Published:Updated:

விலை குறையுமா ஹார்லி டேவிட்சன்?

ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ட்ரம்ப்

ட்ரம்ப் பிடிவாதம்... இறங்கிவரும் இந்தியா...

விலை குறையுமா ஹார்லி டேவிட்சன்?

ட்ரம்ப் பிடிவாதம்... இறங்கிவரும் இந்தியா...

Published:Updated:
ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ட்ரம்ப்

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சுமார் 18 ஆண்டுகளாக இந்திய மாம்பழங்களை... குறிப்பாக, சேலத்து மல்கோவா மாம்பழங்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய, அந்த நாடு தடைவிதித்திருந்தது. மாம்பழத்தைச் சாப்பிடுவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக அதற்குக் காரணமும் சொன்னது. கடந்த 2007-ம் ஆண்டு ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் தனது பைக்குகளை விற்க விரும்பியது. அப்போதுதான் ‘உனக்கு ஹார்லி டேவிட்சன்... எனக்கு மாம்பழம்’ என்ற அடிப்படையில் மாம்பழம் இறக்குமதிக்கான தடையை நீக்கியது அமெரிக்கா.

2009-ம் ஆண்டு இந்தியாவுக்குள் வலம்வந்தன ஹார்லி டேவிட்சன் பைக்குகள்!

விலை குறையுமா ஹார்லி டேவிட்சன்?

ஆனால், உள்ளே வந்த பிறகு நிலைமை மாறியது. பெரியதாக ‘போணி’ ஆகவில்லை. காரணம், அந்த பைக்குகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட 100 சதவிகித சுங்கவரி. கடந்த ஆண்டு இந்த பைக்குகளின் விற்பனை உலகளவில் படுத்துவிட்டது. இதனால், கன்ஸாஸ் நகரில் இருக்கும் தன் தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தியது ஹார்லி. அப்போதுதான் ஹாலிவுட் ஹீரோவைப்போல் களம் இறங்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதற்குப் பின்னால் காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்கா முழுக்க பல லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் கிளப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளப்பிலும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நெட்வொர்க்கை ஓட்டுவங்கியாக மாற்றுவதுதான் ட்ரம்ப்பின் திட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 2018, பிப்ரவரியில், ‘‘இந்தியாவில் எங்களுடைய வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவில் விற்பனையாகும் இந்திய வாகனங்களுக்கும் வரி விதிப்போம்” என்று மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப். தொடர்ந்து இந்திய பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் இதுகுறித்து போனில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான 100 சதவிகித சுங்கவரி, 50 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

ஜூன் 2019-ல் மீண்டும் குடையத் தொடங்கினார் ட்ரம்ப். ‘‘மோடி, நான் கேட்டுக்கொண்டதால் ஹார்லிமீதான வரியை 50 சதவிகிதமாகக் குறைத்தார். ஆனால், அதுவும் போதாது. ஏனென்றால், நாங்கள் இங்கே இந்திய பைக்குகளுக்கு வரியே விதிப்பதில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் 50 சதவிகித வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் கறாராக.

விலை குறையுமா ஹார்லி டேவிட்சன்?

தற்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் எல்ஃபில்டு, டி.வி.எஸ் உள்ளிட்ட பைக்குகளுக்கு அந்த நாடு சுங்க வரி விதிப்பது இல்லை. இதை மனதில்கொண்டே ட்ரம்ப் இவ்வாறு பேசியிருக்கிறார் என்கிறார்கள் வாகன ஏற்றுமதியாளர்கள். ஏற்கெனவே இந்தியாவில் மோட்டார் தொழில் வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கும் நிலையில் ட்ரம்ப்பின் பேச்சை, தொடர்ந்து சுதாரித்திருக்கிறது டெல்லி தலைமை.

இப்படியான சூழலில்தான், சமீபத்தில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் மோடியிடம் ட்ரம்ப் மீண்டும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தப் பயணத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருள்களுக்கு வரியைக் குறைப்பதாகச் சொல்லி வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றது இந்தியா. ஆனால், ஹார்லியை மனதில்கொண்டு, அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார் ட்ரம்ப். மேலும், “விரைவில் நாம் இதைவிடப் பெரிதாக ஒரு வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்’’ என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த நிலையில், ஹார்லி டேவிட்சனுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதற்கு முதல் படியாக `HS Code’ எனப்படும் இறக்குமதி நடைமுறையை மாற்றியமைக்க இருக்கின்றனர். இது நடந்தால்...ஹார்லி டேவிட்சன் மீதான வரி 25 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதுதவிர, எந்த ஒரு வரைமுறையிலும் இதுவரை இல்லாத ‘லைவ் வொயர்’ என்ற புத்தம் புதிய மின்சார பைக்கையும் ஹார்லி டேவிட்சன் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. இந்த பைக்கின் வரியும் 0 முதல் 10 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.

ஹார்லி... இனி ‘ஜோர்’லி!