Published:Updated:

மோஜோ... எங்கே சறுக்கியது?

மோஜோ
பிரீமியம் ஸ்டோரி
News
மோஜோ

ஒரு வாகனமாக மோஜோ எப்படி இருந்தது?

இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில், ஒரு பைக் அதிக காலம் டெஸ்ட்டிங்கில் இருந்தது என்றால், அது அநேகமாக மஹிந்திரா மோஜோதான். ஆம், முதன்முதலாக மோஜோவை 2010 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது மஹிந்திரா. இரட்டை சைலன்ஸர், இரட்டை ஹெட்லேம்ப் என முற்றிலும் மாறுபட்ட டிசைனில் இருந்ததால், ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் முழுக் கவனத்தையும் ஈர்த்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2012, 2014 என அடுத்தடுத்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி டுகாட்டியின் ஃப்யூல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம், தங்க நிற USD போர்க்ஸ் என தல- தளபதி படம்போல அப்டேட் விட்டுக் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களோ, கையில் புக்கிங் அமௌன்ட்டை வைத்துக் கொண்டு, ‘‘கடைய எப்போ சார் தொறப்பீங்க?’’ என வெயிட்டிங்கில் வெறி ஆகிக் கொண்டிருந்தனர்.

இது போதாதென்று, 3 ஆண்டுகளாக வந்து கொண்டிருந்த ஸ்பை இமேஜ்களால் ஆட்டோமொபைல் மீடியாக்கள் இது வெடிக்காத வெறுங்குண்டு என சோர்வாக இருந்தன. 5 வருடங்கள் கழித்து 2015 தீபாவளி சீசனுக்கு முன்னதாக ஒருவழியாக விற்பனைக்கு வந்தது மோஜோ.

1.58 லட்சம் எக்ஸ் - ஷோரூம் விலையுடன் டூரிங் செக்மென்ட்டுக்குள் நுழைந்த மோஜோ, அப்போது ஜப்பானிய இன்ஜின் தரத்துடன் ஸ்போர்ட்ஸ் டூரிங் செக்மென்ட்டில் தனக்கென பெஞ்ச்மார்க்குடன் இருந்த ஹோண்டா CBR 250R பைக்கைவிட 2,000 ரூபாய் அதிகமாக இருந்தது.

மோஜோ ட்ரைப் என மோஜோ ஓனர்களை ஒருங்கிணைத்து டூர் கூட்டிச் சென்று, தனக்கென ஒரு பிராண்டை உருவாக்கலாம் என நினைத்திருந்த வேளையில், மோஜோ வெளியாகி 6 மாதத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயனையும், ஒரு வருடத்தில் பஜாஜ் டொமினாரையும் விற்பனைக்குக் கொண்டு வந்ததால், மோஜோ மீது இரட்டைத் தாக்குதல் நிகழ்ந்தது.

மோஜோ... எங்கே சறுக்கியது?

ஒரு வாகனமாக மோஜோ எப்படி இருந்தது?

21 லிட்டர் பெட்ரோல் டேங்க், நிமிர்ந்து உட்கார்ந்து நெடுந்தூரம் ஓட்டக் கூடிய வகையில் இருந்த வசதியான சீட் என டூரிங்குக்கு ஏற்ற பைக்காக இருந்தது மஹிந்திரா மோஜோ. மற்றபடி இதுதான் மோஜோவின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் என மஹிந்திராவின் இன்ஜினீயர்கள்கூட உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், BS–3, BS–4-ல் UT & XT, மோஜோ 300 ABS மற்றும் தற்போது இருக்கும் BS–6 எனக் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மோஜோவின் இன்ஜின், பலவித செயல்திறன் மற்றும் எடை மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

BS–3 வெர்ஷனில் மோஜோ அறிமுகமானபோது, 26.8bhp@8,000RPM மற்றும் 2.94kgm டார்க்கை 6000rpm-ல் வெளியிட்டது. பின்னர் BS-6 வெர்ஷனில் UT மற்றும் XT என இரண்டு வேரியன்ட்டுகளை வெளியிட்டது. இதில் XT முந்தைய மாடலின் அதே சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும், டொமினாரின் விலைக்கேற்ற மதிப்புக்கு ஈடு கொடுக்க UT-ல் சிங்கிள் சைலன்ஸர், USD-க்குப் பதிலாக வழக்கமான டெலிஸ்கோப்பிக் போர்க்ஸ், MRF டயர்கள் என நிறைய காஸ்ட் கட்டிங் சமாச்சாரங் களைச் செய்தது மஹிந்திரா. இவை அனைத்தையும்விடப் பெரிய மாற்றம் UT-ல் கொண்டு வந்த கார்புரேட்டர் ஃப்யூல் சிஸ்டம். XT வேரியன்ட்டின் இன்ஜின் 27BHP மற்றும் 30Nm என்னும் திறன் கொண்டிருக்க, UT வேரியண்ட்டில் 4BHP பவரும்,5Nm டார்க்கும் குறைவாக இருந்தது.

மோஜோ... எங்கே சறுக்கியது?

அடுத்து 2019-ல் கட்டாய ABS விதிமுறைகள் காரணமாக, மீண்டும் ஒரு முறை மாற்றம் அடைந்தது. இம்முறை XT, UT இரண்டு வேரியன்ட்டுகளையும் கலந்து கட்டி மோஜோ 300 ABS என மஹிந்திராவின் ஒற்றை மாடலாக வந்தது. 7,500rpm-ல் 26.29bhp பவரும், 5,500rpm-ல் 2.8kgm டார்க்கும் கொண்டிருந்த இன்ஜினின் செயல்திறன் முந்தைய XT, UT–க்கும் நடுவில் மதில் மேல் பூனையாக இருந்தது. மற்ற சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை UT வேரியன்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தால், சிங்கிள் சைடு எக்ஸ்சாஸ்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் கொண்டிருந்தது.

ABS கொண்டுவர வேண்டிய கட்டாயத்தி னால், அதுவரை பயன்படுத்திய ஜே ஜுவான் பிரேக்குகளுக்குப் பதிலாக ByBre பிரேக்குகளுக்கு மாறியது மஹிந்திரா. இதற்கே தலை சுத்துதா? இனிமேல்தான் பாஸ் BS–6 மாடலே வர இருக்கு.

மோஜோ... எங்கே சறுக்கியது?

சொதப்பல் பட்டியல்

ஒவ்வொரு முறை புதிய விதிமுறை வருகிறபோதெல்லாம், மற்ற பைக் தயாரிப்பாளர்கள் குறைந்தது 3 மாதங்கள் முன்பே தயாராகி விடுவார்கள். ஆனால், மஹிந்திராவைப் பொறுத்தவரை விதிமுறை அமல்படுத்திய பின்னர்தான் ப்ராஜெக்ட்டையே ஆரம்பிப்பார்கள் போல. ஏனென்றால், BS-4, கட்டாய ABS, BS-6 என ஒவ்வொரு விதிமுறையின்போதும், சில மாதங்கள் தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்டு, 3 - 4 மாதங்கள் கழித்துத்தான் மெல்ல விற்பனைக்கு வரும்.

BS-4-ல் அடிபட்ட போதும் மஹிந்திராவை நம்பிய டீலர்கள் வெறுத்துப்போன தருணம் ஏப்ரல் 2019. அப்போதுதான் ஜாவா பிராண்டை மறுவெளியீடு செய்திருந்ததால், நஷ்டத்தில் இயங்கிய மஹிந்திரா மோஜோவின் தயாரிப்பை நிறுத்தலாமா வேண்டாமா என முடிவு எடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருந்தது. BS-6 விதிமுறைகள் அமலாக்கப்பட்ட பின்னர் ABS பைக் ஏதும் இல்லாததால், பூஜ்ய விற்பனையால் டீலர்ஷிப்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இத்துடன் தமிழகத்தில் இருந்த அனைத்து மஹிந்திரா இருசக்கர ஷோரூம்களும் மூடப்பட்டன.

இன்று உங்களுக்கு மோஜோவின் தனித்தன்மையான டிசைன் பிடித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் மோஜோ வாங்க வேண்டும் என்றால், ஒன்று பெங்களூரு அல்லது கொச்சி செல்ல வேண்டும். அப்படியே வாங்கி வந்தால்கூட சர்வீஸ், ஸ்பேர்ஸ் ஒவ்வொரு முறையும் பெங்களூருவுக்குத்தான் ஓட வேண்டும்.

மோஜோ மார்க்கெட்டுக்குள் நுழைந்த பின்னர்தான் ெடாமினர், ஹிமாலயன் போன்ற டூரிங் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று பஜாஜ் வருடத்திற்குக் கிட்டத்தட்ட 20,000 ெடாமினர்களை விற்பனை செய்கிறது. தவறான நிர்வாகம், அதிக விலை மற்றும் குறைந்த சர்வீஸ் நெட்ஒர்க் போன்றவை இல்லாமல், மஹிந்திரா சரியான முனைப்பு காட்டி இருந்தால், இதில் பாதி இல்லையென்றாலும் கால்வாசி அளவாவது மோஜோ விற்பனையாகிருக்கும்.