Published:Updated:

``செஸ்ஸில் சாதிக்கணும்னு நினைச்சேன்… இப்போ ஆட்டோமொபைலில்!”

சிவமாறன்
பிரீமியம் ஸ்டோரி
சிவமாறன்

India skill போட்டியில் வெள்ளி வென்ற தமிழன்!

``செஸ்ஸில் சாதிக்கணும்னு நினைச்சேன்… இப்போ ஆட்டோமொபைலில்!”

India skill போட்டியில் வெள்ளி வென்ற தமிழன்!

Published:Updated:
சிவமாறன்
பிரீமியம் ஸ்டோரி
சிவமாறன்

ஆட்டோமொபைல் துறையில் உள்ள திறமையாளர்களை வெளிக்கொண்டு வருவதற்கு பாஹா, ரேஸிங் போன்று தேசிய அளவில் பல போட்டிகள் நடப்பதுபோல், ‘வேர்ல்டு ஸ்கில்’ (World skills) என்றொரு போட்டி நடக்கிறது.

அதாவது 1940–ல் இருந்து இந்தப் போட்டி உலகளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்டோமொபைலில் உள்ள இளம் திறமையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் ஒரு போட்டிதான் இது. ரஷ்யாவில் உள்ள ‘கக்ஷான்’ நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், அவரவர் நாட்டில் இதற்காகப் போட்டி வைத்துத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வகையில் இந்தியா ஸ்கில்ஸ் (India skills) என்னும் பெயரில் இந்தியாவில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

``செஸ்ஸில் சாதிக்கணும்னு நினைச்சேன்… இப்போ ஆட்டோமொபைலில்!”

சென்னை மாவட்ட அளவிலான ஆட்டோமொபைல் போட்டியில் 180 நபர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் முதலாவதாக வந்தவர்கள்தான், மேற்கொண்டு கலந்து கொள்ள முடியும். இப்போது `இந்தியா ஸ்கில்ஸ்’ போட்டியில், சென்னையில் முதலிடத்தில் ஜெயித்து - இப்போது ஆட்டோமொபைலுக்கான வெள்ளி மெடலை, தமிழகத்தைச் சேர்ந்த சிவமாறன் பெற்றுள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, தற்போது Mahindra Research Valley-ல் பணிபுரியும் சிவமாறன் - வெள்ளி மெடலோடு, வெண்கலச் சிரிப்போடு பேசினார்.

``சிறுவயதில் ஆடம்பரமான பெரிய பெரிய கார்களைப் பார்த்து ரசிப்பேன். கல்லூரியில் செஸ் சாம்பியனாக இருந்தேன். சில காரணங்களால் செஸ்ஸைத் தொடர இயலவில்லை. நமக்கேற்ற வேலை எது என்று யோசிக்கும்போது, படிப்புக்கேற்ற ஆட்டோமொபைல் வேலையையே தொடர்ந்தேன்.

ஆரம்பத்தில் வேலை செய்யும்போது, அடிக்கடி கையில் அடிபட்டு ரத்தம் வரும். கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டதுதான். இப்போது மஹிந்திராவில் Research and development team-ல் இருக்கிறேன். இந்தியாவை முன்னிருத்தி செஸ் விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இந்தியா ஸ்கில்லில் பங்கேற்று வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பயிற்சிக் காலத்தில் உணவு, பருவநிலை பெரும் பிரச்சினையாக இருந்தது. வடநாட்டு உணவு ஒவ்வாமையால் உடல்நிலை சற்று மோசமானது. போட்டியில் முழுமூச்சாகச் செயல்பட இயலவில்லை. உடல்நிலை சரி இல்லாததால்தான் தங்கம் வெல்ல முடியவில்லை!” என்று வருத்தப்படுகிறார் சிவமாறன்.

``செஸ்ஸில் சாதிக்கணும்னு நினைச்சேன்… இப்போ ஆட்டோமொபைலில்!”

``அது சரி; அங்கே என்ன மாதிரியான போட்டிகள் இருக்கும்? வேறு என்ன பிரச்னைகளைச் சந்தித்தீர்கள்?’’

``வேலை செய்யாத காரை ரிப்பேர் செய்வது; கார் லைட்டைச் சரி செய்வது போன்ற போட்டியில் - குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்தாக வேண்டும். இதுதான் எங்களுடைய டாஸ்க்! வடமாநிலத்தில் மொழி ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. ஓரளவு ஆங்கிலத்தை வைத்துத் தப்பித்துக் கொண்டேன்!” என்று சிரித்தார் சிவமாறன்.

ஆட்டோமொபைலில் தங்கம், வெள்ளி வென்ற இருவருக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டி வைத்து, வேர்ல்ட் ஸ்கில்ஸுக்குத் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுப்பர்.

``கண்டிப்பாக வேர்ல்ட் ஸ்கில் போட்டியில் இந்தியாவிற்காகப் போட்டியிடுவேன்!” என நம்பிக்கையாகக் கூறும் சிவமாறனுக்கு வாழ்த்துகள் கூறி விடை பெற்றேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism