Published:Updated:

ஆர்ப்பாட்டமே இல்லாத ஆம்பியர் மேக்னஸ்!

ஆம்பியர் மேக்னஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆம்பியர் மேக்னஸ்

லாங் டெர்ம் ரைடு: ஆம்பியர் மேக்னஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஆர்ப்பாட்டமே இல்லாத ஆம்பியர் மேக்னஸ்!

லாங் டெர்ம் ரைடு: ஆம்பியர் மேக்னஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published:Updated:
ஆம்பியர் மேக்னஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆம்பியர் மேக்னஸ்

படங்கள்: ஜெ.தி.துளசிதரன்

பெட்ரோலுக்கு என்று பர்ஸையே திறக்காத அனுபவம் சமீபத்தில் வாய்த்தது. ஆம், ஆம்பியர் மேக்னஸ் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லாங் டெர்ம் ரைடுக்காகப் பயன்படுத்தியபோது, அப்படிப்பட்ட ஓர் அனுபவம்!

ஆம்பியர் மேக்னஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் ரைடு அனுபவம் எப்படி இருக்கு?

``என்னங்க இது… சத்தமே வரலை’’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இதை ஆன் பண்ணியதே தெரியவில்லை; ஆம்! அத்தனை ஸ்மூத். மற்ற ஸ்கூட்டர்கள்போல், சிங்கிள் டச் ஸ்டார்ட்தான். இன்ஸ்ட்ரூமென்ட் மீட்டரில் பிரேக் வார்னிங் ஆஃப் ஆனால்தான், ஸ்கூட்டர் மோட்டார் ஐடிலிங்கில் இருக்கிறது என்று அர்த்தம். கவனம். அமைதியான இடத்தில்கூட ஆனில் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மோட்டார் ஓடும்போதும் அப்படித்தான். எனவே, டிராஃபிக்கில் ஹார்ன் அவசியம். வாகனத்தை பார்க் செய்வதற்கான அடையாளமாய், ஆஃப் செய்ததும் இரண்டு தடவை பீப் சத்தம் போடுகிறது ஆம்பியர் மேக்னஸ். அதை வைத்துத்தான் கணவரோ, மனைவியோ வந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்ப்பாட்டமே இல்லாத ஆம்பியர் மேக்னஸ்!

டிசைனைப் பொருத்தவரை பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கிறது ஆம்பியர் மேக்னஸ். அட, எல்இடி ஹெட்லைட்ஸே போதுமே! லாங் ஷாட்டில் வெயிட்டான ஸ்கூட்டரோ இருக்குமோ என்று நினைத்தால், உண்மையில் ஸ்கூட்டரின் எடை டிவிஎஸ் ஸ்கூட்டியை விட ரொம்பவும் குறைவு. வெறும் 82 கிலோதான். நிறைய ப்ளாஸ்டிக்குகள். முழுக்க மெட்டல் பாடியாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தக் குறைவான எடைதான், ஆம்பியரை ஹேண்ட்லிங் செய்ய மிகவும் வசதியாக இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் கசகசவெனக் குழப்பயடிக்கவில்லை. ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், பேட்டரி சார்ஜ் மீட்டர்என குறைவான விஷயங்கள்தான். எல்லாமே டிஜிட்டல். குறைவான சார்ஜிங்கில் வார்னிங், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் வார்னிங், இருக்கின்ற சார்ஜில் எவ்வளவு தூரம் போகலாம் போன்ற முக்கியமான அம்சங்கள் மிஸ்ஸிங். கடிகாரமும் கொடுத்திருக்கலாம்.

பேட்டரி அளவுக்குப் பக்கத்தில் 1, 2 என்று நம்பர் வருகிறது. இது டிரைவிங் மோடு. இதற்கான பட்டன் வலது பக்கம் இருக்கிறது. அதாவது 1 என்றால் ஸ்லோ மோடு. 2 என்றால் ஸ்பீடு மோடு. ஸ்லோ மோடில் 40-யைத் தாண்ட முடியாது. அதிகபட்சமாக 45 கிமீ வேகம் போனேன். இதுவே 2… ஸ்பீடு மோடு என்றால், டாப் ஸ்பீடு 55 வரை போகிறது. இரண்டாவது மோடு, கொஞ்சம் ரேஞ்சைக் காலி செய்யும் என்பது உண்மை. இதுவே பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால், இந்த வேகமெல்லாம் சான்ஸே இல்லை.

ஆம்பியர் நீளமான ஸ்கூட்டர். அதனால் சீட்டும் நல்ல நீளமாகவே இருக்கிறது. பின் பக்கம் மோட்டார் இருப்பதால், எடை முழுதும் பின் பக்கம்தான். ஃப்ளோர் போர்டு, தாராளமாகவே இருக்கிறது. உயரமான பார்ட்டிகளுக்கு முட்டி இடிக்காது. இதன் வீல்பேஸ் 1,415 மிமீ. லெக்ரூமுக்கு மட்டுமே 450 மிமீ டிசைன் செய்திருக்கிறார்கள். ஓட்டுவதற்கு ஜாலியாக இருக்கிறது. முன் பக்கம் ஹூக் கொடுத்திருக்கிறார்கள். மூடி இல்லாத க்ளோவ் பாக்ஸும் உண்டு. பால் பாக்கெட் வாங்கப் போகும் பார்ட்டிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பூட் ஸ்பேஸும் தாராளமாகத்தான் இருக்கிறது. சார்ஜர் போக சில பொருட்களை வைக்கவும் இடம் இருந்தது. சீட்டைத் திறந்தால், லைட் தானாக எரிவது சூப்பர். லைட்டை ஆஃப் செய்ய பட்டன் கொடுத்திருந்தார்கள்.

 டிஜிட்டல் டிஸ்ப்ளே கசகசவெனக் குழப்பியடிக்கவில்லை. ஆனால் கடிகாரம், ரேஞ்ச் மீட்டர் இருந்திருக்கலாம்.  சிங்கிள் டச் ஸ்டார்ட் அருமை. சிவப்பு பட்டன், டிரைவிங் மோடுக்கானது. 
 ட்யூப்லெஸ் டயர்கள் ஓகே. டிரம் பிரேக்ஸ்தான்.  ப்ளாஸ்டிக்குகள் இன்னும் கொஞ்சம் தரமாக இருந்திருக்கலாம்.
டிஜிட்டல் டிஸ்ப்ளே கசகசவெனக் குழப்பியடிக்கவில்லை. ஆனால் கடிகாரம், ரேஞ்ச் மீட்டர் இருந்திருக்கலாம். சிங்கிள் டச் ஸ்டார்ட் அருமை. சிவப்பு பட்டன், டிரைவிங் மோடுக்கானது. ட்யூப்லெஸ் டயர்கள் ஓகே. டிரம் பிரேக்ஸ்தான். ப்ளாஸ்டிக்குகள் இன்னும் கொஞ்சம் தரமாக இருந்திருக்கலாம்.

இதில் இருக்கும் மோட்டார் பவர் 1,200 Watts. இதன் ஸ்மூத்னெஸ்தான் இதன் ப்ளஸ். 60V, 30Ah லித்தியம் ஐயன் பேட்டரி இருந்தது. வாகனம் வாங்கும்போது, கூடவே சார்ஜிங்குக்கு 60V, 7.5A Li சார்ஜர் தருகிறார்கள். சாதாரண ப்ளக் பாயின்ட் இருந்தால் போதும். ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் விசாரித்தேன். ம்ஹூம். 5-6 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடும் என்கிறது ஆம்பியர். எனக்கு 4.30 மணி நேரத்தில் 85% சார்ஜ் ஏறிவிட்டது. இது ஓகே ரகம்தான். அலுவலகம், வீடு என மாறி மாறி சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

ஆம்பியர் மேக்னஸில் பிடித்த விஷயம் – கார் போன்ற இதன் ரிமோட் கீ. Anti Theft Alarm, Find my scooter, Limp home feature போன்ற வசதிகள் இருப்பது சூப்பர். சாவியிலேயே ஸ்கூட்டரை ஆன், ஆஃப் செய்து கொள்ளலாம்! அதேபோல், கூட்ட நெரிசல் கொண்ட மால்கள் – தியேட்டர்கள் போன்ற பார்க்கிங்கில் ஸ்கூட்டரை ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம்.

சரிவான பள்ளங்களில் ஸ்கூட்டரை பார்க் செய்தால், சரிந்து விழாமல் இருக்க பிரேக் லாக் க்ளாம்ப் கொடுத்திருப்பது அருமை. சரிவுகளில் `பச்சக்’ என நிற்கிறது மேக்னஸ். ஆனால், சிக்னல்களில் சாதாரணமாக பிரேக் பிடிக்கும்போதும் சில சமயம் பிரேக் லாக் ஆகிவிடுவதால், ஆக்ஸிலரேஷனில் திணறுவதும் நடந்தது.

டிரம் பிரேக்ஸ்தான் இருந்தது. 55 கிமீ டாப் ஸ்பீடு கொண்ட ஸ்கூட்டருக்கு டிஸ்க் தேவையில்லைதான். ஆனால், கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொடுத்திருந்தார்கள். பிரேக்கிங்கில் இன்னும் நல்ல ஃபீட்பேக் இருந்திருக்கலாம். ட்யூப்லெஸ் டயர்களும் அருமை. ஆனால், சின்ன வீல்கள்தான். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ என்பது ஓகேதான். மேடு பள்ளங்களில் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. ஆனால், வேகத்தைக் குறைக்காமல் டபுள்ஸ் ஏற்றிக்கொண்டு போனால், சில ஸ்பீடு பிரேக்கர்களில் நிச்சயம் அடிவாங்கும். 150 கிலோ வரை ஏற்றலாம் என்கிறது ஆம்பியர். முன் பக்கம் டெலிஸ்கோப்பிக்கும், பின் பக்கம் காயில் ஸ்ப்ரிங்கும் சஸ்பென்ஷன் செட்-அப்பும் கொடுத்திருந்தார்கள். சில இடங்களில் அதிர்வுகளை நம் உடம்புக்குக் கடத்துகிறது மேக்னஸ்.

ஆர்ப்பாட்டமே இல்லாத ஆம்பியர் மேக்னஸ்!

ஆம்பியர் மேக்னஸ் வாங்கலாமா?

ஆம்பியர் நிறுவனத்தில் இருந்து Reo, Magnus, Zeal, V48 என்று 4 ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கின்றன. மேக்னஸ் கொஞ்சம் காஸ்ட்லி மாடல். நான் ஓட்டிய மேக்னஸ் ப்ரோவின் சென்னை ஆன்ரோடு விலை ரூ.83,500 ரூபாய் வந்தது. இது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான விலை என்பது கொஞ்சம் மைனஸ். இதற்கேற்றபடி யுஎஸ்பி சார்ஜிங், கடிகாரம், ஃபாஸ்ட் சார்ஜிங் என கொஞ்சம் வசதிகளும் சேர்த்திருக்கலாம். முக்கியமாக ரேஞ்ச் மீட்டர் இல்லாதது ரொம்பவும் பயமாகவே இருக்கிறது. பேட்டரி 4 புள்ளிகள் இருக்கும்போது சட்டென 2 புள்ளிகளாகக் குறைவதும் குழப்பியடிக்கிறது.

மற்றபடி மேக்னஸ் ப்ரோ செமையான அனுபவம் தருகிறது. ஃபுல் சார்ஜிங்கில் 75 கிமீ தரும் என்றது ஆம்பியர். ஆனால், மோடு மாற்றி மாற்றி ஓட்டிய என் ஓட்டுதலுக்கு சுமார் 60 முதல் 65 கிமீதான் தந்தது மேக்னஸ்.

விலை அதிகமா இருக்கே என்று ஃபீல் செய்பவர்கள், மேக்னஸிலேயே விலை குறைந்த சாதாரண லெட் ஆசிட் பேட்டரி கொண்ட வேரியன்ட்டையும் ரெஃபர் செய்யலாம். வீட்டில் சார்ஜிங் பாயின்ட் பிரச்னை இல்லாதவர்கள், மழைக்குக்கூட பெட்ரோல் பங்க் பக்கம் ஒதுங்க நினைக்காதவர்கள், சர் புர் எனப் பறக்கலாம் வேண்டாம்; ஓடினால் போதும்’ என்று நினைக்கும் பெண்கள் - நிச்சயம் மேக்னஸ் ப்ரோவை வாங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism