Published:Updated:

ஸ்க்ராம்ப்ளர்… ஹார்டுவொர்க்கர்!

யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர்
பிரீமியம் ஸ்டோரி
யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர்

க்விக் ரைடு: யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர்

ஸ்க்ராம்ப்ளர்… ஹார்டுவொர்க்கர்!

க்விக் ரைடு: யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர்

Published:Updated:
யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர்
பிரீமியம் ஸ்டோரி
யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர்

விலை: சுமார் 2.6 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

யெஸ்டி, இப்படி ஹாட்ரிக் அடிக்கும் என்று நினைக்கவே இல்லை. ஸ்க்ராம்ப்ளர், ரோட்ஸ்டர், அட்வென்ச்சர் – இப்படி எல்லா டெரெய்ன்களிலும் ஓட்டுவதற்கு ஏற்ப 3 பைக்குகளை ஒரே நேரத்தில், அதுவும் பொங்கலுக்கு முந்தைய தினம் லாஞ்ச் செய்து ஹாட்ரிக் அடித்துவிட்டது. பைக் ரசிகர்களுக்குப் பொங்கலுக்கு முதல் நாளே திருவிழா ஆரம்பித்து விட்டது. க்ளாஸிக் லெஜெண்ட்ஸ் எனும் நிறுவனம்தான் யெஸ்டியின் ஓனர். இதில் அட்வென்ச்சரைத் தவிர மற்ற இரண்டு பைக்குகளையும் ஓட்ட வாய்ப்புக் கிடைத்தது. ஹெல்மெட்டும் கேமராவுமாக ஓர் அதிகாலையில் இரண்டு யெஸ்டிக்களையும் சென்னை முழுக்க உறுமவிட்டோம். முதலில் ஸ்க்ராம்ப்ளர்...

ஸ்க்ராம்ப்ளர் என்றாலே நினைவுக்கு வருவது டுகாட்டிபைக்தான். டுகாட்டிக்கு டஃப் கொடுப்பதுபோல் இருக்கிறது இந்த யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரின் டிசைன். ஃபர்ஸ்ட் லுக்கிலேயே நாங்கள் அப்படித்தான் நினைத்தோம். அட்வென்ச்சர் பைக்குகளில் இருப்பதுபோல், ஹெட்லைட்டுக்குக் கீழே… வீல் ஹக்கருக்கு மேலே ஒரு `Beak’ கொடுத்திருந்தது நைஸ் டச்.

டூயல் சேனல் ஏபிஎஸ்  இருக்கிறது. ஸ்போக் வீல்கள், ட்யூப் டயர்கள்தான்.
டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கிறது. ஸ்போக் வீல்கள், ட்யூப் டயர்கள்தான்.


சீட்டும் வித்தியாசமாக வரி வரியாக இருந்தது. இதை `Tuck and Roll’ சீட் என்பார்கள். இது ரைடருக்கு கிச்சென்ற ரைடிங் பொசிஷனைக் கொடுக்கும். எனக்கும் கொடுத்தது. 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்குக்கு நடுவே தொடைக்கு கிரிப் கிடைக்க ஒரு ரப்பர் கிரிப் இருந்தது. ஸ்க்ராம்ப்ளர் என்பதற்காகவே என்னவோ, இதில் ஸ்டீல் ரிம் வீல்கள்தான் இருந்தன. இன்னொரு மைனஸ் – ட்யூப்லெஸ் டயர்கள் இல்லை. ட்யூப் டயர்கள்தான்.

இந்த ஸ்க்ராம்ப்ளரில் கசகசவென காஸ்மெட்டிக் பூச்சுகளை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. இதை ஆஃப்ரோடுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மெக்கானிக்கல் விஷயங்களில் மட்டும்தான் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

பைக்கின் சீட்டில் உட்கார்ந்து, இதன் நீளமான ஹேண்டில்பாரைப் பிடித்ததும்… பறக்க வேண்டும் என்றும் தோன்றியது; ஒரு செல்லமான ஆஃப்ரோடும் போக வேண்டும்போல் தோன்றியது. முதலில் சென்னையின் ஒரு மேடு பள்ளமான ஏரியாவில் இதை விட்டுப் பார்த்தோம். இதில் ரைடிங் மோடுகள் Rain, Road, Off-Road என 3 மோடுகள் இருந்தன. ஆஃப்ரோடை செலெக்ட் செய்து கொண்டேன். டார்க் குபுக் குபுக் என கொப்புளிப்பதுபோல் இருந்தது.

இதன் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் முன் பக்க சஸ்பென்ஷன், அத்தனை ஸ்மூத். பின் பக்கம் ட்வின் ஷாக் Gas Canister அப்ஸார்பர்கள். இதைக் கொஞ்சம் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் என்று சொல்லலாம். ஆனால், டொமினார் மற்றும் அட்வென்ச்சர் அளவுக்கு இறுக்கம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், மேடு பள்ளங்களில் இது வேலை செய்தவிதம் அருமை. காரணம், இதன் டிராவல் 150மிமீ (மு) – 130 மிமீ (பி). இதனால், முதுகுவலி வராது என்பது உறுதி. நிச்சயம் எந்த ஸ்பீடு பிரேக்கர்களிலும் பாறைகளிலும் இடிக்காது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் 200 மிமீ… வாவ்! இதன் முன் பக்க 19 இன்ச் மற்றும் பின் பக்க 17 இன்ச் MRF Zapper Kurve டயர்கள்… ஸ்போக் வீல்கள் ஆஃப்ரோடுக்கு ஏற்ற மாதிரி ஹார்டுவொர்க் செய்தன. இது டூயல் பர்ப்போஸ் டயர்கள் என்பதால், ஆன்ரோடுக்கும் கிளப்பினோம் ஸ்க்ராம்ப்ளரை.

இதில் இருப்பது மற்ற யெஸ்டி, ஜாவா பைக்குகளில் இருப்பதுபோலவே 334 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின்தான். நான் ஏற்கெனவே ஜாவா பைக் ஓட்டியிருக்கிறேன். அதனால், ‘அதே அனுபவம்தான கிடைக்கப் போகுது’ என்று நினைத்தேன். ஆனால், இந்த இன்ஜினை இந்த ஸ்க்ராம்ப்ளருக்கு ஏற்றபடி ட்யூன் செய்திருக்கிறார்கள். ஜாவா பைக்குகளைவிட ஒரு ஃப்ளாட்டான டார்க் கிடைத்தது. அதிகாலையில் யாருமே இல்லாத நந்தனம் சிக்னலில் இதைச் சீற வைத்தேன். சட்டெனச் சீறியது ஸ்க்ராம்ப்ளர்.

இதன் டார்க் 2.82kgm. இதன் பவர் 29.1bhp. அந்த அதிகாலையிலும் ரன்னிங் போய்க் கொண்டிருந்த சிலர் இந்த யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரின் எக்ஸாஸ்ட் பீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்தனர்… ‘டபுள் எக்ஸாஸ்ட் மாதிரி சவுண்ட் கேக்குது’ என்று சிலர் கேட்டும் விட்டனர்.

ஸ்க்ராம்ப்ளர் லோகோ நச்!
ஸ்க்ராம்ப்ளர் லோகோ நச்!
 `Tuck and Roll’ சீட் ரைடருக்கு கிச்சென்ற ரைடிங் பொசிஷனைக் கொடுக்கும்.
`Tuck and Roll’ சீட் ரைடருக்கு கிச்சென்ற ரைடிங் பொசிஷனைக் கொடுக்கும்.
க்ளாஸிக் ஸ்டைலில் உருண்டை வடிவ ஹெட்லைட்..
க்ளாஸிக் ஸ்டைலில் உருண்டை வடிவ ஹெட்லைட்..


அதிகாலை என்பதால்… இதன் டாப் ஸ்பீடைச் சோதனை போட முடியவில்லை. ஆனால், நிச்சயம் ஹைவேஸில் 140 கிமீ–க்கு மேல் பறக்கலாம் என்று நினைக்கிறேன். இதன் பவர் டெலிவரி லீனியராகவே இருக்கிறது. இதன் இன்ஜின் செம பெப்பியாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்மூத். சின்ன இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் என்ன கியரில் போகிறோம் என்று தெரிகிறது. சிட்டிக்குள் இதை ஓட்டவும் ஜாலியாக இருக்கிறது. இதன் குறைவான வீல்பேஸ் 1,403 மிமீ வளைத்து நெளித்து ஓட்ட வசதியாக இருக்கிறது. டொமினார், ஹிமாலயன் போன்ற பைக்குகளை ஓட்டியவர்கள், இதை ஓட்ட மிகவும் பிடிக்கும். காரணம், இதன் எடை டொமினார் போன்றவற்றைவிடக் குறைவு. 182 கிலோ.

இதன் சீட் உயரம் 800 மிமீ இருந்தது. உயரம் குறைவானவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

பாதுகாப்பில் இரண்டு பக்கமும் டிஸ்க் தவிர, ஏபிஎஸ் டூயல் சேனலும் இருந்தது. ஹேண்டில்பாருக்கு Knuckle Guard ஆப்ஷனும் இருக்கிறது. மற்றபடி வசதிகளைப் பொருத்தவரையும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட்டே சிறிசாக இருந்தது. ஆனால், அழகாக இருக்கிறது. ஒரே ஒரு குடுவையில் டிஜிட்டலாக ஸ்பீடோ, கடிகாரம், ட்ரிப், ஆர்பிஎம், ஃப்யூல் மீட்டர், கியர் இண்டிகேட்டர் கொடுத்திருந்தார்கள். ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் என எல்லாமே எல்இடி மயம். ஹேண்டில் பாரில் ஒரு USB சார்ஜர் மவுன்ட் செய்திருக்கிறார்கள். புளூடூத் கனெக்டிவிட்டி இதில் இல்லை.

இந்த ஸ்க்ராம்ப்ளர் – டூயல் டோனில் 3, சிங்கிள் டோனில் 3 என மொத்தம் 6 கலர்களில் வருகிறது. ஆரஞ்ச் சிங்கிள் டோனுக்கு ஓட்டு விழலாம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2,10,900 ரூபாய். சுமார் 2.6 லட்சத்துக்கு இந்த 334 சிசி யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மார்க்கெட்டில் எடுபட வைப்பீர்களா யெஸ்டி ஃபேன்ஸ்?

ஸ்க்ராம்ப்ளர்… ஹார்டுவொர்க்கர்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எடை: 182 கிலோ

டேங்க்: 12.5 லிட்டர்

வீல்பேஸ்: 1,403 மிமீ

சீட் உயரம்: 800 மிமீ

இன்ஜின்: 334 சிசி, லிக்விட் கூல்டு, Fi

பவர்: 29.1Bhp

டார்க்: 2.82kgm

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு

சஸ்பென்ஷன்: டெலிஸ்கோப்பிக், ட்வின் ஷாக் கேனிஸ்டர்

பிரேக்ஸ் : 320மிமீ/240மிமீ டிஸ்க்

ஏபிஸ்: டூயல் சேனல்

வீல்கள்: 19/17 இன்ச்

டயர்: ட்யூப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism