பிரீமியம் ஸ்டோரி

RC சீரிஸில் 125, 200 மற்றும் 390 ஆகிய பைக்குகளைத் தான் 2022-ல் வெளியிடும் முடிவில் இருந்தது. ஆனால், என்ன நினைத்ததோ தெரியவில்லை; இந்த ஆண்டே RC 125 மற்றும் RC 200 பைக்குகளை வெளியிட்டுவிட்டது. புதிதாக வெளியாகியிருக்கும் RC 200-யை ஓட்டிப் பார்க்க புனே வரச் சொல்லியிருந்தது கேடிஎம். எப்படி இருக்கு RC200?

டிசைன்

பைக்கின் ஃப்ரேமை MotoGP பைக்கை மாதிரியாக வைத்து உருவாக்கியிருக்கிறது கேடிஎம். பழைய RC 200-ஐ விட புதிய RC 200-ன் டிசைன் பிரமாதம். ப்ரீமியம் லுக்குடன் இருந்தது. ஹெட்லைட், டிஆர்எல் மற்றும் இண்டிகேட்டர் எல்லாமே எல்இடி தான். டிஆர்எல்லையும், இண்டிகேட்டரையும் ஹெட்லைட்டுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறார்கள். இது பார்ப்பதற்கே புதுமையாக இருக்கிறது. சீட்டிங் மிகவும் கம்ஃபர்டபிளாக இருக்கிறது. முந்தைய RC 200 ‘சீட்டிங் கொஞ்சம் நல்லா இல்லையோ’ என்ற உணர்வை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் புதிய மாடலில் பேடிங் மற்றும் குஷன் எல்லாம் நன்றாகக் கொடுத்திருக்கிறார்கள். ரைடர் மற்றும் பில்லியன் இருவருக்கும் கம்அபர்டபிளாகவே இருக்கிறது. டெய்ல் லைட் டிசைனும் புதுமை.

இன்ஜின்

இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யவில்லை கேடிஎம். முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின்தான். 25bhp பவரையும், 19.2 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது இந்த இன்ஜின். அதே இன்ஜின்தான்; இந்தப் புதிய மாடல் கொஞ்சம் மேம்பட்ட பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் எனக் கூறியிருக்கிறது கேடிஎம். அதற்குக் காரணம் முந்தைய மாடலை விட 40 சதவிகிதம் பெரிய ஏர்பாக்ஸைக் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதனால், அதிகமான காற்றை உள்வாங்கிக் கொண்டு இன்ஜினால் சிறப்பாகs செயல்பட முடியுமாம். இதன் மூலம், நல்ல த்ராட்டில் ரெஸ்பான்ஸிலும், சூப்பர் பிக்கப்பும் கிடைக்கும் எனக் கூறுகிறது கேடிஎம்.

ஓட்டும்போதே முந்தைய RC 200-க்கும், புதிய RC 200-க்கும் வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது. முந்தைய மாடலைவிட கொஞ்சம் பெரிதாகவும் வளைந்தபடியும் இருக்கிறது இதன் ரேடியேட்டர். இதன் மூலம் அதிகளவிலான காற்று வந்து போவதால் கூலிங் சிஸ்டமும் மேம்பட்டிருக்கிறது. புதிய மாடலில் 3.3 கிலோ அளவுக்கு எடையைக் குறைத்திருக்கிறது கேடிஎம். சேஸி, வீல்கள் மற்றும் பிரேக் ஆகியவற்றில் தான் அதிகமான எடையைக் குறைத்து பைக்கின் எடையைக் குறைத்திருக்கிறார்கள். இந்த எடைக் குறைப்பும் பைக்கின் பெர்ஃபாமன்ஸைக் கொஞ்சம் கூட்டுகிறது.

பெர்ஃபாமன்ஸ்

புனேவில் இருக்கக் கூடிய சக்கான் ப்ளான்ட்டில்தான் RC200-ன் ஆக்ஸில ரேட்டர் முறுக்கினேன். புதிய பைக்கில் ஏரோடைனமிக்ஸை மேம்படுத்தியிருப்பதாக கேடிஎம் கூறியிருந்ததை என்னால் உணர முடிந்தது. இந்தப் புதிய RC 200-ல் கார்னரிங் செய்வதே ஒரு அலாதியான இன்பமாக இருந்தது. அந்தளவுக்குச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறது கேடிஎம்.

இரண்டாவது விஷயம் ஹேண்டில்பார். புதிய RC 200-ல் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வகையிலேயே புதிய ஹேண்டில்பாரை வடிவமைத்திருக்கிறது கேடிஎம். இதனை டக்கின் செய்து ரேஸிங் செய்யும் வகையிலும் வைத்துக் கொள்ளலாம். கூடவே ரிலாக்ஸ்டான ரைடிங் பொசிஷனுக்கு ஏற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஸ்டாண்டர்டாக 14.5மிமீ ஹேண்டில் பாரின் உயரத்தை அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

பெர்ஃபாமன்ஸைப் பற்றிப் பேச வேண்டும் என்றால், 0-60 கிமீ வேகத்தை எட்ட 4.2 நொடிகள் ஆனது. 0-100 கிமீ வேகத்தை எட்ட 7.9 நொடிகள் தேவைப்பட்டது. இந்த பைக்கை ரேஸ் ட்ராக்குக்கான பைக் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். எனவே, ட்ராக்கில் ஓட்டும்போது மிகவும் சிறப்பான அனுபவத்தை என்னால் பெற முடிந்தது.

`நிறைகளை மட்டும் சொல்றீங்களே, குறைகளே இல்லையா’ என நீங்கள் கேட்பது கேட்கிறது. எம்ஆர்எஃப் டயர்களை இந்தப் புதிய RC 200-க்குக் கொடுத்திருக்கிறது கேடிஎம். தினசரி சாலைகளில் ஓட்டுவதற்கு இந்த டயர்கள் ஓகேதான். ஆனால், ஹைஸ்பீடில் தேவைப்பட்ட ட்ராக்ஷன் கிடைக்கவில்லை; முக்கியமாக கார்னரிங் செய்யும்போது! சீட்டின் உயரம் 824மிமீ. லீவர்கள் அட்ஜஸ்டபிள் இல்லை. RC 200-ஐப் பொருத்தவகை எல்சிடி (LCD) இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் கொடுத்திருக்கிறார்கள். RC 390-ல் வேண்டுமானால் டிஎஃப்டி (TFT) கிளஸ்டரை எதிர்பார்க்கலாம். எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக இருந்தாலும் நமக்குத் தேவையான தகவல்களை எல்லாம் கொடுத்து விடுகிறது. முந்தயை மாடலை விட கொஞ்சம் பெரியதாக இருப்பது சிறப்பு.

புதிய RC 200-ல் சாஃப்ட் சஸ்பென்ஷனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தினசரிப் பயன்பாட்டிற்கு இந்த சாஃப்ட் சஸ்பென்ஷன் சூப்பர். ஆனால், வேகங்களில் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருந்தால்தான் நல்லது.

பிரேக்கிங் பவரை சோதனை செய்யும் போது, 60-0 கிமீ அடைவதற்கு 19 மீட்டர்களை எடுத்துக் கொண்டது. 100-0 கிமீ அடைவதற்கு 47.4 மீட்டரை எடுத்துக் கொள்கிறது புதிய RC 200. பிரேக்ஸ் இன்னும் கொஞ்சம் பன்ச்சியாக இருக்கலாமோ? முந்தைய கேடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பெரிய குறையாகச் சொல்வது ஃப்யூல் டேங்க்கைத்தான். வெறும் 9.5 லிட்டர் இருந்த டேங்க், இப்போது 13.7 லிட்டர் ஆகியிருக்கிறது.

விலை:

இவ்வளவு மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்றால் விலையும் ஏற்றியிருப்பார்களே என்றுதான் நினைத்தோம். ஆனால், அது தான் இல்லை. முந்தைய RC 200 என்ன விலைக்குக் கிடைத்ததோ, (2.09 லட்சம், எக்ஸ்ஷோரூம்) அதே விலையில்தான் புதிய RC 200-ம் இருக்கிறது. ஒருவேளை ஜனவரியில் RC 390 வெளியாகும்போது மாறலாம்.

முதல் தீர்ப்பு:

பல வருடங்களாக கேடிஎம்மில் ஒரே டிசைனையே பார்த்து வந்த நமக்கு இந்தப் புதிய RC 200-ன் டிசைன் நன்றாகத்தான் இருக்கிறது. டிசைன் மட்டுமில்லாமல் கொஞ்சம் பெர்ஃபாமன்ஸ், கொஞ்சம் எடைக் குறைப்பு என ஆங்காங்கே அப்டேட்களைத் தெளித்திருப்பதால், ஓவர் ஆலாக சிறப்பான அப்டேட்டாகவே இருக்கிறது. விலையை மற்றும் ஏற்றாமல் இதே விலையிலேயே இருக்கும் பட்சத்தில் 200சிசிக்குள் ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் பைக்காக இதனைத் தேர்வு செய்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ட்ராக் பைக்கா... 
ரோடு பைக்கா?
ட்ராக் பைக்கா... 
ரோடு பைக்கா?
ட்ராக் பைக்கா... 
ரோடு பைக்கா?
ட்ராக் பைக்கா... 
ரோடு பைக்கா?
ட்ராக் பைக்கா... 
ரோடு பைக்கா?
ட்ராக் பைக்கா... 
ரோடு பைக்கா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு