Published:Updated:

ஹீரோ யெடி.. அடுத்த எலெக்ட்ரிக் ரெடி!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

அறிமுகம்: ஹீரோ யெடி எலெக்ட்ரிக்

ஹீரோ யெடி.. அடுத்த எலெக்ட்ரிக் ரெடி!

அறிமுகம்: ஹீரோ யெடி எலெக்ட்ரிக்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

இப்போதைக்கு இந்திய எலெக்ட்ரிக் டூ–வீலரின் முக்கியமான ஓப்பனர் மற்றும் நாட் அவுட் பேட்ஸ்மேன் என்று பார்த்தால்… அது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம்தான். 14 ஆண்டுகளாக பரவலான சார்ஜிங் நெட்வொர்க்குடன், நாடு முழுவதும் 750–க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ள ஹீரோ எலெக்ட்ரிக், தற்போது இந்தியாவில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான எலெக்ட்ரிக் டூ–வீலர்களைச் சத்தமில்லாமல் விற்பனை செய்திருக்கிறது ஹீரோ எலெக்ட்ரிக்.

ஏற்கெனவே ஆப்டிமா, ஃபோட்டோன், ஃப்ளாஷ், NYX என்று சுமார் 8 மாடல்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக், மார்க்கெட்டுக்குப் புது வரவு ஒன்றையும் இறக்கியிருக்கிறது. அது ‘யெடி!’ (Eddy).

இந்த ஸ்கூட்டரைப் பார்த்தவுடன் - ஸ்டாண்டை எடுத்து, பட்டனை அமுக்கி, ஜம்முனு ஓட்டிச் செல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. அதாவது, டிசைன் அந்தளவு நம்மை இம்ப்ரஸ் செய்கிறது என்று சொல்ல வந்தேன். மிக எளிமையான வடிவமைப்புடன், அற்புதமான பயன்பாட்டினை மையமாகக் கொண்டு வருகிறது ஹீரோ யெடி. தனது பட்ஜெட் ரைடர்களுக்குத் தொந்தரவு இல்லாத சவாரி அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ஸ்கூட்டரை லாஞ்ச் செய்வதாகச் சொல்கிறது ஹீரோ. அப்படி என்ன தொந்தரவு இல்லாத பயணம்… பார்க்கலாம்!

இது பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் இல்லை. சிறிய தூரம் பயணிப்பதற்கு ஏதுவாக, முக்கியமாகப் பெண்களை மையப்படுத்தி இந்த ஸ்கூட்டரைச் செதுக்கி இருக்கிறது ஹீரோ. இதில் இருப்பது 51.2V/30Ah பவர் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இருக்கிறது. 250W கொண்ட BLDC எலெக்ட்ரிக் மோட்டாரில், பெரிய டாப் ஸ்பீடெல்லாம் எதிர்பார்க்க முடியாது. 25 கிமீதான் இதன் அதிகபட்ச வேகம். அதனால், இந்த எடி ஸ்கூட்டருக்குப் பதிவு உரிமம்( RC) தேவையில்லை. யெடியை ஃபுல் சார்ஜ் செய்தால், 88 கிமீ வரை செல்லலாம் என்கிறது ஹீரோ. ஃபுல் சார்ஜிங்குக்கு 4 - 5 மணி நேரம் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் டூ-வீலர், பல சுவாரஸ்யமான புதிய அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. அதில் முதல் விஷயமாக, ‘ஃபைண்ட் மை பைக்’ என்றொரு வசதியைச் சொல்லலாம். மால்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றில் பார்க்கிங் செய்துவிட்டு, ஸ்கூட்டரை ‘கஜினி’ சூர்யா மாதிரி தேடிக் கொண்டிருப்பார்கள். இதில் GPS ட்ராக்கிங் மூலம் ஸ்கூட்டரை எங்கே நிறுத்தி உள்ளோம் என்பதை எளிமையாக மொபைலில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ யெடி.. அடுத்த எலெக்ட்ரிக் ரெடி!

இரண்டாவது சிறப்பம்சமாக ‘இ-லாக்’. இதை நாம் வாடகை பைக்கில் பார்த்திருப்போம். அதாவது, மொபைல் மூலம் ஸ்கூட்டரை லாக் செய்யும் முறை. ஸ்மார்ட் போன் மூலம் எங்கிருந்து வேணாலும் ஸ்கூட்டரை லாக்/அன்லாக் செய்து கொள்ளலாம். அடுத்த சிறப்பம்சமாக, ரிவர்ஸ் மோடு. மிக லேசான பைக்கையே பள்ளத்தில் இருந்து ரிவர்ஸில் வெளியே எடுக்க நல்ல தொடை பலம் வேண்டும். எடியில் அந்தக் கவலை இல்லை. ரிவர்ஸ் மோடைப் பயன்படுத்தி வண்டியை இழுக்கத் தேவையில்லை; ஓட்டியே செல்லலாம் ! மற்றபடி, கார்களில் இருப்பதுபோல் ஃபாலோ மீ ஹெட்லாம்ப், எல்இடி ஹெட்லைட்ஸ், பெரிய பூட் ஸ்பேஸ், ட்யூப்லெஸ் டயர்கள், 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற பிராக்டிக்கல் வசதிகளுடனும் வருகிறது ஹீரோ எடி. பேட்டரி இல்லாமல் இதன் எடை 60 கிலோதான் என்பதால், எளிதாகக் கையாலாம் எடியை.

ஹீரோ எடி, மஞ்சள் மற்றும் நீலம் என இரண்டு கலர்களுடன் களமிறங்குகிறது. இல்லத்தரசிகள் மற்றும் மாணவிகளுக்கு இந்தக் கலர் நிச்சயம் பிடிக்கும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ₹72,000 என்று ஹீரோ நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் சேர்ந்து, ‘SBI ஈஸி ரைடு லோன்’ என்றொரு தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பெண்கள் மற்றும் பொறுமைசாலிப் பார்ட்டிகளுக்கு, ஹீரோவில் அடுத்த ஸ்கூட்டர் ரெடி!

ஹீரோ யெடி.. அடுத்த எலெக்ட்ரிக் ரெடி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism