Published:Updated:

சிக்கனமான ஸ்ட்ரீட் பைக்கா? சீறும் ஸ்போர்ட்ஸ் பைக்கா?

ஹோண்டா CB300F
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா CB300F

ஃபர்ஸ்ட் ரைடு: ஹோண்டா CB300F

சிக்கனமான ஸ்ட்ரீட் பைக்கா? சீறும் ஸ்போர்ட்ஸ் பைக்கா?

ஃபர்ஸ்ட் ரைடு: ஹோண்டா CB300F

Published:Updated:
ஹோண்டா CB300F
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா CB300F
சிக்கனமான ஸ்ட்ரீட் பைக்கா? சீறும் ஸ்போர்ட்ஸ் பைக்கா?

ஹோண்டா என்றால் வெறும் ஆக்டிவா, யூனிகார்ன், ஹார்னெட் இல்லை. ஹோண்டாவுக்கு இந்தியாவில் இரண்டு ஷோரூம்கள் உண்டு. ஒன்று ஹோண்டா டூ வீலர்ஸ் மற்றொன்று ஹோண்டா பிக் விங். அதாவது பெரிதா யோசிப்பவர்கள், பறக்க நினைப்பவர்களுக்கான பெரிய சிறகுகள். 500cc இன்ஜினுக்கு அதிகமாக இருந்தால்தான் பிக் விங் ஷோரூமுக்குள் அனுமதி என்றிருந்த ஹோண்டாவில், சின்னதாக வந்திறங்கியது H'Ness. இப்போது அதே இன்ஜின் அளவில் வந்து சேர்ந்திருக்கிறது CB300F.

வழக்கமாக ஹோண்டா, தனது பிக் விங் பைக்குகளுக்குச் சர்வதேசச் சந்தையில் இருந்து சில பல மாற்றங்களுடன் ஒரு இன்ஜினை இறக்கும். இதுவும் அப்படித்தான் என்று நினைத்தால், அதுதான் இல்லை. CB300F மாடலில் வரும் 293.52cc இன்ஜின், இந்திய ரைடர்களை மனதில் வைத்துத் தாயரிக்கப்பட்டதாம். 24.1bhp பவர் மற்றும் 25.6Nm டார்க் தருகிறது இது.

சிக்கனமான ஸ்ட்ரீட் பைக்கா? சீறும் ஸ்போர்ட்ஸ் பைக்கா?
சிக்கனமான ஸ்ட்ரீட் பைக்கா? சீறும் ஸ்போர்ட்ஸ் பைக்கா?

ஆக்ரோஷமான ஒரு ஸ்ட்ரீட் பைக் போலத் தயாரிக்கப்பட்டிருக்கிறது CB300F. டேங்க், ஹெட்லைட், பாடி பேனல் என எல்லா இடங்களிலும் கூர்மையான டிசைன் ஆக்ரோஷமான தோற்றத்தையே தருகிறது. தங்க நிறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க், அகலமான ஹேண்டில்பார், பெரிய பெட்ரோல் டேங்க், ஸ்டிக்கரிங், அகலமான சீட், கிராப் ரயில் உடன் வசதியான பில்லியன் சீட் என இதன் டிசைன் பிராட்டிக்கலாக இருக்கிறது. இந்த டிசைன் ஹோண்டாவின் பெரிய பைக்குகளை உள்வாங்கி வடிவமைக்கப்பட்டது என்கிறார்கள் டிசைனர்கள்.

டேங்க் ஷ்ரவுட் மற்றும் ஸ்ப்ளிட் சீட் ஸ்போர்ட்ஸ் பைக் ஃபீல் கொடுக்கலாம். பைக்கின் பல பகுதிகளை மேட் பிளாக் நிறத்தில் கொடுத்திருப்பதும், டிசைனில் ஒரு ப்ளஸ். என்னதான் டிசைனில் பல வேலை பார்த்திருந்தாலும், ஹார்னெட் வாடை அடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர் எல்லாமே LED. ஃபுல் டிஜிட்டல் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அதில் மைலேஜ் இண்டிகேட்டர் மற்றும் புளூடூத் கனெட்டிவிட்டியும் உண்டு.

சீட் உயரம் 789மிமீ மட்டுமே! 5.5 அடிக்கும் குறைவான உயரம் இருப்பவர்கள் வசதியாகக் கையாளலாம். எடையும் வெறும் 153 கிலோ என்பதால், ஹேண்ட்லிங் சுலபம். அது மட்டுமில்லை; குறைவான எடை பெர்ஃபார்மன்ஸுக்கு உதவுகிறது. 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், 177 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஸ்ட்ரீட் பைக்கிற்குப் போதுமானது. பெரிய ரேடியல் டயர்கள் பைக்கின் ஹேண்ட்லிங் மற்றும் பாதுகாப்புக்குச் சூப்பர். டூயல் சேனல் ஏபிஎஸ் மட்டுமில்லை; டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. CB300F பைக்கில் பாதுகாப்பு வசதிகள் பக்கா!

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் செம ஸ்மூத். இதற்கு முக்கிய காரணம் க்ளட்ச். லைட்டான க்ளட்ச் என்பது டிராஃபிக்கில் பைக்கைச் செலுத்தும்போது சிரமமில்லாத ரைடிங்கைத் தருகிறது. நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும்போதும், தேவையென்றால் யோசிக்காமல் கியரைக் குறைக்கலாம். பெரும்பாலான இன்ஜின் பிரேக்கிங்கை ஸ்லிப்பர் க்ளட்சே கவனித்துக் கொள்கிறது.

சிக்கனமான ஸ்ட்ரீட் பைக்கா? சீறும் ஸ்போர்ட்ஸ் பைக்கா?
 ஷார்ப்பான ஹெட்லைட் டிசைன், செம ஸ்போர்ட்டி!
ஷார்ப்பான ஹெட்லைட் டிசைன், செம ஸ்போர்ட்டி!
 24.1bhp பவர் என்பது குறைவுதான். 
இன்னும் வேண்டும்
24.1bhp பவர் என்பது குறைவுதான். இன்னும் வேண்டும்
 குட்டையான எக்ஸாஸ்ட், ஸ்போர்ட்டி ஃபீல் தருகிறது.
குட்டையான எக்ஸாஸ்ட், ஸ்போர்ட்டி ஃபீல் தருகிறது.
 நெகட்டிவ் எல்சிடி டிஸ்ப்ளே அருமை!
நெகட்டிவ் எல்சிடி டிஸ்ப்ளே அருமை!
 ஸ்விட்ச்களின் தரம் அருமை
ஸ்விட்ச்களின் தரம் அருமை
 இண்டிகேட்டருக்கு மேலே ஹார்ன். பழக வேண்டும்.
இண்டிகேட்டருக்கு மேலே ஹார்ன். பழக வேண்டும்.

ஜிக்ஸ்ர், டியூக் போன்ற 250cc பைக்குகளை ஒப்பிடும்போது பவர் குறைவு. 100 கி.மீ வேகம் வரை எந்த வைப்ரேஷனும் இல்லை. அதற்கு மேல் செல்லும்போது மிகவும் குறைவாக ஹேண்டில்பார் மற்றும் ஃபுட்பெக்கில் வைப்ரேஷன் தெரிகிறது. அதுவும் ரைடிங்கைப் பாதிக்கும் அளவில் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லை. இதுவே ஹோண்டா ஹைனெஸ் இன்ஜினை ஒப்பிடும்போது ஹைனெஸ்ஸில் 110 கிமீ வரை செல்லும்போது, துளிகூட அதிர்வுகளை உணர முடியவில்லை.

எடை குறைவாக இருப்பதாலும், குறைவான வேகத்தில் அதிக டார்க் கிடைத்துவிடுவதாலும் பிக்அப் அருமை. 125 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் க்ரூஸ் செய்வது சுலபமாகவே இருந்தது. ரைடிங் பொசிஷன் ஹைனெஸ்போல் அப்ரைட்டாக இல்லாமல், அதே நேரத்தில் மிகவும் ஸ்போர்ட்டியாகவும் இல்லாமல் தளர்வான ஒரு பொசிஷனில் தொய்வில்லாமல் ஓட்ட முடிகிறது. அகலமான ஹேண்டில்பார், ரைடர் சீட் இன்னும் ரிலாக்ஸ்! லாங் ரைடுக்கு வசதிதான்.

டிராக்ஷன் கன்ட்ரோல் தேவை என்றால் ஆஃப் செய்துகொள்ளும் வசதியையும் ஹோண்டா கொடுத்திருக்கிறது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் இருக்கும்போது, பைக்கின் ஆரம்ப பிக்அப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இதுவே டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆஃப் செய்து பைக்கைக் கிளப்பினால் பவர் மொத்தமும் பிரித்துக்கொண்டு வெளியே வருகிறது.

ஹேண்டில்பாரில் இருக்கும் அனைத்து ஸ்விட்ச்களும் ப்ரீமியம் தரம். வழக்கமாக இன்டிகேட்டருக்குக் கீழே ஹார்ன் இருக்கும். ஹோண்டாவின் சமீபத்திய பைக்குகளில் இது தலைகீழ். முதலில் ஓட்டும்போது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்றாலும், சீக்கிரமே பழகிவிட்டது. தரம் மற்றும் ரைடிங்கில் அசத்திவிட்டது ஹோண்டா. தனித்துவம் எதுவும் இல்லை என்றாலும் ஒரு தரமான ஸ்ட்ரீட் பைக்காகவும், அதே நேரத்தில் லாங் ரைடுக்கு எடுத்துச்செல்லக்கூடிய பைக்காகவும் CB300F கவனம் ஈர்க்கிறது.

ஹோண்டா பைக் என்று வரும்போது இது நல்ல பெர்ஃபாமன்ஸ்தான். ப்ரீமியம், வசதிகள், ஸ்மூத்தான ரைடு குவாலிட்டி எல்லாமே CB300F மாடலின் மதிப்பை உயர்த்துகிறது. ஆனால், போட்டியாளர்களை ஒப்பிடும்போது, இந்த பெர்ஃபாமன்ஸ் சந்தையில் விலைபோகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்ஜின், ஆயில் கூல்டு மட்டுமே! விலை ப்ரீமியமாக இருக்கிறது என்பதால், லிக்விட் கூல்டு இன்ஜின் கொடுத்திருக்கலாம். சிறிய பள்ளங்களில் இதன் சாஃப்ட் செட்டப் சஸ்பென்ஷன் நன்றாக இருக்கிறது என்றாலும், பைக்கை வேகமாகக் கையாளும்போது, கொஞ்சம் தடுமாற்றத்தைத் தருகிறது. 2011-ம் ஆண்டு ஹோண்டா CBR 250-யைக் கொண்டுவரும்போது இருந்த அதே இன்ஜின் பவர் மற்றும் டார்க்தான் 2022ல் வந்திருக்கும் CB300Fல் இருக்கிறது. நிச்சயம் அப்கிரேட் தேவை. இந்த மாடலுக்கு Furious and Fast என்று விளம்பரப்படுத்துவது வெறும் விளம்பர உத்தியே!

ஹோண்டா CB300F இரண்டு வேரியன்ட்டில் வருகிறது. டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. புளூடூத் இருந்தால் அது டீலக்ஸ் ப்ரோ, இல்லையென்றால் அது டீலக்ஸ். டீலக்ஸ் வேரியன்ட் ரூ.2,25,000 எக்ஸ்ஷோரூம், டீலக்ஸ் ப்ரோ வேரியன்ட் ரூ.2,28,000 எக்ஸ்ஷோரூம் விலை. ப்ரீமியம் பைக் என்பதற்கு ஏற்ப விலையும் ப்ரீமியமாகவே இருக்கிறது.

மொத்தத்தில் சிக்கனமாக ஓட்ட சிட்டி பைக்காகவும், ஹைவேஸில் சீற ஸ்போர்ட்ஸ் பைக்காகவும் இருக்கிறது ஹோண்டா CB300F.