Published:Updated:

எல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்?

டிவிஎஸ் iQube
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் iQube

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: டிவிஎஸ் iQube

எல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்?

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: டிவிஎஸ் iQube

Published:Updated:
டிவிஎஸ் iQube
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் iQube
இதோ 2020 தொடங்கி நான்கே மாதங்களில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகமாகிவிட்டன. பஜாஜைத் தொடர்ந்து, டிவிஎஸ்ஸும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களத்தில்! இந்த நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக வந்திருக்கும் iQube எப்படி இருக்கிறது? இதை ஓசூரில் அமைந்திருக்கும் டிவிஎஸ்ஸின் தொழிற்சாலையில் உள்ள டெஸ்ட் டிராக்கில் சோதனை செய்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசைன்

LED ஹெட்லைட் - U வடிவ DRL - இண்டிகேட்டர்கள் - டெயில் லைட் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் காரணமாக, RoboCop போன்று இருக்கிறது iQube. சதுர வடிவில் வித்தியாசமாக இருக்கும் மிரர்கள், ஓகே!

டிவிஎஸ் iQube
டிவிஎஸ் iQube

அலாய் லீவர்கள், கறுப்பு நிற வைஸர், ஒளிரும் (Iluminated) எலெக்ட்ரிக் லோகோ, மோட்டார் குளுமையாக இருக்க ஏர் வென்ட்கள், சிவப்பு நிற தையல் வேலைப்பாடு கொண்ட சீட் என இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரசிக்கும்படியான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் மற்றபடி ஜூபிட்டரை நினைவு படுத்தும்படி சிம்பிளான டிசைனில் iQube இருப்பது, அனைத்து வயதினரையும் கவர வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது போலத் தோன்றுகிறது. ஃபிட் அண்டு ஃபினிஷ் மனநிறைவைத் தருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வசதிகள்

மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, iQube-லும் LED மயம்தான். சீட்டுக்கு அடியே ஸ்டோரேஜ் ஸ்பேஸில் லைட் இருந்தாலும், அது சாவி ஆனில் இருந்தால் மட்டுமே ஒளிரும். கூடவே USB சார்ஜிங் பாயின்ட் இருப்பதும் நைஸ். இங்கே ஹெல்மெட் (Full Face/Half Face) வைக்குமளவுக்கு இடமிருக்கிறது. பாஸ் லைட் உடன் ஹஸார்டு (Hazard) இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏத்தரைப் போலவே இங்கிருக்கும் TFT டிஸ்பிளேவும், வெயிலிலும் கிளார் அடிக்கவில்லை.

எல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்?

அப்பாச்சி RTR 200 4V மற்றும் என்டார்க்கைத் தொடர்ந்து, iQube-லும் SmartXonnect தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. புளூடுத் கனெக்ட்டிவிட்டி, கால் அலெர்ட், SMS Notification, Turn By Turn நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங், Trip Date ரெக்கார்டிங், பேட்டரி சார்ஜ் ஸ்டேட்டஸ், ரேஞ்ச், பார்க்கிங் லொக்கேஷன் போன்ற பல தகவல்கள் இதில் தெரிகின்றன. பார்க் அசிஸ்ட் இருப்பதால், நெரிசலான இடங்களிலும் iQube-யை முன்னேயும் பின்னேயும் தேவைக்கேற்ப சுலபமாக நகர்த்த முடிகிறது.

 220 மிமீ டிஸ்க், 12 இன்ச் அலாய் வீல்.. ஜூபிட்டரில் இருக்கும் அதே!
220 மிமீ டிஸ்க், 12 இன்ச் அலாய் வீல்.. ஜூபிட்டரில் இருக்கும் அதே!

பர்ஃபாமன்ஸ்

iQube-ல் இருக்கும் Hub Mounted எலெக்ட்ரிக் மோட்டார், அதிகபட்சமாக 4.4kW சக்தியைத் தருகிறது. Bosch தயாரிப்பான இதன் செயல்திறன் சேட்டக்கைவிட அதிகம் என்பதால், எதிர்பார்த்தபடியே ஆக்ஸிலரேஷன் துடிப்பாக இருக்கிறது (0 - 40கிமீ வேகம்: 4.2 விநாடிகள்). எக்கோ, பவர் என இரு ரைடிங் மோடுகள் இருந்தாலும், அவற்றின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அப்படியே இருப்பது செம! ஆனால் இதன் டாப் ஸ்பீடிலும் ரேஞ்ச்சிலும் வித்தியாசம் இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

 ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி உண்டு. டிஸ்ப்ளே பகலில்கூட கிளார் அடிக்கவில்லை..
ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி உண்டு. டிஸ்ப்ளே பகலில்கூட கிளார் அடிக்கவில்லை..

அதன்படி எக்கோ மோடில் iQube அதிகபட்சமாக 45 கி.மீ வேகமும், ஃபுல் சார்ஜில் 75 கி.மீ தூரமும் செல்கிறது. இதுவே பவர் மோடு என்றால், அதிகபட்சமாக 78 கி.மீ வேகமும், ஃபுல் சார்ஜில் 55 கி.மீ தூரமும் செல்ல முடிகிறது. பேட்டரி 15-20% சார்ஜ் மட்டுமே இருந்தாலும், டாப் ஸ்பீடு 10% மட்டுமே குறைவது சூப்பர் (அதாவது 70 கிமீ வேகம் வரை செல்லலாம்). பிரேக் பிடிக்கும்போது தடாலடியாக த்ராட்டில் கட் ஆகாததால் (உபயம்: ரீஜெனரேட்டிவ் பிரேக்ஸ்), குறைவான வேகங்களிலும் iQube ஸ்மூத்தாக உள்ளது.

 முன்பக்கம் போலவே பின்பக்கமும் LED லைட்ஸ், Robo cop போலவே இருக்கின்றன.
முன்பக்கம் போலவே பின்பக்கமும் LED லைட்ஸ், Robo cop போலவே இருக்கின்றன.

ஓட்டுதல் அனுபவம்

Hub Mounted எலெக்ட்ரிக் மோட்டார்தான் என்றாலும், Gradeability-ல் சிறப்பாகவே செயல்பட்டது iQube. 10 டிகிரி மேட்டில்கூட, ஸ்கூட்டர் இருவரைச் சுமந்துகொண்டு ஏறிவிட்டது. பின்பக்கத்தில் மோட்டார் இருப்பதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடையைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதில் போட்டியாளர்கள் தடுமாறுவதைப் பார்த்திருக்கிறோம். அந்தத் தடைக்கல்லை வெற்றிகரமாகத் தாண்டி வந்திருக்கிறது டிவிஎஸ். iQube-ன் பேட்டரி Pack மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஒன்று ஃப்ளோர் போர்டிலும், மற்ற இரண்டு பின்னேவும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பின்பக்கத்தில் பைக் போல இரு ஷாக் அப்சார்பர்கள் இருப்பதால், ஓட்டுதலிலும் நிலைத்தன்மையிலும் இடர்பாடு ஏதும் இல்லை. ஜூபிட்டரில் நாம் பார்த்த டெலிஸ்கோபிக் ஃபோர்க், 12 இன்ச் வீல்கள், 220மிமீ டிஸ்க்/130மிமீ டிரம் பிரேக்ஸ் கூட்டணி, iQube-ல் திறம்படத் தமது பணியைச் செய்கின்றன. எனவே ஜூபிட்டரைவிட 10 கிலோ அதிக எடையில் இருந்தாலும் (118 கிலோ), இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கையாளுமை ரசிக்கும்படியே அமைந்திருக்கிறது. திருப்பங்களில் அதிக வேகத்தில் iQube-யை நம்பிக்கையாகச் செலுத்த முடிவது ப்ளஸ். கிரவுண்ட் கிளியரன்ஸ் 150மிமீ என்பது ஓகே ரகம்தான்.

சார்ஜிங் மற்றும் முதல் தீர்ப்பு

iQube-ன் விலையிலேயே Home Charger-ம் அடக்கம். இது RFID கொண்டு இயங்குவதால், பெரியளவில் சிக்கல்கள் ஏதும் ஏற்படாது. கொரியாவைச் சேர்ந்த LG நிறுவனம் தயாரித்திருக்கும் 2.2kWh லித்தியம் ஐயன் பேட்டரியின் செல்களைக் கழற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

 சார்ஜிங் பாயின்ட், ஃபுல் சார்ஜிங்குக்கு 5 மணி நேரம் ஆகும். கார்களில் இருப்பதுபோன்ற சாவி!
சார்ஜிங் பாயின்ட், ஃபுல் சார்ஜிங்குக்கு 5 மணி நேரம் ஆகும். கார்களில் இருப்பதுபோன்ற சாவி!

சேட்டக் போலவே இதையும் ஃபுல் சார்ஜ் ஏற்ற 5 மணி நேரம் தேவைப்படுவதுடன், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கிடையாது. மற்றபடி சார்ஜர், பேட்டரி Pack, பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவை டிவிஎஸ் தயாரிப்பு என்பது நல்ல விஷயம்தான். 1.15 லட்ச ரூபாய் பெங்களூர் ஆன்-ரோடு விலையில் கிடைக்கும் iQube, ஏத்தரைவிடக் குறைவான விலையில் வந்திருக்கிறது.

எல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்?

இப்போதைக்கு பெங்களூரில் மட்டுமே களமிறங்கியிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் Annual Subscription திட்டம் இலவசம் என்றாலும், பின்னாளில் அது 900 ரூபாய் என நிர்ணயிக்கப்படலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தினசரி நகர்ப்புறப் பயன்பாட்டுக்கான பிராக்டிக்கலான வாகனமாகத்தான் இருக்கிறது iQube. இதன் குறைவான ரேஞ்ச்தான் யோசிக்க வைக்கிறது..இதை Creon எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிவிஎஸ் சரிசெய்யும் என நம்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism