலுமே இருக்கும் பில்லியன் சீட்டில், போதுமான இடவசதி இல்லை என்பது மைனஸ்.

முதல் தீர்ப்பு

சர்வதேசச் சந்தைகளில் கேடிஎம் தயாரிப்புகளைவிட, ஹுஸ்க்வர்னாவின் தயாரிப்புகள் காஸ்ட்லி. ஆனால் இந்தியாவில் இந்த நிலைமை அப்படியே தலைகீழ்! ஆம், 1.84 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஸ்வேட்பிலின், விட்பிலின் ஆகியவை கிடைக்கும் நிலையில், LED ஹெட்லைட் உடனான டியூக் 250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 2.09 லட்ச ரூபாய்! சர்வதேசச் சந்தைகளில் 116 ஆண்டுகளைக் கடந்த நிறுவனமாக இருப்பினும், ஹுஸ்க்வர்னா இந்தியாவுக்குப் புதிதுதான். எனவே ஒரு புதிய பிராண்டை இப்படிப் பக்காவாகக் களமிறக்கும் வித்தையை, பஜாஜிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் ஹுஸ்க்வர்னாவைவிட 24 ஆயிரம் ரூபாய் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் டொமினார் D250, பிராக்டிக்கலான பைக் வேண்டும் என்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது.

எனவே இளைஞர்களை மனதில் வைத்துத் தனித்தன்மையான டிசைனில் களமிறங்கியிருக்கும் விட்பிலின், ஸ்வேட்பிலின் இங்கே வெற்றி பெறக்கூடும். இந்த ஹுஸ்க்வர்னாவின் 401 மாடல்களுக்கு, வி ஆர் வெயிட்டிங்!