Published:Updated:

தண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்...

விலை: ரூ.1.90 – 2.14 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)
பிரீமியம் ஸ்டோரி
News
விலை: ரூ.1.90 – 2.14 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)

லாங் ரைடு: ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு பைக்கை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிர்வுகள் இல்லாமல், புத்தம் புது ப்ளாட்ஃபார்மில், புல்லட்டின் அதே பீட் குறையாமல், BS-6 இன்ஜினில் வந்திறங்கி இருக்கிறது மீட்டியார் 350. தண்டர்பேர்டு பிரியர்களுக்கு ஒரு சோகமான விஷயம் – இனி தண்டர்பேர்டு சீரிஸ் பைக்குகள் கிடையாது. அதற்கு மாற்றத்தான் மீட்டியாரைக் கொண்டு வந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

இன்னும் ஷோரூமுக்கே வராத நிலையில், மீட்டியார் நம் அலுவலகத்தில் வந்திறங்கினால் எப்படி இருக்கும்? புது புல்லட்டில் ஒரு லாங் ட்ரிப்பே அடித்தோம். நவம்பர் மாத மழை நாள் ஒன்றில், மீட்டியார் 350 பைக்கில் சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள சக்லேஷ்பூர் வரை ஒரு லாங் ரைடுக்கு ‘தட் தட் தட்’ எனக் கிளம்பினோம். மீட்டியாரும் சக்லேஷ்பூரும் எப்படி இருக்கின்றன?

விலை: ரூ.1.90 – 2.14 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)
விலை: ரூ.1.90 – 2.14 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மீட்டியாரை ஓட்ட சக்லேஷ்பூரை நாம் தேர்ந்தெடுக்கக் காரணம், பெங்களூர் பார்டர் வரை ஆன்ரோட்டில் விரட்டலாம்; சக்லேஷ்பூர் ஹில் ஸ்டேஷனில் ஆஃப்ரோடும் பண்ணலாம்.

டிசைன்

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வரை, ‘‘புது புல்லட்டா… எவ்வளவு ரேட்? வித்தியாசமா இருக்கே? க்ரூஸரா?’’ என்று பயணம் முழுதும் தமிழிலும் கன்னடத்திலும் மாறி மாறி விசாரிப்புகள் வந்துக்கொண்டே இருந்தன. முதலில் மீட்டியாரின் டிசைன்தான் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. நான் ஓட்டியது மீட்டியாரின் டாப் எண்டான சூப்பர் நோவா. டூயல் டோனில் கலக்கலாக இருந்தது. வழக்கமான புல்லட் ரெட்ரோ டிசைனில் இருந்து மாறாமல் இருக்கிறது மீட்டியார். ஆனால் தண்டர்பேர்டு x மாடலைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது.

20.2bhp பவர் என்பது இந்த 350 சிசி பைக்குக்குக் குறைவுதான்.
20.2bhp பவர் என்பது இந்த 350 சிசி பைக்குக்குக் குறைவுதான்.

மீட்டியாரின் சீட்டில் அமர்ந்தால், எனக்கென்னவோ ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக்கில் அமர்ந்தது நினைவுக்கு வந்தது. அந்தளவு க்ரூஸிங் டிசைன். தண்டர்பேடு பைக்கின் பெட்ரோல் டேங்க்கைவிட கொஞ்சம் சிறுசாகி இருக்கிறது மீட்டியாரின் டேங்க். தண்டர்பேர்டு x-ல் 20 லிட்டர் ஃப்யூல் டேங்க் கொஞ்சம் பல்க்கியாக இருக்கும். இதில் 15 லிட்டர் டேங்க்தான். சீட்கள் ஸ்ப்ளிட் ஆகி இருக்கின்றன. முன் சீட் சொகுசு, ரைடிங் பொசிஷன் எல்லாம் ஓகே! ஆனால், பின் சீட் உயரமானவர்களுக்குக் கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும். அதேநேரம், பேக் ரெஸ்ட் சூப்பர். சாய்ந்தாலும் பிரச்னை இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெரிய விண்ட் ஸ்க்ரீன், காற்று முகத்தில் அறையாமல் இருப்பதற்காக. ஹைவேஸில் ஸ்டேபிளாகவே இருந்தது. பின் பக்கம் மட்கார்டு கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது.

பெரிய விண்ட்ஸ்க்ரீன், எதிர்க்காற்றில் இருந்து ரைடிங்கைக் காப்பாற்றுகிறது.
பெரிய விண்ட்ஸ்க்ரீன், எதிர்க்காற்றில் இருந்து ரைடிங்கைக் காப்பாற்றுகிறது.

தரம், இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறது. ஸ்விட்ச்களைப் பார்த்தாலே அது தெரிந்து விடுகிறது. அதிலும் அந்த ரோட்டரி ஸ்விட்ச், செம க்ளாஸ்! க்ரோம் மிரர்கள் அருமை. முன் பக்க பிரேக் லீவர், மாஸ்டர் சிலிண்டரோடு இணைந்திருப்பது சூப்பர். டேங்க் லாக்கை லிஃப்ட் செய்தால், க்ரோம் மூடி, வாவ்! முன் பக்கம் ஹெட்லைட்டைச் சுற்றி ஒரு எல்இடி ஒளிர்வது செமையாக இருக்கிறது. ஆனால், சன்லைட்டில் டல் அடிக்கிறது. ஹெட்லைட்டுக்கு ஹாலோஜன் பல்புகள்தான். புரொஜெக்டராவது கொடுத்திருக்கலாம். பின் பக்க பிரேக் லைட்டுகளுக்கும் ஒரு எல்இடி சரவுண்ட் உண்டு.

ஸ்ப்ளிட் சீட்கள். உயரமான பில்லியனர்களுக்குக் கொஞ்சம் டைட்டாக இருக்கும். பேக்ரெஸ்ட் அருமை.
ஸ்ப்ளிட் சீட்கள். உயரமான பில்லியனர்களுக்குக் கொஞ்சம் டைட்டாக இருக்கும். பேக்ரெஸ்ட் அருமை.

வெளியே அனலாக், உள்ளே டிஜிட்டல் என்று இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், ஸ்மார்ட் லுக்கிங் என்று சொல்லலாம். கியர் இண்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூல் இண்டிகேட்டர், இரண்டு ட்ரிப் மீட்டர்கள் என்று டிஜிட்டலில் தெரிந்தது. ஸ்பீடோ மட்டும்தான் அனலாக். அது சரி; டேக்கோ மீட்டர் எங்கே?

டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. பின்னால் 270 மிமீ டிஸ்க்.
டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. பின்னால் 270 மிமீ டிஸ்க்.

வலது பக்கம் ஒரு சின்னக் குடுவை டயல் இருந்தது. இது ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம். RE ஆப்பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு, இதில் கூகுள் மேப் பார்த்து வண்டி ஓட்டலாம். அப்படியென்றால், மொபைல் நோட்டிஃபிகேஷன்கள் உண்டா என்று செக் செய்தேன். இல்லை. இது ரைடருக்கு டிஸ்ட்ராக்ஷனை ஏற்படுத்தும் என்பதால், கிடையாது என்கிறது RE.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின், பெர்ஃபாமன்ஸ்

மீட்டியாரில் இன்ஜினுக்குத்தான் பெரிய லைக் போட வேண்டும். பழைய புல்லட்டுகளில் புஷ் ராடு–வால்வ் சிஸ்டம் இருக்கும். இதில் SOHC 2 வால்வ் ஹெட் கொடுத்திருந்தார்கள். இதன் ப்ரைமரி பேலன்ஸர் ஷாஃப்ட்டில் போர்–ஐ 2 மிமீ வரை கூட்டி, ஸ்ட்ரோக்கை 4.2 மிமீ குறைத்திருக்கிறார்கள். இது பெர்ஃபாமன்ஸுக்காக மட்டும் நிச்சயம் இல்லை; டார்க்கில் பஞ்சம் இருக்கக் கூடாது என்பதற்காக. அதைவிட, ‘புல்லட்னா கை கால்லாம் அதிருமே’ என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே… அதையும் சரி செய்வதற்காக!

1. இரட்டைக் குடுவை மீட்டர். வலதில் நேவிகேஷன் உண்டு.  2. புரொஜெக்டர் லைட்ஸ் கொடுத்திருக்கலாம். சாதாரண ஹாலோஜன் பல்புகள்தான். 3.  பின் பக்கமும் க்ளாஸிக் டிசைன். 
 4. ஒட்டுமொத்தமாகத் தரம் மெருகேறி இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 6 ஸ்பீடு கொடுத்திருக்கலாம்.
1. இரட்டைக் குடுவை மீட்டர். வலதில் நேவிகேஷன் உண்டு. 2. புரொஜெக்டர் லைட்ஸ் கொடுத்திருக்கலாம். சாதாரண ஹாலோஜன் பல்புகள்தான். 3. பின் பக்கமும் க்ளாஸிக் டிசைன். 4. ஒட்டுமொத்தமாகத் தரம் மெருகேறி இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 6 ஸ்பீடு கொடுத்திருக்கலாம்.

பெங்களூரு ஹைவேஸில் இதை டாப் ஸ்பீடில், அதிக டார்க்கில் விரட்டும்போது… நமக்கே சந்தேகம்… அட, ராயல் என்ஃபீல்டா இது!

அதற்காக அதிர்வுகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதிர்வுகள் படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

புது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்மூத்தாகவும் ஸ்லீக் ஆகவும் இருக்கிறது. பழசைவிட ‘ஷார்ட் த்ரோ’ ஆக இருந்தது. 6 ஸ்பீடு கொடுத்திருக்கலாம். டிராஃபிக்கில் க்ளட்ச்சைப் பிடித்துப் பிடித்து அழுத்தியபோது லேசாக கை வலித்ததுபோல் ஓர் உணர்வு. கொஞ்சம் ஹெவிதான். ஆனால், ஃபீட்பேக் சூப்பர். பொதுவாக, புல்லட்களில் இன்ஜின் ஹீட், காலைப் பதம் பார்க்கும். சிட்டியில் பெரிதாகத் தெரியவில்லை.

தண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்...

இதன் பவர் 20.2bhp. டார்க் 2.7kgm. செம பவர் என்று சொல்ல முடியாது. BS-6 க்ளாஸிக் 350 UCE இன்ஜினுடன் ஒப்பிட்டால், 0.4bhp அதிகம்தான். ஆனால், இதன் டார்க் 1Nm குறைந்திருக்கிறது. ஆனால், இதன் 0–100 கிமீ வேகம், க்ளாஸிக்கைவிட 7.2 விநாடிகள் வேகமாக இருக்கிறது.

க்ளாஸிக் 350–ல் 60 கிமீ–ல் போனால் என்ஜாய் பண்ணலாம். 80 கிமீ-தான் அதிகபட்ச வேகம். அதாவது, அதிர்வுகள் இல்லாத வேகம். ஆனால் மீட்டியார் எப்படித் தெரியுமா? 80 கிமீ–ல்தான் என்ஜாய்மென்ட் இருக்கிறது. 100 கிமீ வரை ஜாலியாக க்ரூஸ் செய்தேன். 0–100 கிமீ–யை 17.8 விநாடிகளில் தொட்டது மீட்டியார். டாப் ஸ்பீடு 120 கிமீ வரை விரட்ட முடிந்தது. ஆனால், பெனெல்லி மற்றும் ஜாவா பைக்குகளைவிட மந்தம்தான். 10 நாட்கள் மீட்டியாரை நான் ஓட்டியதில் சிட்டிக்குள் ஆவரேஜாக 34 கிமீ மைலேஜ் கிடைத்தது. ஹைவேஸில் 37 கிடைக்கலாம்.

ஓட்டுதல்

வழக்கமான சிங்கிள் கிரேடில் யூனிட்டுக்குப் பதில், Double-Downtube Frame கொடுத்திருக்கிறார்கள். கட்டுமஸ்துக்குக் குறைவில்லை. இத்தனைக்கும் தண்டர்பேர்டைவிட 6 கிலோ எடை குறைவு. (191 கிலோ). வீல்பேஸ் 50 மிமீ அதிகம். இதன் ஸ்டீயரிங் ஆங்கிளை 1 டிகிரிக்கு ஷார்ப் செய்திருக்கிறார்கள். (26 டிகிரி). இதனால், ஹேண்ட்லிங் இன்னும் ஈஸியாக இருக்கிறது. சீட் உயரத்தையும் 10 மிமீ குறைத்திருக்கிறார்கள். இதில் 765 மிமீதான். அதாவது, தண்டர்பேர்டைவிட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. சிட்டிக்குள் இதன் ஓட்டுதல் பேலன்ஸ்டு ஆக இருந்தது. கொஞ்சம் நம்பிக்கையாகவும் இருந்தது.

தண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்...

இதன் கி.கிளியரன்ஸும் ஓகே ரகம்தான். 170 மிமீ. இமயமலைக்குக்கூடக் கிளம்பலாம். சக்லேஷ்பூர் காட்டுப் பகுதிக்குள், ரோடே இல்லாத சாலையில் ஜம் ஜம்மென்று போனது மீட்டியார். மீட்டியாரில் ஒரு குறை – இதில் பின் பக்கம் கேஸ் சஸ்பென்ஷன் கொடுத்திருக்கலாம். ஸ்ப்ரிங் செட்–அப்தான் இருந்தது. ஆனால், ஹிமாலயன் போன்ற அட்வென்ச்சர் பைக்குகளுடன் மீட்டியார் போட்டி போட முடியாது.

முன் பக்கம் 19 இன்ச்; பின் பக்கம் 18–ல் இருந்து 17ஆகக் குறைத்திருக்கிறார்கள். செக்ஷனிலும் வேறுபாடு உண்டு. சியட், MRF என்று எது வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். முன் பக்க 300 மிமீ டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் ஓகேதான். இருந்தாலும், மற்ற க்ரூஸர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் டல்தான். பின் பக்கம் 270 மிமீ டிஸ்க் இருந்தது.

கஸ்டமைசேஷன்

மீட்டியாரில் ‘வாவ்’ அம்சம் பிடித்த கலரில், பிடித்த டிசைனில் ராயல் என்ஃபீல்டிலேயே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் காம்போக்களை ரெஃபர் செய்கிறது RE. எக்ஸாஸ்ட், இன்ஜின் கார்டு டிசைன், மல்ட்டிப்பிள் சீட் கவர்கள், இரண்டு விண்ட்ஸ்க்ரீன்கள், ஏகப்பட்ட கலர் ஆப்ஷன் என்று கலக்குகிறது RE. அதாவது, நீங்கள் எந்த வண்ணத்தில், டிசைனில் கேட்டாலும் மீட்டியார் உங்கள் கைக்குக் கிடைக்கும். இதிலும் வேற லெவல் விஷயம் என்னவென்றால், RE App-ல் நீங்களே சொந்தமாக மீட்டியாரை டிசைன் செய்து, இப்படித்தான் வேணும் என்று ஆர்டர் செய்து கொள்ளும் ஆப்ஷனும் உண்டு.

தண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்...

முதல் தீர்ப்பு

மொத்தம் 3 வேரியன்ட்கள், Fireball, Stellar, SuperNova. 1.90 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் விலை. Fireball, Stellar போன்றவற்றில் விண்ட்ஷீல்டு, ரியர் பேக்ரெஸ்ட், டூயல்டோன் போன்றவை எல்லாம் இருக்காது. மொழுக்கென ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும்.

டாப் எண்டான SuperNova-வின் ஆன்ரோடு விலை 2.14 லட்சம். இது க்ளாஸிக்கைவிட சில ஆயிரங்கள் அதிகம்தான். அதாவது, டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஜாவாவை விட அதிகம்தான். ஆனால், பெனெல்லி இம்பீரியல் 400 சிசி–யைவிடக் குறைவு.

விலை அதிகம் என்று நினைப்பவர்களுக்கும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அது - கஸ்டமைசேஷன். இந்த விஷயத்தில் ஆச்சரியப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு. மிடில் வேரியன்ட்டான Stellar மாடலை 2 லட்சத்துக்கு வாங்கி, சூப்பர் நோவாவைவிட சூப்பராக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

புத்தம் புது இன்ஜினுக்கும், ப்ளாட்ஃபார்முக்கும், சேஸிக்கும் இந்த விலை ஓகே என்றுதான் தோன்றுகிறது. முக்கியமாக, அந்தக் குறைவான அதிர்வுகள். பெர்ஃபாமன்ஸ் கொஞ்சம் மந்தம்தான். ஆனால், புது அனுபவத்தைக் கொடுக்கும் இதன் ஓட்டுதலுக்காக மீட்டியாரை வாங்கலாம்.