Published:Updated:

Royal Enfield, Vespa-க்களுக்குப் போட்டியா..? | யார் இந்த Keeway Bikes..? | Motor Vikatan

கீவே நிறுவனம் கே-லைட் 250, ஸ்கூட்டர் வியஸ்ட் 100 மற்றும் சிஸ்ட்டீஸ் 300i என்ற மூன்று புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

1999-ல் ஹங்கேரியில் தொடங்கப்பட்ட நிறுவனம் கீவே. இது பெனெல்லியின் இன்னுமொரு சிஸ்டர் கன்சர்ன் நிறுவனமாகும். 98 நாடுகளில் அகன்று விரிந்திருக்கும் இந்த கீவே, தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் அவர்கள் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் 8 மாடல்களில், கீவே கே-லைட் 250, ஸ்கூட்டர் வியஸ்ட் 100 மற்றும் சிஸ்ட்டீஸ் 300i என்ற 3 மாடல்கள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாடல்களுடன் 125 சிசி, 250சிசியில் இரண்டு ரெட்ரோ ஸ்ட்ரீட் பைக்குகளையும் வெளியிட இருக்கிறார்கள். 300சிசியில் மூன்றுவிதமான பைக் மாடல்களிலும் ரகத்துக்கு ஒன்றென வெளியாகவிருக்கிறது. நேக்கட், க்ரூஸர், சூப்பர் ஸ்போர்ட்ஸ் என மூன்றிலும் 300சிசி மாடல்கள் விரைவில் வர இருக்கின்றன என உத்தரவாதம் அளிக்கிறது கீவே நிறுவனம். அதேபோல ஏத்தர், ஓலா நிறுவனங்களுக்குப் போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். கீவே முதலில் லாஞ்ச் செய்த அந்த முத்தான 3 மாடல்களின் வாக்-அரவுண்டுக்காக மும்பை சென்றிருந்தேன்.

கீவே கே-லைட்!

கீவே வெளியிட்ட மூன்று மாடல்களில் இரு மாடல்கள் மேக்ஸி ஸ்கூட்டர், இது ஒன்றுதான் க்ரூஸர். பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக் மாதிரியே இருக்கும் இந்த கீவே கே-லைட். ஹார்லி மாதிரியே உயரம் குறைவானவர்களுக்கு இது எளிதாக இருக்கும். பைக்கின் வலதுபுறம், இரட்டைக் குழல் துப்பாக்கிபோல நீண்ட டபுள் எக்ஸாஸ்ட். இதன் டேங்க் கொள்ளளவு 20 லிட்டர். இந்த செக்மென்ட்டில் அதிகமான டேங்க் கொள்ளளவு கொண்ட பைக் இதுதான். அதேபோல், பட்ஜெட் விலையில் V ட்வின் இன்ஜின் செட்-அப் கொண்ட ஒரே க்ரூஸர் இந்தியாவில் இதுதான்.

மேக்ஸி ஸ்கூட்டர் வியஸ்ட்!

கார்களைப்போல், டிஜிட்டல் கீ... அதாவது கீ-லெஸ் என்ட்ரி வசதியிலேயே ஆரம்பிக்கிறது வியஸ்ட்டின் அட்டகாசம். ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ், இண்டிகேட்டர் என எல்லாமே எல்.இ.டி மயம். இப்போதைக்கு இந்தியாவில் முக்கியமான மேக்ஸி ஸ்கூட்டர்கள் என்றால், சுஸூகி பர்க்மேன், ஏப்ரிலியா SXR போன்ற ஸ்கூட்டர்கள்தான். ஆனால், இவற்றின் பவர் மேக்ஸி இல்லை; மினிமம்தான். அதையும் தாண்டி பி.எம்.டபிள்யூ C400 GT இருக்கு; ஆனால் விலை... ரொம்ப மேக்ஸிமம். அந்த வகையில் 2.5 லட்சம் விலையில் இது வந்தால்... மேக்ஸி ஸ்கூட்டர்களின் சாய்ஸில் பெஸ்ட்டாக இருக்கும் வியஸ்ட்.

சிக்ஸ்டீஸுர்!

நீங்கள் 90’ஸ் கிட்ஸ் என்றால், உங்களுக்கு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் நினைவிருக்கும். அந்த லாம்ப்ரெட்டா ரெட்ரோ வடிவத்தை இன்ஸ்பயர் செய்துதான் இந்த மேக்ஸி ஸ்கூட்டரான Sixties 300i-யை வடிவமைத்திருக்கிறது கீவே. பார்ப்பதற்கு பழைய தோற்றத்தில் இருந்தாலும் LED லைட்ஸ், LCD டிஸ்ப்ளேவுடன் அனலாக் கன்சோல் என அங்கங்கே பல மாடர்ன் அம்சங்களும் இதில் உள்ளன. மேலும் கார்களைப்போல் டூயல் டோன் சிவப்பு/கறுப்பு கிரில், Victoria என்கிற வார்த்தை, பைக்கின் முன்பக்கத்தில் இருக்கும் லோகோ என ரெட்ரோ மாடர்ன் ஸ்டைலில் கலக்குகிறது இந்த சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism