Published:Updated:

கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!

IBW 2019
பிரீமியம் ஸ்டோரி
IBW 2019

IBW 2019

கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!

IBW 2019

Published:Updated:
IBW 2019
பிரீமியம் ஸ்டோரி
IBW 2019

ந்தியாவின் பிரமாண்டமான மோட்டார் பைக் கும்பமேளா - இந்தியன் பைக் வீக் (IBW). இந்த ஆண்டு டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் கோவாவில் நடக்கிறது IBW. 6-வது முறையாக நடைபெறும் இந்தத் திருவிழாவுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமில்லை, வெளிநாடுகளில் இருந்தும் பைக்கர்கள் வருவார்கள்.

கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!
கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!

5,000 பைக்கர்கள் ஒன்றுகூடும் இந்த விழாவில், பல புதிய பைக்குகள் காட்சிக்கு வைக்கப்படும். அதில் சில பைக்குகள் அறிமுகமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் இப்போது புதிதாக இணைந்திருக்கும் ஹஸ்க்வெர்னா நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் KTM 390 ADV காட்சிக்கு வைக்கப்படலாம் அல்லது விற்பனைக்கு வரலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ரூஸர் பைக்கான ட்ரையம்ப் ராக்கெட் 3 பைக்கை, இங்கேதான் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப் போகிறார்கள். பைக் வீக் என்றாலே, ரைடிங் சார்ந்த போட்டிகள் இருக்கும் என்பது தெரிந்த விஷயமே. ஆனால், அதைத் தாண்டி பயணம், இசை, சாகசங்களும் இந்த இந்தியன் பைக் வீக்கில் இருக்கும்... அதுவும் உலகத்தரத்தில் என்பது இதன் சிறப்பு. 4 விதமான அட்வென்ச்சர் போட்டிகள்/பயிற்சிகள் முதல் முறையாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

IBW 2019
IBW 2019

சர்வதேச அளவில் பைக் ரைடிங்கில் பிரபலமான ராக் பகரோஸ் போன்ற யூடியூப் ஸ்டார்ஸ் மட்டுமில்லாமல், அலெக்ஸ் சாக்கோன், மரல் யஸார்லோ, தீபக் காமத், சுகேஷ் விஷ்வா போன்ற தீவிர பயணிகளையும் இங்கே சந்திக்கலாம். அவர்களின் அனுபவங்களைக் கேட்கலாம், உரையாடலாம். நிறைய மாடிஃபை செய்யப்பட்ட பைக்குகள், பைக் சார்ந்த டேட்டூ, கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்கள், ஸ்டிக்கர்கள் எனக் கலை சார்ந்த விஷயங்களை இங்கே வாங்கலாம். அது மட்டுமில்லை, இந்தியாவில் இருக்கும் பிரபலமான ரைடிங் கிளப்கள், ரைடர்கள், பைக் நிறுவனங்கள், ஆக்சஸரிஸ் விற்பனையாளர்கள் எனப் பல பேர் கடைவிரித்திருப்பார்கள். கொண்டாட்டம் உறுதி.