Published:Updated:

என்னது… ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருதா? அதுவும் சூப்பர் வசதியோடு?!

ஆக்டிவா எலெக்ட்ரிக்

ஹோண்டாவில் இருந்து வரும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கப் போகிறது இ–ஆக்டிவா. ஏற்கெனவே பென்லி எனும் ஸ்கூட்டர் அல்லது PCX எனும் மேக்ஸி ஸ்கூட்டர்தான் இந்தியா மார்க்கெட்டுக்கு வரலாம் என்றிருந்த நிலையில் ஆக்டிவா எலெக்ட்ரிக்கைக் கொண்டு வரவிருக்கிறது ஹோண்டா.

என்னது… ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருதா? அதுவும் சூப்பர் வசதியோடு?!

ஹோண்டாவில் இருந்து வரும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கப் போகிறது இ–ஆக்டிவா. ஏற்கெனவே பென்லி எனும் ஸ்கூட்டர் அல்லது PCX எனும் மேக்ஸி ஸ்கூட்டர்தான் இந்தியா மார்க்கெட்டுக்கு வரலாம் என்றிருந்த நிலையில் ஆக்டிவா எலெக்ட்ரிக்கைக் கொண்டு வரவிருக்கிறது ஹோண்டா.

Published:Updated:
ஆக்டிவா எலெக்ட்ரிக்

ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஆக்டிவாதான் செம ஆக்டிவ். மாசத்துக்கு சுமார் 1.50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது ஹோண்டா. டாப் செல்லிங் ஸ்கூட்டர் செக்லிஸ்ட்டில், ‘என்னைச் சமாளிக்கவே முடியலேல்ல’ என்று மற்ற ஸ்கூட்டர்களைப் பார்த்துக் கெத்து காட்டுவது ஆக்டிவாவின் ஸ்டைல்.

சூட்டோடு சூட்டாக, அப்படியே எலெக்ட்ரிக்கிலும் கால் வைத்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறது ஹோண்டா. ஆம்! ஆக்டிவாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லாஞ்ச் செய்ய இருக்கிறது HMSI (Honda MotorCycle and Scooters India).

முதலில் ஹோண்டாவில் இருந்து PCX என்றொரு மேக்ஸி ஸ்கூட்டரைக் கொண்டு வருவதாகத்தான் ஐடியா இருந்தது. காரணம், 2018 ஆட்டோ எக்ஸ்போவிலேயே PCX கான்செப்ட் ஸ்கூட்டரைக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஆனால், இப்போது ஆக்டிவாவுக்கு இருக்கும் மார்க்கெட்டை வைத்துப் பார்க்கும்போது, தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆக்டிவா பேட்ஜிலேயே கொண்டு வர முடிவு செய்திருக்கிறதாம் ஹோண்டா. HMSI–ன் தலைவர் Atsushi Ogata, இதை உறுதிப்படுத்தியும் விட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

PCX
PCX

அதேபோல், ஹோண்டாவில் இப்போதைக்கு ‘பென்லி இ’ என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் டெஸ்ட்டிங்கில் இருப்பது பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ARAI (Automotive Research Association of India)–வில் இதை டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறது ஹோண்டா. ஓகே! இப்போ ஆக்டிவா எலெக்ட்ரிக் பற்றிப் பார்க்கலாம்.

சும்மா எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரினு எலெக்ட்ரிக் மார்க்கெட்டில் ‘வந்தா சும்மா வரக் கூடாது’ என்று ஸ்வாப்பபிள் பேட்டரி (Battery Swapping) ஆப்ஷனோடு வர இருக்கிறது ஆக்டிவா. இப்போதைக்கு இந்தியாவில் ‘பவுன்ஸ்’ எனும் நிறுவனம்தான், தனது இன்ஃபினிட்டி ஸ்கூட்டருக்கு ஸ்வாப்பபிள் பேட்டரி வசதியை முதன் முதலாகக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகு, ஹோண்டாதான் இந்தி வசதியைக் கொண்டு வரப் போகும் இரண்டாவது நிறுவனம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது, உங்கள் காலியான பேட்டரியைக் கழற்றி வைத்துவிட்டு, சார்ஜிங் ஸ்டேஷன்களில் உள்ள சார்ஜ் ஃபுல்லான பேட்டரியை மாற்றிக் கொண்டு கிளம்பலாம். இதனால், ‘வண்டி எவ்வளவு தூரத்தில் நிக்குமோ’ என்று கவலைப்படத் தேவையில்லை. ஸ்வாப்பபிள் பேட்டரி ஆப்ஷன் கொண்ட நிறுவனத்தில் இன்னொரு வசதி என்னவென்றால், ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் பேட்டரி இல்லாமலே வாங்கிக் கொள்ளலாம். பேட்டரிதான் ஒரு வாகனத்தின் பெரிய செலவு என்பதால், ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை மிகக் கணிசமாகக் குறையும். உதாரணத்துக்கு, ஆக்டிவா எலெக்ட்ரிக்கை 1 லட்ச ரூபாய்க்கு பொசிஷன் செய்திருந்தால்… நாம் இதை பேட்டரி இல்லாமல் சுமார் 70,000 ரூபாய்க்குக்கூட வாங்கிக் கொள்ளலாம். கூடவே சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தோடும் வருகிறது ஹோண்டா.

பேட்டரி தயாரிப்புக்கு என 135 கோடியில் பெங்களூருவில் ஒரு சப்ஸிடரி நிறுவனத்தைப் பதிவு செய்திருக்கிறதாம் ஹோண்டா. இதில் தயாராகும் பேட்டரிகள்தான் ஹோண்டாவின் டூ–வீலர்கள் மற்றும் ஆட்டோக்களுக்குப் பொருத்தப்பட இருக்கின்றன.
Battery Swapping System
Battery Swapping System

அநேகமாக, ஆக்டிவா எலெக்ட்ரிக்கின் ரேஞ்ச் – சுமார் 150 கிமீ இருக்கும் அளவுக்கு இதில் பவர்ஃபுல் பேட்டரியைப் பொருத்த இருக்கிறதாம் ஹோண்டா. மற்றபடி வசதிகளைப் பொருத்தவரை டச் ஸ்க்ரீன், ஜியோஃபென்சிங், எல்இடி லைட்ஸ், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவை இருந்தால்தான் இப்போதெல்லாம் மரியாதை. அதனால், காலத்துக்கு ஏற்ப சில பல தொழில்நுட்ப வசதிகளோடும் வர இருக்கிறது ஆக்டிவா எலெக்ட்ரிக். மற்றபடி இ-ஆக்டிவாவைப் பற்றித் தகவல்கள் எதையும் சொல்லவில்லை ஹோண்டா.

ஓலா, ஏத்தர், பவுன்ஸ், ஹீரோ, பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் போட்டி காத்திருக்கு! ஆனால், இந்த இ–ஆக்டிவா சாலைகளுக்கு வர அடுத்த புத்தாண்டு ஆகும் என்கிறது ஹோண்டா.