கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எக்ஸ்ட்ரீமும் மாறிடுச்சு!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் பைக்குகளில் சில பல மாற்றங்களைச் செய்து அப்டேட்டட் வெர்ஷன்களைத் கடந்த மாதம் தொடர்ந்து அறிமுகப்படுத்தியது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். ஹீரோ எக்ஸ்பல்ஸின் 4V வெர்ஷன், ஹீரோ ப்ளெஷரின் XTec வெர்ஷன் ஆகியவற்றுடன் எக்ஸ்ட்ரீம் 160R-ன் ஸ்டெல்த் எடிஷனையும் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது ஹீரோ.

காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் சின்னச் சின்ன வசதிகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்டெல்த் எடிஷனில் பெரிய மாற்றம் என்றால் அது, பைக்குக்குப் புதிய லுக்கைக் கொடுக்கும் மேட் பிளாக் நிறமும், 3D வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் பிராண்ட் லோகோவும்தான். அதனுடன் ‘Stealth’ என்ற பேட்ஜையும் பிராண்ட் லோகோவுடன் இணைத்திருக்கிறது ஹீரோ. இந்த வெளிப்புற மாற்றத்துடன் இன்டகிரேட்டட் யுஎஸ்பி சார்ஜர் வசதியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது. ஸ்டாண்டர்டான மாடலில் இருக்கும் எல்சிடி டிஸ்ப்ளேவில் 5 லெவல் வரை பிரைட்னஸை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியும், கூடவே கியர் பொசிஷன் இன்டிகேட்டரையும் புதிய ஸ்டெல்த் எடிஷனில் சேர்த்திருக்கிறது ஹீரோ. இது, தவிர வேறு எந்த மாற்றமும் இந்த ஸ்டெல்த் எடிஷனில் இல்லை.

எக்ஸ்ட்ரீமும் மாறிடுச்சு!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ன் ஹை-எண்ட் மாடலைக் கொண்டுதான் இந்த ஸ்டெல்த் எடிஷனை ஹீரோ உருவாக்கியிருக்கிறது என்பதால், முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக்குகளே கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இன்ஜினிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதால், இரண்டு வால்வுகள் கொண்ட 163சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின்தான் இந்த ஸ்டெல்த் எடிஷனிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 15.2bhp பவரையும், 14Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் இந்த இன்ஜின் 0-60 கிமீ வேகத்தை 4.7 நொடிகளில் எட்டுகிறது.

ஸ்டாண்டர்டான வேரியன்ட்டில் இருக்கும் எல்இடி விளக்குகள், சைட் ஸ்டாண்டு இன்ஜின் கில் வசதி ஆகியவை இந்த எடிஷனிலும் கொடுக்கப்பட்டிருக் கின்றன.

ஸ்டாண்டர்டான டிஸ்க் பிரேக் வேரியன்ட்டைவிட 2,000 ரூபாய் அதிகமாக 1,16,600 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ஸ்டெல்த் எடிஷன். இது டிரம் ப்ரேக்குகள் கொண்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ஐ விட 5,000 ரூபாய் அதிகம்.

எக்ஸ்ட்ரீமும் மாறிடுச்சு!