ஆ க்டிவாவுக்குப் போட்டியாக ஜூபீட்டரை, கடந்த 2013-ம் ஆண்டு டிவிஎஸ் அறிமுகப்படுத்தியபோது, அது ப்ரீமியம் ஸ்கூட்டராக பொசிஷன் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில், ஒரு வழக்கமான 110சிசி ஸ்கூட்டராகத் தன்னை நிலைநிறுத்த வேண்டிய இடத்துக்கு ஜூபிட்டர் வந்துவிட்டது. டிவிஎஸ்ஸின் ப்ரீமியம் ஸ்கூட்டராக என்டார்க் அறியப்பட்டாலும், அது 125சிசி செக்மென்ட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருந்தாலும், நம் நாட்டில் ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஜூபிட்டரின் BS-6 வெர்ஷன் எப்படி இருக்கிறது?

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

BS-6 பேட்ஜிங் & Reflectors தாண்டி, ஸ்கூட்டரின் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஜூபிட்டரின் டாப் வேரியன்ட்டான க்ளாஸிக்கில், Starlight Blue நிறம் புதிது. மற்றபடி நமக்கு நன்கு பழக்கப்பட்ட டிசைன்தான், இந்த 110சிசி ஸ்கூட்டர். பல ஸ்கூட்டரின் பாடி பேனல்கள் ப்ளாஸ்டிக்கில் வருவதை வைத்துப் பார்க்கும்போது, இதிலிருக்கும் பெரும்பான்மையான பாடி பேனல்கள் மெட்டல் என்பது ப்ளஸ். ஸ்டாண்டர்டு வேரியன்ட்டில் LED ஹெட்லைட்டும், ZX & க்ளாஸிக்கில் USB சார்ஜரும் புதிது. மேலும் ZX வேரியன்ட்டில் டிஜிட்டல் அனலாக் மீட்டர் பிரத்யேகமாக இருந்தால், க்ளாஸிக்கில் விண்ட் ஸ்க்ரீன் - Tinted வைஸர் - பேக்ரெஸ்ட் - முன்பக்க ஸ்டோரேஜ் ஆகியவை ஸ்பெஷல்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, ZX வேரியன்ட்டில் சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டம், முன்பக்க டிஸ்க் பிரேக், All in One சாவி துவாரம் சேர்க்கப்பட்டன. சீட்டுக்கு அடியே, OBD போர்ட் இடம்பெற்றுள்ளது. இன்ஜின் கில் ஸ்விட்ச் இருந்திருக்கலாமோ? ஸ்விட்ச்கள் - மிரர்கள் பயன்படுத்த நன்றாக இருந்தாலும், அவற்றின் டிசைன் ரொம்ப பழசு.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

இதர BS-6 வாகனங்களைப் போலவே, ஜூபிட்டரும் கார்புரேட்டரில் இருந்து ஃப்யூல் இன்ஜெக்ஷனுக்கு அப்கிரேடு ஆகிவிட்டது. Ecothrust என்ற அடைமொழியுடன் வரும் இந்த 109.7சிசி இன்ஜின், முன்பைவிட 15% அதிக மைலேஜைத் தரும் என்கிறது டிவிஎஸ். BS-4 மாடலைவிட 0.5bhp குறைவான பவர் கிடைத்தாலும் (7.4bhp@7,000rpm), டார்க்கில் மாறுதல் இல்லை (0.84kgm@5,500rpm). ஆக்டிவாவைவிடக் குறைவான செயல்திறனைக் கொண்டுள்ள ஜூபிட்டர், 0-60 கிமீ வேகத்தை 10.24 விநாடிகளில் எட்டிப்பிடிக்கிறது. 109 கிலோ எடையுள்ள இந்த ஃபேமிலி ஸ்கூட்டருக்கு, இந்த பெர்ஃபாமன்ஸ் ஓகே ரகம்தான். சீரான பவர் டெலிவரியைக் கொண்டிருக்கும் இது, நகரத்தில் 50.4கிமீயும் - நெடுஞ்சாலைகளில் 57.6கிமீயும் மைலேஜ் தருகிறது. ஆக்டிவாவைவிட பெரிய 6 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஜூபிட்டரில் உண்டு.

1. எல்லாமே அனலாக்தான். ZX-ல் டிஜிட்டல்-அனலாக் உண்டு. 2. ஸ்விட்ச்கள் பயன்படுத்த நன்றாக இருந்தாலும், டிசைன் ரொம்ப பழசு. இன்ஜின் கில் ஸ்விட்ச் இருந்திருக்கலாம். 3. LED ஹெட்லைட் உண்டு. 4. சீட்டுக்கு அடியில் OBD போர்ட்.

ஓட்டுதல் அனுபவம்

போட்டி ஸ்கூட்டர்கள் எதிலுமே இல்லாத 90/90-12 இன்ச் பின்பக்க வீல் காரணமாக, ஜூபிட்டரின் ஓட்டுதல் முன்புபோலவே அசத்தலாக உள்ளது. இதனால் 80கிமீ வேகத்தில் செல்லும்போதும்கூட, ஸ்கூட்டர் நிலையாக இருக்கிறது (நன்றி: 1,275மிமீ வீல்பேஸ், இது ஆக்டிவாவைவிட 15மிமீ அதிகம்). மேலும் கரடுமுரடான சாலைகளில் சென்றாலும், அதனால் உண்டாகும் அதிர்வுகள் ரைடருக்குக் கடத்தப்படவில்லை. இதற்கு ஸ்கூட்டரின் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - அட்ஜஸ்டபிள் மோனோஷாக் கூட்டணி துணை நிற்கிறது. மென்மையான குஷனிங்கைக் கொண்ட சீட், உயரம் அதிகமானவர்களுக்கும் சொகுசானதாக உள்ளது. ஸ்டாண்டர்டு மாடலில் SBT அமைப்பைக் கொண்ட 130மிமீ டிரம் பிரேக்ஸ் இருக்கின்றன. இதன் செயல்பாடு நன்றாகவே இருந்தாலும், அவை விரைவாகத் தளர்ந்துவிடுகின்றன. 60கிமீயில் இருந்து பிரேக் பிடித்தால், 24.08 மீட்டரில் ஸ்கூட்டர் நின்றுவிடுகிறது. டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக், இதைவிட நன்றாக இருக்கலாம். 107 கிலோ எடையுள்ள ஆக்டிவாவைவிட 21மிமீ குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்தாலும் (150மிமீ), அது அசெளகரியத்தை ஏற்படுத்தவில்லை. 21 லிட்டர் பூட் ஸ்பேஸ்... பரவாயில்லை.

முதல் தீர்ப்பு

ரூ.79,423-ல் ஆரம்பிக்கும் ஜூபிட்டர் சுமார் 90,000 எனும் சென்னை ஆன்ரோடு விலை வரை வருகிறது. இது ஸ்மூத்தான இன்ஜின் & பெரிய பின்பக்க வீல் என தனது பலங்களுடன் அப்படியே தொடர்கிறது. ஆக்டிவாவின் ஆரம்ப மாடலைவிட, இதன் ஸ்டாண்டர்டு வேரியன்ட் சுமார் 2,000 ரூபாய் குறைவான விலையில் கிடைக்கிறது. ஒரு பக்காவான ஃபேமிலி ஸ்கூட்டருக்கான தகுதிகளை, ஜூபிட்டர் தன்வசம் கொண்டிருக்கிறது. என்றாலும் இதன் விலை அதிகமான க்ளாஸிக் வேரியன்ட்டின் விலையில், டெஸ்ட்டினி & ஆக்ஸஸ் போன்ற 125சிசி ஸ்கூட்டர்களின் ஆரம்ப மாடல்கள் கிடைக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும். தவிர இந்த டாப் வேரியன்ட்டில், விலை குறைவான ZX வேரியன்ட்டில் உள்ள சில முக்கிய வசதிகள் மிஸ்ஸிங் என்பது நெருடல். FY2020-ல், இந்தியா முழுக்க விற்பனையான ஜூபிட்டரின் எண்ணிக்கை 5,95,545 ஸ்கூட்டர்கள். 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த டிவிஎஸ் தயாரிப்பு, இன்னும் பலரைத் தன்வசப்படுத்தும் என்றே தோன்றுகிறது.