Published:Updated:

’யமஹாவுக்குத் தமிழ்நாடு முக்கியம்!’

யமஹா மோட்டார் கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
யமஹா மோட்டார் கம்பெனி

விஐபி இன்டர்வியூ

’யமஹாவுக்குத் தமிழ்நாடு முக்கியம்!’

விஐபி இன்டர்வியூ

Published:Updated:
யமஹா மோட்டார் கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
யமஹா மோட்டார் கம்பெனி
தமிழகத்தில் யமஹாவின் பங்கு, எதிர்காலத் திட்டங்கள், ‘புளூ ஸ்கொயர்’ ஆகிய விஷயங்களைப் பற்றி யமஹா மோட்டார் கம்பெனியின் துணைத்தலைவர் ரவீந்தர்சிங் - மோட்டார் விகடனின் கேள்விகளுக்கு இமெயில் மூலம் பதிலளித்தார். அதிலிருந்து சில துளிகள் இங்கே!
ரவீந்தர்சிங்  - யமஹா மோட்டார் கம்பெனியின் துணைத்தலைவர்
ரவீந்தர்சிங் - யமஹா மோட்டார் கம்பெனியின் துணைத்தலைவர்

"ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சிகள், புதிய வியாபார யுக்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பரவலுக்கு முன் பொதுப் போக்குவரத்தை விரும்பியவர்கள்கூட நோய்ப் பரவலுக்குப் பின் தனி வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையும் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும்.

கொரோனா காலத்தில் நேரடியாகக் கடைகளுக்குச் செல்ல வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. எனவே, கடையில் கிடைக்கும் அனுபவத்தை விர்ச்சுவலாகக் கொடுக்கவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

2020-ல் யமஹா, 5.04 லட்சம் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்தது. அவற்றில் 1.14 லட்சம் வாகனங்கள் தமிழகத்திலேயே விற்கப்பட்டிருக்கின்றன. 150சிசி மற்றும் 125சிசி செக்மென்ட்டில் சிறந்த மார்க்கெட்டாக தமிழகம் இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான ஷோரூம் அனுபவத்தைக் கொடுப்பதற்காகவே `புளூ ஸ்கொயர்’ என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை 6 `புளூ ஸ்கொயர்’ ஷோரூம்கள் இருக்கின்றன, அடுத்து 26 ஷோரூம்கள் வரை திறக்கத் திட்டமிட்டுள்ளோம்.

போக்குவரத்தின் எதிர்காலம் மின்சாரம்தான். அது நீண்டகாலத் திட்டம்தான் எனினும், அதிலும் சிறப்பான மாடல்களை வழங்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism