Published:Updated:

எல்லாம் ஓகே... விலைதான்!

ஹோண்டா CB500X
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா CB500X

ஃபர்ஸ்ட் லூக்: ஹோண்டா CB500X

எல்லாம் ஓகே... விலைதான்!

ஃபர்ஸ்ட் லூக்: ஹோண்டா CB500X

Published:Updated:
ஹோண்டா CB500X
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா CB500X

CB500X, ஹோண்டாவின் இந்த பைக்கைப் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். Do-it-all வகையில் உங்கள் அனைத்துத் தேவைகளையும் ஒரு பைக் பூர்த்தி செய்தால், வேண்டாம் என்றா சொல்ல முடியும்? அட்வென்ச்சரஸ் ஆஃப் ரோடிங் பயணமாக இருந்தாலும் சரி; டிராஃபிக்கில் சிட்டி ரைடிங் ஆனாலும் சரி... நான் இருக்கேன் என தம்ப்ஸ் அப் காட்டுகிறது CB500X.

சிம்பிளாகவும், ஃப்ரண்ட்லியாகவும் அனைத்துத் திறன்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் புதிய CB500X எப்படி இருக்கிறது?

அட்வென்ச்சரஸ் ரைடிங்
அட்வென்ச்சரஸ் ரைடிங்

ஹார்ட்வேர் மற்றும் சிறப்பம்சங்கள்:

முதல் பார்வையிலேயே - பிரம்மாண்டமாகவும் இல்லாமல், குட்டியாகவும் இல்லாமல் சரியான அளவில் நம்மைக் கவர்கிறது இதன் டிசைன். 830mm சீட் ரொம்ப உயரமாகத் தெரிந்தாலும், ஓரளவுக்கு சொகுசாகவே இருக்கிறது. ஃபினிஷிங் மற்றும் குவாலிட்டி சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், இந்த மாடல் காஸ்ட் கட்டிங் எஃபெக்ட்டில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். டிஎஃப்டி-க்குப் பதிலாக சாதாரண சிறிய எல்சிடி டிஸ்ப்ளேதான் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான தகவல்களைக் காட்டும் வகையில் தான் இந்த எல்சிடி டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிப்டர் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் போன்ற எந்த வசதியும் கொடுக்கப்படவில்லை.

சொகுசுக்கு எந்தக் குறைபாடும் வைக்கவில்லை ஹோண்டா. நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்டும் வகையில், தாராளமான இடவசதியுடைய சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விண்ட் ஸ்கிரீன் தேவையில்லை என்றால், கழற்றிக் கொள்ளலாம்.

47.5bhp பவர் மற்றும் 4.32kgm டார்க்
47.5bhp பவர் மற்றும் 4.32kgm டார்க்

இன்ஜின்:

CB500X - 47.5bhp பவர் மற்றும் 4.32kgm டார்க்கை உற்பத்தி செய்யும் 471சிசி பேரலல் - ட்வின் இன்ஜினைக் கொண்டுள்ளது. எண்கள் சுமாராக இருப்பதாகத் தோன்றினாலும், ஓட்டும்போது வியக்க வைக்கிறது CB500X. 60 கிமீ வேகத்தை எட்டும் முன்பே ஆறாவது கியருக்குச் செல்ல முடிகிறது. பைக்கை ஓட்டும்போது, அதன் சத்தமும், மோட்டாரின் இயக்கமும் கவாஸாகி 650s-ஐ நினைவூட்டுகிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸும் ஸ்மூத்தாக இருக்கிறது. என்ன, குறைவான வேகத்தில் கொஞ்சம் ஜெர்க் ஆகிறது. இன்ஜினில் செய்யப்பட்டிருக்கும் சிறிய மாற்றங்கள் சிறப்பாகவே இருக்கின்றன. அதிகபட்ச ஆர்பிஎம் அளவான 8,750 ஆர்பிஎம் அளவு முறுக்கும்போதுதான் பைக் நன்றாகவே வைப்ரேட் ஆகிறது. வேகமாக கியரை மாற்றி மிட்-ரேஞ்சில் ஓட்டுவது சிறப்பானது. கியரை மாற்றும்போது ஒரு பாசிட்டிவ்வான பீலிங் இருக்கிறது, ஸ்லிப்பர் கிளட்ச், கியரைக் குறைப்பதை ஸ்மூத் ஆக்குகிறது.

181மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 199 கிலோ எடை
181மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 199 கிலோ எடை

ரைடிங்:

பெர்ஃபாமன்ஸுக்கு ஈடுகொடுக்கும் வகையிலேயே சேஸியும் உள்ளது. ஓட்டும்போது பைக்கின் 199 கிலோ எடையை உணர முடியவில்லை. இன்ஜின் வடிவமப்பும், ஈஸியான க்ளட்ச்சும், நகரங்களிலும் ஈசியான பயணத்தை மேற்கொள்ள உதவுகிறது. நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்தில் செல்லும்போது ரிலாக்ஸ்டான உணர்வையே தருகிறது. மோசமான சாலைகளையும் சிறப்பான முறையிலேயே கையாள்கிறது இந்த CB500X-ன் சஸ்பென்ஷன். மிகவும் மேடு பள்ளமான சாலைகளில் ரியர் ஷாக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ரீபவுண்ட் ஆகிறது. வளைவு நெளிவான சாலைகளிலும், பைக் நன்றாக வளைந்து கொடுப்பதால் வளைவுகளை வேகமாகக் கடக்க முடிகிறது. 181மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், கரடுமுரடான சாலைகளிலும் பைக்குக்கு எந்தச் சேதாரமும் ஆகாகமல் பயணிக்க வைக்கிறது. நார்மலான ரோடு பைக்குகளைவிட மேம்பட்ட விதத்தில் இருக்கிறது இதன் ஓட்டுதல் அனுபவம். ஆனால், முழுமையான அட்வென்ச்சர் பைக்குகளைவிட குறைவாகவே இருக்கிறது.

ஆன்ரோடு விலை சுமார் 7.67 லட்சம்
ஆன்ரோடு விலை சுமார் 7.67 லட்சம்

முதல் தீர்ப்பு:

இந்திய பைக் சந்தைக்கான சிறந்த பைக்குகளில் ஒன்றாக கண்டிப்பாக இதைச் சொல்ல முடியும். முதல் முறையாக அட்வென்ச்சர் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்திய பைக் பிரியர்கள் இதனைக் கண்டிப்பாக விரும்புவார்கள். ஆனால், இதன் விலைதான் நாம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருக்கிறது. இதன் ஆன்ரோடு விலை சுமார் 7.67 லட்சம் வருகிறது. இந்திய வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை சிறப்பம்சங்களுடன் சேர்த்து விலையும் மிகவும் முக்கியம். குறைவான விலையில் நிறைவான தரம் என்பதையே இந்திய மக்கள் எதிர்பார்ப்பார்கள். விலைக்கேற்ற பைக்காக இதனைக் குறிப்பிட முடியாது. இன்னும் கொஞ்சம் சேர்த்துச் செலவழித்தால் கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக்கையே வாங்கி விடலாம் எனும்போது, இதனை வாங்குவதற்கான தேவை என்ன என்று தோன்றுகிறது. ஒருவேளை ஹோண்டா இதன் விலையைக் குறைக்கும் எனும்பட்சத்தில் கண்டிப்பாக CB500X-க்கு ஒரு தம்ஸ் அப் காட்டலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism