கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இது ஹைடெக் ப்ளெஷர் ப்ளஸ்!

ஹீரோ ப்ளெஷர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ ப்ளெஷர்

ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோ ப்ளெஷர்

இது ஹைடெக் ப்ளெஷர் ப்ளஸ்!

எக்ஸ்பல்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் போலவே ப்ளெஷர் ப்ளஸ்ஸிலும் கொஞ்சம் அப்டேட் செய்யப்பட்ட புதிய வேரியன்ட் ஒன்றைக் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது ஹீரோ. ஏற்கெனவே, LX, VX மற்றும் ZX ஆகிய வேரியன்ட்கள் ப்ளெஷர்பிளஸ்ஸில் இருக்க புதிதாக XTec என்ற வேரியன்டை அறிமுகப்படுத்தியது. இந்த நான்கு வேரியன்ட்களில் ஹை-எண்ட் வேரியன்ட் என்றால் அது தற்போது வெளியாகியிருக்கும் XTec தான். என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கிறது இந்தப் புதிய வேரியன்ட்?

இதன் செக்மென்ட்டிலேயே முதல் முறையாக ப்ரொஜக்டர் எல்இடி ஹெட்லைட்டுகளைப் பெறுகிறது XTec வேரியன்ட். இது 25% அதிக சக்தியுடன் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஹீரோ. ஸ்டைலிங்கிற்காக கண்ணாடிகள், ஹேண்டில்பார், பேக்ரெஸ்ட், எக்ஸாஸ்ட் மற்றும் ஃபெண்டர்களில் க்ரோமைச் சேர்த்திருக்கிறது ஹீரோ. இது என்ட்ரி லெவல் ஸ்கூட்டரான ப்ளஷருக்கு ஒரு ப்ரீமியம் லுக்கைக் கொடுக்கிறது என்று சொல்லலாம்.

இதனுடன் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதி, புளூடூத் கனெக்டிவிட்டி யுடன் கூடிய டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளையும் பெறுகிறது XTec வேரியன்ட். புளூடூத் கனெக்டிவிட்டி இருப்பதால் போன் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட்களை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமே நம்மால் பெற முடியும். i3S எனப்படும் ஸ்டாப்-ஸ்டார்ட் டெக்னாலஜியையும் இந்த XTec வேரியன்ட்டில் கொடுத்திருக்கிறது ஹீரோ. ஸ்டைலிங் வரிசையில் XTec வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஜூபிலன்ட் மஞ்சள் கலர் ஸ்கீமையும் கொடுத்திருக்கிறது ஹீரோ.

இது ஹைடெக் ப்ளெஷர் ப்ளஸ்!மேற்கூறிய சில வசதிகள் மற்றும் காஸ்மெட்டிக் மாற்றங்களைத் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இன்ஜினிலும் எந்த மாற்றமும் இல்லை. 8bhp பவரையும், 8.7Nm டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடிய அதே 110சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் XTec வேரியன்ட்டிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த அப்டேட்களுடன் 69,500 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது ப்ளெஷர் ப்ளஸ் XTec. இது இதற்கு முந்தைய வேரியன்ட்டான ZX-ஐ விட 3,100 ரூபாயும், VX-ஐ விட 5,300 ரூபாயும், தொடக்க நிலை வேரியன்ட்டான LX-ஐ விட 7,600 ரூபாயும் அதிகம்.