சோலோ ரைடிங் நன்றாகத்தான் இருக்கும்; ஆனால், நண்பர்கள் சேர்ந்தால்தானே அமளிதுமளி பண்ணலாம் என்று - மோ.வி வாசகர்களும் ரைடிங்குக்கு என்றே பிறந்தவர்களுமான கபில், கோகுல் இருவருக்கும் வாட்ஸ்அப் செய்தேன்.

`எங்கே போகலாம்’ என்று குரூப்பில் பேசிக் கொண்டபோது, ரியல் எஸ்டேட் விளம்பரம் மாதிரி, ‘சென்னைக்கு மிக அருகில்’ இருக்க வேண்டும்; ஒரே நாளில் ட்ரிப்பை முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் அஜெண்டாவாக இருந்தது. சென்னைக்கு 100 கிமீ தொலைவில் உள்ள மாமண்டூர் குகைகளுக்கு ஒரு வரலாற்று விசிட் அடிக்கலாம் என்று, அதிகாலைப் பொழுதில், ஒரு BS-6 ஹிமாலயன், BS-4 ஹிமாலயன், ஒரு மீட்டியார் என மூன்று ராயல் என்ஃபீல்டுகளையும் கிளப்பினோம்.

‘சூரிய உதயம்’ பார்க்க கன்னியாகுமரியோ, பெரிய மலைப்பிரதேசங்களோதான் போக வேண்டும் என்றில்லை. சென்னைக்கு மிக அருகிலேயே சூரிய உதயத்தோடு ஒரு செல்ஃபியும் டிகிரி காபியுமாக எங்கள் பயணம் தொடர்ந்தது. மாமண்டூருக்கு இரண்டு வழிகள் உண்டு. நாங்கள் ஒரகடம் வழியைத் தேர்ந்தெடுத்தோம். காரணம், ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை.

மூன்று பேரிடமுமே ராயல் என்ஃபீல்டு பைக்குகள்தான் என்பதாலோ என்னவோ, தானாகவே தாங்கள் பிறந்த வீட்டுக்கு முன்பு மூன்று பைக்குகளும் நின்றன. ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை. தொழிற்சாலையை அங்கப்பிரதட்சனம் செய்வதுபோல் ஒரு ரவுண்டு.

காஞ்சிபுரம் தாண்டி 15 கிமீ–ல் மாமண்டூர்! போகும் வழியே செமையாக இருந்தது. நெடுஞ்சாலைகளில் ராயல் என்ஃபீல்டுகள் ஒரு ரகம் என்றால், ஆஃப்ரோடு ஏரியாக்களில் இன்னொரு முகம் தெரிகிறது. எனக்குத் தெரிந்து மீட்டியாரைவிட ஹிமாலயன் பைக்குகள்தான் உற்சாகமாகி இருக்க வேண்டும். அதிகபட்ச கி.கிளியரன்ஸ், அட்வென்ச்சருக்கே அளவெடுத்துச் செய்யப்பட்ட ரைடிங் பொசிஷன் என்று கற்கள் புற்கள் சேறு சகதியைப் பற்றிக் கவலைப்படாமல் சென்றன ஹிமாயலன்கள். கூடவே செம்மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தது மீட்டியார்.

மாமண்டூர் குகையை நெருங்கும்போதே வரலாற்று வாசம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

இந்தக் குகைகளில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த மாமண்டூர், மாமல்லபுரத்துக்கெல்லாம் 100 வருஷம் மூத்த அண்ணன் என்று சொல்லலாம். ஆம், மாமல்லபுரம் கி.பி 700–ல் கட்டப்பட்டது என்றால், மாமண்டூர் குகைகள் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர பல்லவ வர்மன் காலத்தில் கட்டப்பட்டதாம். மொத்தம் இங்கே 4 குகைகள். ஒவ்வொரு குகைக்கும் ஒவ்வொரு வரலாறு.

சில படிகள் ஏறி முதல் குகையை அடைந்தோம். முதல் குகையில் மொத்தம் 4 தூண்கள் இருந்தன. கீழே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். பல்லவர்களின் கலை நுணுக்கம் ஒவ்வொரு குகையிலும் தெரிந்தது.

இரண்டாவது குகைக்கும் மூச்சு வாங்கப் படியேறினோம். பொதுவாகவே எங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். மூச்சு வாங்கியது பெரிதாகத் தெரியவில்லை. அர்த்த மண்டபம், முக்த மண்டபம் என்று பிரித்திருந்தார்கள். பராந்தக சோழனின் கல்வெட்டு இரண்டு செதுக்கியிருந்தார்கள்.

மூன்றாவது குகைக்கும் மூச்சு வாங்கப் படியேறினோம். இதுதான் கொஞ்சம் பெருசாக இருந்தது. தூண்களில் ஏகப்பட்ட விரிசல்கள். இன்னும் முடிக்கப்படாமலேயே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான்காவது குகைதான் இங்கிருப்பதிலேயே சின்னதாக இருந்தது. இதுவும் நிறைவடையாமலேயே இருந்தது.

வரலாற்று வாசத்தை நுரையீரல் வரை நுகர்ந்துவிட்டு, அப்படியே குகைக்குப் பின்னால் போனோம். பெரிய ஏரி இருந்தது. ‘ஹிமாலயனை வெச்சுக்கிட்டு இப்படிப்பட்ட ஏரியில் ஆஃப்ரோடு பண்ணலேனா எப்படி’ என்று எங்களுக்கே ஒரு மாதிரி இருந்தது. ஏரிக்குள் செமையான அட்வென்ச்சர்.

அட்வென்ச்சர் ப்ளஸ் வரலாறு – இரண்டுக்கும் சேர்த்து அந்த ஞாயிறை ஒப்படைத்த திருப்தியில் மறுபடியும் புல்லட்களை சென்னை நோக்கி விரட்டினோம்.ராயல் என்ஃபீல்டுகளில் ஒரு அட்வென்ச்சர் ட்ரிப்!