Published:Updated:

இளசுகளுக்கு ஓகேவா இன்டர்செப்டர்?

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6

இளசுகளுக்கு ஓகேவா இன்டர்செப்டர்?

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6
ன்டர்செப்டர் 650... இன்ஜின் அதிர்வுகளுக்குப் பெயர்பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து, இவ்வளவு ஸ்மூத்தான ஒரு பைக்கை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த ‘UK’s Top Selling Motorcycle’ என்ற பெருமையை, கொரோனா காலத்தில் பெற்றிருக்கும் இன்டர்செப்டர் 650-ன் BS-6 வெர்ஷனை ஓட்டிப் பார்க்க, கொஞ்சம் ஆர்வமாகவே இருந்தோம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே, க்ளியர் லென்ஸ் ஹெட்லைட் மற்றும் Reflector Strip ஆகியவற்றுடன் இன்டர்செப்டர் 650 வரத் தொடங்கிவிட்டது. மற்றபடி இந்த பைக்கின் தோற்றத்திலும் அளவுகளிலும் எந்த மாறுதல்களையும் ராயல் என்ஃபீல்டு செய்துவிடவில்லை. 6 கலர் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளிலும் அதே நிலைதான்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

BS-6 இன்டர்செப்டர் 650 பைக்கில் இருக்கும் 647.95சிசி ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, BS-4 மாடல் போலவே 46.8bhp பவர் மற்றும் 5.23kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதிகபட்ச பவர் வெளியாகும் ஆர்பிஎம் (7,150rpm) மற்றும் இன்ஜின் ஐடிலிங் ஆர்பிஎம் (1,300rpm) ஆகியவற்றைத் தாண்டி, இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் - இன்லைன் ட்வின் சிலிண்டர் இன்ஜினில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. குறைவான ஆர்பிஎம்மில் நகர்ப்புறங்களில் வசதியாக இயங்கும் இந்த இன்ஜின், நெடுஞ்சாலைகளில் அசால்ட்டாக வேகம் பிடிக்கிறது. இப்படி அம்பியாகவும் அந்நியனாகவும் சூழல் அறிந்து செயல்படும் இந்த ஆயில் கூல்டு இன்ஜின், முன்புபோலவே 4,000-7,000 ஆர்பிஎம் வரை அசத்தலான பவர் டெலிவரியைக் கொண்டுள்ளது. ஸ்லிப்பர் க்ளட்ச், தனது பணியைத் துல்லியமாகச் செய்கிறது. இன்ஜின் முன்பைவிடக் கொஞ்சம் ஸ்மூத்தானது போலவே தோன்றுகிறது. மைலேஜைப் பரிசோதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. ஆனால், அந்த இன்ஜின் சூடு விஷயத்தில், எந்த மாறுதலையும் உணர முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓட்டுதல் அனுபவம்

பைக்கின் மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே தொடர்வதால், BS-6 இன்டர்செப்டர் 650-யை ஓட்டும்போது எந்தப் புதுமையும் தெரியவில்லை. Gabriel டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் கேஸ் ஷாக் அப்ஸார்பர், Bybre ஃப்ளோட்டிங் டிஸ்க் கேலிப்பர், வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்ஸ், 18 இன்ச் Pirelli Phantom Sports Comp டயர்கள், Bosch 9.1 டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்டீல் டியூப்லர் டபுள் க்ரேடில் ஃப்ரேம், சிங்கிள் பீஸ் சீட் & ஹேண்டில்பார் என வழக்கமான பாகங்களே இருக்கின்றன ஹேண்டில்பார் - ஃபுட் பெக்ஸ் பொசிஷன் செய்யப்பட்ட விதம் நைஸ். இளசுகளுக்கும் இது ஓகேவாக இருக்கும். மொத்தத்தில் ஓட்டுதல் ஓகே!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 BS-6

ஆனால் குறுகலான சீட் மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, நீண்ட நேரப் பயணங்கள் கொஞ்சம் அசெளகரியத்தைத் தருகின்றன. ஆக்ஸசரியில் வரும் டூரிங் சீட், இந்தக் குறைப்பாட்டைக் கொஞ்சம் சரிசெய்யலாம். மற்றபடி இந்த எடை அதிகமான பைக், குறைவான Stopping Distance கொண்டிருப்பது ஆச்சர்யம்தான். 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் தொடர்வதால், ஸ்பீடு பிரேக்கர்களுக்கு பயப்படத் தேவையில்லை. 213 கிலோ எடை மற்றும் 1,398மிமீ வீல்பேஸ், பைக்கின் நிலைத்தன்மைக்குத் துணைநிற்கிறது. ஆனால் யூ-டர்ன் அல்லது பார்க் செய்யும்போது, அதிக எடையை உணரமுடிகிறது.

முதல் தீர்ப்பு

தனது மொத்த வித்தையையும், இன்டர்செப்டர் 650 பைக்கில் ராயல் என்ஃபீல்டு இறக்கியிருந்தது தெரிந்ததே! இதனாலேயே க்ளாஸிக் 350-க்கு அடுத்தபடியாக, புதிய ரைடர்களைத் தன்வசம் இந்த நிறுவனத்தால் ஈர்க்க முடிந்தது. BS-4 மாடல் போலவே BS-6 வெர்ஷனின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம் இருக்கிறது. மேலும் சில ப்ராக்டிக்கல் அம்சங்களை இந்த பைக்கில் ராயல் என்ஃபீல்டு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தொடர்ச்சியாக இதன் விலை ஏறிவந்தாலும், இந்த விலைக்கு ஒரு இன்லைன் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட டூரிங் பைக் கிடைப்பது நல்ல டீல்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism