Published:Updated:

பக்கா க்ரூஸர்... தப்பானது எங்கே?

சுஸூகி இன்ட்ரூடர்
பிரீமியம் ஸ்டோரி
News
சுஸூகி இன்ட்ரூடர்

ஃப்ளாப் பைக்: சுஸூகி இன்ட்ரூடர்

டிவிஎஸ்-ஸில் இருந்து பிரிந்த பின்னர், இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கிய சுஸூகிக்கு ஜீயெஸ், ஆக்ஸஸ், ஜிக்ஸர் எனக் கை கொடுத்த பைக்குகளைவிட ஹீட், ஸ்லிங்ஷாட், GS150 R, இனஸுமா என காலை வாரி விட்ட பைக்குகளே அதிகம். இந்த வகுப்பில் புதிய அட்மிஷனாகச் சேர்ந்தது சுஸூகி இன்ட்ரூடர்.

பெருநகரங்களில் கார்ப்பரேட் துறையில் இருப்பவர்கள், குறிப்பாக நடுத்தர வயதினர் வார இறுதியில் ரிலாக்ஸ்டாக ஒரு ரைடு போய் வர ஏற்றவைதான் பட்ஜெட் க்ரூஸர் பைக்குகள். ஜிக்ஸர் தந்த வெற்றிக் களிப்பில் இந்தச் சின்னஞ்சிறிய மார்க்கெட்டுக்குள் சுஸூகி நுழைந்தபோது, என்ன ஆனது எனப் பார்க்கலாம்.

பக்கா க்ரூஸர்... தப்பானது எங்கே?

இந்த டிசைனுக்கு யார் ஒப்புதல் அளித்தது?

ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், புதுப் புது டிசைன்களை உருவாக்குவதுதான் டிசைனர்களின் பணி. அதில் எது வாடிக்கையாளர் மத்தியில் க்ளிக் ஆகும் எனச் சரியாக முடிவெடுத்து, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த வேண்டும். அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, நிறைகுறைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப மாறுதல்களைச் செய்து, கடைசியாகச் சந்தைக்குக் கொண்டு வரவேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. இண்ட்ரூடரின் டிசைனைப் பார்த்ததும் நம் மனதுக்குள் எழும் கேள்வி: “இந்த டிசைனுக்கு யார் ஒப்புதல் அளித்தது?” என்பதுதான்.

முதற்பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருக்கும் சில செல்வராகவன் படங்களைப்போல, நீளமான ஹெட்லைட் மேல் உள்ள சாவித் துவாரம், பெரிதாகத் தோற்றமளிக்கும் 11 லிட்டர் டேங்க் மற்றும் சொகுசான ரைடர் இருக்கை என சுஸூகி M1800 பைக்கின் மினி வெர்ஷன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது இன்ட்ரூடரின் முன்பகுதி. ராட்சச ப்ளாஸ்டிக் பேனல்கள், டெயில் லைட்டைச் சுற்றிய கைப்பிடி, வெளியே துருத்திக் கொண்டிருக்கும் எக்ஸாஸ்ட் என வெவ்வேறு பைக்கில் இருந்து எடுத்து ஒட்ட வைத்தது போல் இருக்கிறது பின்பகுதி. எந்தளவுக்கு என்றால்... இன்டரூடரைப் பின்புறத்தில் இருந்து பார்த்தால், 150சிசி செக்மென்ட்டிலேயே அகலமான டயர்களான 140/60R17 கூட கோழிக்கால் போலத் தெரிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மோட்டார் விகடன் ஃபர்ஸ்ட் ரைடு ரிவ்யூவிலும் இந்த டிசைன் வாடிக்கையாளரை ஈர்ப்பது சந்தேகம்தான் எனச் சொல்லியிருந்தோம்.

பக்கா க்ரூஸர்... தப்பானது எங்கே?

இன்ட்ரூடர் க்ரூஸிங்குக்கு எப்படி?

ஜிக்ஸரில் இருக்கும் அதே 154.9 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இன்ட்ரூடரிலும். க்ரூஸர் பைக்குக்குத் தேவையான மிட்ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸுக்காக, செயின் ஸ்ப்ராக்கெட்டில் கூடுதலாக ஒரு பல்லைச் சேர்த்துள்ளனர் சுஸூகியின் பொறியாளர்கள்.

கூடவே, ப்ளாஸ்டிக் பேனல்களால் எடை கூடியிருந்தது இன்ட்ரூடரில். ஜிக்ஸரைவிட 13 கிலோ கூடுதல் எடை காரணமாக, 115 கிமீ வேகம் வரை ஜிக்ஸரில் சீறிய அதே இன்ஜின், இங்கே 90 கிமீ வேகத்துக்கு விரட்டுவதற்கே பம்முகிறது. இருப்பினும், சுஸூகியின் ட்ரேட்மார்க் பட்டர் ஸ்மூத் கியர்பாக்ஸ் நகருக்குள் ஓட்ட ஆறுதலாக உள்ளது.

பக்கா க்ரூஸர்... தப்பானது எங்கே?

சரியான நீளம் மற்றும் உயரத்தில் உள்ள ஹேண்டில் பார் மற்றும் ஃபுட் ரெஸ்ட்டுகள், உயரமானவர்களும் குள்ளமானவர்களும் சொகுசாக அமரக் கூடிய வகையில் உள்ள 740 மிமீ உயரம் கொண்ட சீட் என பைக்கில் ஏறி அமர்ந்த பின்னர், பைக்கில் நீண்ட தூரம் ரைடிங் செய்ய வேண்டும் எனத் தூண்டியது உண்மைதான். ஆனால் எங்கே கோட்டை விட்டது இன்ட்ரூடர்?

விலைதான் வில்லனா?

சுஸூகியை சில விஷயங்களில் பாராட்டியே ஆக வேண்டும். கட்டாய ABS அமலவாதற்கு முன்பே, சிங்கிள் சேனல் ABS உடன் இருபுறமும் டிஸ்க்குகள் இண்ட்ரூடரில் ஸ்டாண்டர்டாக வந்தது. முதலில் 98,430 என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கார்புரேட்டர் வெர்ஷன், அப்போது விறபனையாகிக் கொண்டிருந்த பஜாஜ் அவென்ஜர் 150-யை விட 16,000 ரூபாய் அதிகமாக இருந்தது.

பின்னர் 1.06 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) கொண்டுவரப்பட்ட Fi வெர்ஷன், அதன் அப்போதைய போட்டியாளரான அவென்ஜர் 180-யைவிட 18,000 ரூபாய் அதிகமாக இருந்தது. 1.25 லட்சத்துக்கு (எக்ஸ் ஷோரூம்) விற்பனையாகும் BS-6 இன்ட்ரூடர், தற்போது அவென்ஜர் 160-யை விட 24,000 ரூபாய் அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால், பஜாஜைத் தவிர வேறு யாரும் இன்டரூடரை சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், இண்ட்ரூடருக்குப் போட்டியாக 3 வருடத்தில் 3 மாடலை மாற்றியிருக்குமா பஜாஜ்?

ஆரம்பத்தில் கூறியதுபோல பட்ஜெட் க்ரூஸிங் செக்மென்ட் சிறியது என்றாலும், தற்போது டொமினார் 250, டிவிஎஸ் விரைவில் வெளியிட இருக்கும் ஸேபெலின் என நாளுக்கு நாள்போட்டி கூடிக் கொண்டே போகிறது. ஆனால், இன்ட்ரூடர் சந்தைக்குள் நுழைந்தபோது, போட்டிக்கு யாரும் இல்லை. ஒரு பக்காவான டிசைனுடன் க்ரூஸிங் செக்மென்ட்டைக் கைப்பற்றும் பொன்னான வாய்ப்பைக் கோட்டை விட்டது சுஸூகி.