Published:Updated:

ஸ்ப்ளெண்டர் செமயா மாறிடுச்சு!

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்–டெக்
பிரீமியம் ஸ்டோரி
ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்–டெக்

அறிமுகம்: ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்–டெக்

ஸ்ப்ளெண்டர் செமயா மாறிடுச்சு!

அறிமுகம்: ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்–டெக்

Published:Updated:
ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்–டெக்
பிரீமியம் ஸ்டோரி
ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்–டெக்
ஸ்ப்ளெண்டர் செமயா மாறிடுச்சு!

கம்யூட்டிங் பைக்குகள் வேற லெவலில் போய்க் கொண்டிருக்க, ரொம்ப ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஸ்ப்ளெண்டரில் பட்டன் ஸ்டார்ட்டே வந்தது. ஆனால், இப்போது ஸ்ப்ளெண்டர் வேற லெவல்! காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வந்தால்தான் நிலைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்ட ஹீரோ, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸில் ஏகப்பட்ட வசதிகளுடன் X-TEC என்றொரு ஃபேஸ்லிஃப்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது.

பழசில் ஃப்யூல் மீட்டர், ஓடோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர் மட்டும் கொண்ட அனலாக் கன்சோல்தான் இருக்கும். புது X-TEC மாடலில் டிஜிட்டல் மீட்டர்; அதுவும் புளூடூத் கனெக்டிவிட்டியோடு. இதில் மொபைல் அழைப்புகள், ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், இரண்டு ட்ரிப் மீட்டர்கள் என எல்லாமே உண்டு. சைடு ஸ்டாண்ட் அலெர்ட்டும் கட்ஆஃப்பும் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஸ்ப்ளெண்டர் X-TEC–க்கில். இரண்டு வேரியன்ட்களிலுமே யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உண்டு.

கவுலில் இருக்கும் எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸ், கறுப்பு நிற அலாய் வீல்கள், புது கிராஃபிக்ஸ் போன்றவை அவுட்லுக்கில் பெரிய மாற்றம். ஆனால் ஹெட்லைட், அதே ஹாலோஜன் பல்புதான்.

இன்ஜின், சஸ்பென்ஷனைப் பொருத்தவரை அதே ஸ்ப்ளெண்டர் i3S வேரியன்ட்தான். 7.9bhp பவரும், 8.05Nm டார்க்கும் கொண்ட 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினும், அதே 4 ஸ்பீடு கியர்பாக்ஸும்தான். i3S ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் உண்டு.

இது 4 கலர்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு மாடலைவிட சுமார் 3,00 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில், அதாவது 72,900 ரூபாய்க்கு இதை இறக்கியிருக்கிறது ஹீரோ. ப்ளாட்டினா, ரேடியான், CD110 டீலக்ஸ் போன்றவற்றுக்குப் போட்டியாக மார்க்கெட்டில் இனிமேலும் கலக்கும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் X-TEC.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism