Published:Updated:

க்ளாஸிக்... இப்போ மாடர்ன்!

ராயல் என்ஃபீல்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ராயல் என்ஃபீல்டு

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 BS-6

க்ளாஸிக் 350... சாம்பலில் இருந்து எழுந்த ஃபீனிக்ஸ் பறவைபோல, இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைச் சரிவிலிருந்து தூக்கி நிறுத்திய பெருமை, இந்த ரெட்ரோ பைக்கையே சேரும். மேலும் ராயல் என்ஃபீல்டு ஆர்வலர்களைத் தாண்டி, மற்ற பைக் ரைடர்களையும் இந்த நிறுவனம் வசம் கொண்டுவந்ததில், க்ளாஸிக் 350-ன் பங்கு பெரியது. இதனாலேயோ என்னவோ, கடந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ராயல் என்ஃபீல்டு நம் நாட்டில் அறிமுகப்படுத்திய முதல் BS-6 மாடல், சென்ட்டிமென்ட்டாகவே இந்த ரெட்ரோ பைக்காக அமைந்ததோ எனத் தோன்றுகிறது. க்ளாஸிக் 500 பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், அதிலிருந்த சில அம்சங்கள் க்ளாஸிக் 350-க்கு இடம் மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை இந்த பைக்கில் ராயல் என்ஃபீல்டு செய்திருக்கிறதா?

விலை: ரூ:2,08,637 (சென்னை ஆன்ரோடு)
ப்ளஸ்: ஓட்டுதல், ட்யூப்லெஸ் டயர்  I மைனஸ்: பிராக்டிக்கல் வசதிகள் இல்லை
விலை: ரூ:2,08,637 (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: ஓட்டுதல், ட்யூப்லெஸ் டயர் I மைனஸ்: பிராக்டிக்கல் வசதிகள் இல்லை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

பைக்கின் பெயரிலேயே க்ளாஸிக் இருந்தாலும், அதன் தோற்றத்தில் மாடர்னாகச் சில விஷயங்களைப் புகுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் Stealth Black மேட் கலரில், 9 ஸ்போக் அலாய் வீல்கள் & MRF டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன (Gunmetal Grey கலரிலும் இந்த வசதி உண்டு). இது தண்டர்பேர்டு X சீரிஸ் பைக்குகளில் இருந்த அதே செட்-அப்தான் என்பது கவனிக்கத்தக்கது. எனவே, பின்பக்கத்தில் முன்பிருந்ததைவிட அகலமான டயர் இடம் பெற்றிருக்கிறது (120/80-R18).

 ஆம்ப் மீட்டருக்குப் பதில், லோ ஃப்யூல் இண்டிகேஷனும், இன்ஜின் வார்னிங்கும்... ,  வட்ட ஹெட்லைட்தான் புல்லட்டுக்கு அழகு. ஆனால், LEDக்கெல்லாம் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமோ?
ஆம்ப் மீட்டருக்குப் பதில், லோ ஃப்யூல் இண்டிகேஷனும், இன்ஜின் வார்னிங்கும்... , வட்ட ஹெட்லைட்தான் புல்லட்டுக்கு அழகு. ஆனால், LEDக்கெல்லாம் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமோ?

இந்த கலரின் பெயருக்கேற்றபடியே மிரர்கள், இண்டிகேட்டர்கள், இன்ஜின், வீல்கள், பாடி பேனல்கள் என அனைத்துமே மேட் கறுப்பு நிறத்தில் இருக்கின்றன. இதற்கு மேட்ச்சிங்காக, ஸ்டிக்கரிங் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருப்பது அழகு. மேலும் க்ளாஸிக் 500 பைக்கில் இருந்த Chrome Black கலர் ஆப்ஷன், க்ளாஸிக் 350 பைக்கில் கிடைப்பது செம! தவிர Amp meter இருந்த இடத்தில், இன்ஜின் வார்னிங் மற்றும் Low Fuel Warning இண்டிகேட்டர்கள் இருக்கின்றன. ஹார்னின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 புல்லட்டில் ட்யூப்லெஸ் டயருடன் அலாய் வீல் பார்ப்பதே செமையாக இருந்தது. ,  அங்கங்கே இது போன்ற சிவப்பு நிற ஸ்டிக்கரிங்... Classic 350 லோகோ அழகு...
புல்லட்டில் ட்யூப்லெஸ் டயருடன் அலாய் வீல் பார்ப்பதே செமையாக இருந்தது. , அங்கங்கே இது போன்ற சிவப்பு நிற ஸ்டிக்கரிங்... Classic 350 லோகோ அழகு...

இதனுடன் எக்ஸாஸ்ட் பைப்பும் கொஞ்சம் நீளமாகிவிட்டது. இப்படி சிற்சில மாற்றங்கள் இருந்தாலும், பெரிய பெட்ரோல் டேங்க் - ஸ்ப்ரிங் உடனான ரைடர் சீட் - கைகளால் வரையப்பட்ட Pinstripes - வட்டமான விளக்குகள் - டூல் பாக்ஸ் - Tiger Eyed பார்க்கிங் விளக்குகள் என ரெட்ரோ அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. அதற்காக பைக்கின் Locking Mechanism, இன்னும் பழைய ஸ்டைலில் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மேலும் பைக்கின் விலையுடன் ஒப்பிடும்போது, டூரிங் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இதில் ட்ரிப் மீட்டர், USB பாயின்ட், Hazard இண்டிகேட்டர்கள், LED லைட்டிங் போன்ற அம்சங்கள் எதுவுமே இல்லாதது நெருடல். ஃபுட் பெக்ஸ், கிராப் ரெயில் ஆகியவை இன்னும் கொஞ்சம் தரமாக இருந்திருக்கலாம். ஸ்விட்ச்களின் ஃபினிஷ் ஓகே என்றாலும், க்ராஷ் கார்டு இன்னுமே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படாதது ஏமாற்றமே. இதர கலர் ஆப்ஷன்களில் 110/90-18 பின்பக்க டியூப் டயர் & ஸ்போக் வீல்களே இருக்கின்றன. 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் மூடி, Hinged ஃபினிஷில் இருப்பதும் பெரிய மைனஸ்.

 புல்லட்டின் அதே ரெட்ரோ ஸ்டைல் டெயில் லைட்... Tiger Eye இண்டிகேட்டர்கள்...,  ஸ்ப்ளிட் சீட்... நீண்ட தூரப் பயணங்களுக்கு செட் ஆகவில்லை.
புல்லட்டின் அதே ரெட்ரோ ஸ்டைல் டெயில் லைட்... Tiger Eye இண்டிகேட்டர்கள்..., ஸ்ப்ளிட் சீட்... நீண்ட தூரப் பயணங்களுக்கு செட் ஆகவில்லை.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் &

ஓட்டுதல் அனுபவம்

பைக்கின் டிசைனைப் போலவே, UCE-Twinspark இன்ஜினும் சிறிய மாற்றங்களுடன் தொடர்கிறது. ஆம், இதில் பொருத்தப்பட்டிருக்கும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் - ஏர் கூல்டு இன்ஜின், முன்புபோலவே 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக Closed Loop ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்னீஷன் அமைப்பும் அதற்கேற்ப ECU செட்-அப்பிற்கு அப்கிரேடு செய்யப்பட்டு விட்டது. எனவே பேட்டரியின் சைஸ், 8Ah-ல் இருந்து 12Ah ஆக வளர்ந்துவிட்டது (MF தான்). செல்ஃப் ஸ்டார்ட்டருடன் வழக்கமான கிக் லீவரும் இருப்பது ஆறுதல்.

 346 சிசி, ஏர்கூல்டு Fi இன்ஜின் 0.7 bhp பவர் குறைந்துவிட்டது. அதிர்வுகளும்தான். ,  அதே பழைய ஸ்விட்ச்கள்தான். ஃபினிஷ் ஓகே.
346 சிசி, ஏர்கூல்டு Fi இன்ஜின் 0.7 bhp பவர் குறைந்துவிட்டது. அதிர்வுகளும்தான். , அதே பழைய ஸ்விட்ச்கள்தான். ஃபினிஷ் ஓகே.

இந்த Long Stroke இன்ஜின் வெளிப்படுத்தும் 2.8kgm டார்க் அதேதான் என்றாலும், 0.7bhp பவர் குறைந்துவிட்டது (BS-4: 19.8bhp, BS-6: 19.1bhp). இந்தப் பவர் குறைபாடுடன், முன்பைவிட அதிக எடையும் சேரும்போது, ஆக்ஸிலரேஷனில் சரிவு இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால், பெரிதாகத் தெரியவில்லை. சீரான த்ராட்டில் ரெஸ்பான்ஸுக்குப் பெயர்பெற்ற Fi அமைப்பு, அந்த எண்ணம் எழாதவாறு பார்த்துக் கொள்கிறது. மேலும் முன்பிருந்ததைவிட, இன்ஜின் ஸ்மூத்னெஸ்ஸில் லேசான முன்னேற்றமும் தெரிகிறது. ஆனால் வேகம் செல்லச் செல்ல வரக்கூடிய அதிர்வுகளில் எந்த வித்தியாசமும் இல்லாதது மைனஸ்தான். தவிர, ஃப்யூல் இன்ஜெக்ஷன் காரணமாக, பைக்கின் மைலேஜ் மற்றும் Cold Start திறனில் நல்ல வேறுபாடு. ஹைவேஸில் எங்களுக்கு 36 கி.மீ மைலேஜ் கிடைத்தது.

க்ளாஸிக்... இப்போ மாடர்ன்!

மற்றபடி Single Downtube சேஸி, 35 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர், டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான Bybre டிஸ்க் பிரேக்ஸ் (முன்: 280மிமீ, பின்: 240மிமீ) என மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. எனவே சொகுசான அனுபவம், கிடைக்கிறது. BS-4 மாடலைவிட 20மிமீ அதிக வீல்பேஸ் (1,390மிமீ) மற்றும் அகலமான பின்பக்க டயர் சேரும்போது, பைக்கின் ரோடு கிரிப்பில் கொஞ்சம் நம்பிக்கை கூடியிருக்கிறது. ஆனால் பெரிய 350சிசி இன்ஜின் இருப்பதால், இதை பெர்ஃபாமன்ஸ் பைக்போல விரட்டி ஓட்டினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் பைக்கை ஓட்டும்போது, அதன் 195 கிலோ எடை தெரியாவிட்டாலும், நெருக்கடியான இடத்தில் யூ-டர்ன் போடும்போது அல்லது பைக்கை பார்க் செய்ய நேரிடும்போது அது இடைஞ்சலைத் தரலாம்.

மேலும் ஸ்ப்ளிட் சீட்களின் குஷனிங், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி இல்லை. ரியர்வியூ மிரர்கள் ஸ்டைலாக இருந்தாலும், பருமனானவர்கள் ஓட்டினால் அதில் தோள்பட்டைதான் தெரியும். மேலும், அதிக வேகங்களில் செல்லும்போது அதிர்வுகள் காரணமாக, அதில் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை.

க்ளாஸிக்... இப்போ மாடர்ன்!

முதல் தீர்ப்பு

1.85 முதல் 2.08 லட்சம் வரை ஆன்ரோடு விலையில், 6 கலர்களில் விற்பனையாகும் க்ளாஸிக் 350 BS-6 மாடல், அதன் இறுதிக்காலத்தில் இருக்கிறது என்பதே நிதர்சனம். ஏனெனில் முற்றிலும் புதிய J ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய மாடல், நீண்ட காலமாகவே டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. கொரோனாதான் இதன் அறிமுகத்தைத் தள்ளிவைத்திருக்கிறது. மற்றபடி இதன் BS-4 மாடலைவிட, BS-6 வெர்ஷனின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையே, 13-17 ஆயிரம் வரை அதிகரித்துவிட்டது (மே மாதத்தில் அமலுக்கு வந்த விலை உயர்வும் அடக்கம்). ஆனால் இதைக் கொஞ்சம் நியாயப்படுத்தும்படி, பைக்கில் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அலாய் வீல்கள் & டியூப்லெஸ் டயர்களைச் சேர்த்துவிட்டது ராயல் என்ஃபீல்டு. மேலும் தற்போது 3 வருட வாரன்ட்டி & 3 வருட RSA சேவைகள், இந்த BS-6 ரெட்ரோ பைக்குடன் வழங்கப்படுகிறது. இதைத் தேவைபட்டால், Ride Sure திட்டத்தின் கீழ் 4 வருடமாக அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

தவிர Online Configurator உதவியுடன், ஒருவர் தமது பைக்கில் தேவையான கஸ்டமைசேஷனை, ராயல் என்ஃபீல்டின் அதிகாரப்பூர்வமான ஆக்சஸரீஸ்களுடன் செய்ய முடியும். இடையே 10,000 ரூபாய் மதிப்பிலான ஆஃபர்களும் கொடுக்கப்பட்டன. இன்றுமே இந்த பைக்கின் ரெட்ரோ லுக்குக்காகவும், அதன் சொகுசான ஓட்டுதலுக்காகவும் வாங்கக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தவிர, போட்டி பைக்குகளான ஜாவா (14-17 ஆயிரம் ரூபாய் அதிகம்) மற்றும் பெனெல்லி இம்பீரியல் (35 ஆயிரம் ரூபாய் அதிகம்) உடன் ஒப்பிடும்போது, இன்ஜின் திறனில் அவற்றுக்கு இடையே கச்சிதமாகப் பொசிஷன் ஆகக்கூடிய க்ளாஸிக் 350 பைக்கின் விலை குறைவுதான்.

க்ளாஸிக்... இப்போ மாடர்ன்!

இப்படிப் பல ப்ளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், வசதிகள் விஷயத்தில் இது ஏமாற்றமே அளிக்கிறது. மேலும் இன்ஜின் அதிர்வுகள் என்பது, க்ளாஸிக் 350 பைக் அறிமுகமான நாளில் இருந்தே இருக்கிறது. இந்தக் குறைகள் எல்லாம், புதிதாக வரப்போகும் மாடலில் இருக்காது என்றே தோன்றுகிறது. எனவே புதிய பைக்குக்காகக் கொஞ்சம் காத்திருக்க முடியும் என்பவர்கள், காத்திருக்கலாம்.