Published:Updated:

``பைக் நமக்கு வேலை வைக்காது... நாம்தான் பைக்குக்கு வேலை வைப்போம்!”

மெக்கானிக் சிவா
பிரீமியம் ஸ்டோரி
மெக்கானிக் சிவா

பாண்டிச்சேரி மெக்கானிக் சிவா

``பைக் நமக்கு வேலை வைக்காது... நாம்தான் பைக்குக்கு வேலை வைப்போம்!”

பாண்டிச்சேரி மெக்கானிக் சிவா

Published:Updated:
மெக்கானிக் சிவா
பிரீமியம் ஸ்டோரி
மெக்கானிக் சிவா

பாண்டிச்சேரியில் பீச்சுக்கு அப்புறம் பிரபலமானவர் மெக்கானிக் சிவராமன். ‘மெக்கானிக் சிவா’ என்று கூகுளில் தேட முடியவில்லை; ஆனால் பாண்டிச்சேரிக்குப் போனால் ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம். புதுச்சேரி லலிதா மஹால் எதிரில் உள்ள தனது பைக் ஒர்க்‌ஷாப்பில் ஸ்பானரும் கையுமாக சிவாவைப் பிடித்தேன்.

``என் 13 வயதில் ஹெல்ப்பராகத்தான் ஸ்பானர் பிடித்தேன். எல்லா பைக்கையும் ஒரு கை பார்த்துடணும் என்பதுதான் என் லட்சியமா இருந்துச்சு. சும்மா இல்லை பாஸ்... இதுக்கு எனக்கு 7 வருஷம் ஆச்சு!” என்று ஆரம்பித்த சிவா, இப்போது BS-4 பைக்ஸ், BS-6 பைக்ஸ், க்ளாஸிக் பைக்ஸ், ஸ்கூட்டர் என ஒரு மல்ட்டி பிராண்ட் பைக் மெக்கானிக்.

``நான் முதலில் சர்வீஸ் கத்துக்கிட்ட வண்டி டிவிஎஸ் 50. அதுக்கப்புறம் பஜாஜ் சேட்டக், கைனடிக் ஹோண்டா, ஹீரோ மெஜஸ்டிக்னு எல்லாமே கழட்டி மாட்டினேன். இப்போ அந்த வண்டி இந்த வண்டினு இல்லைங்க.. எல்லா வண்டியையும் ஒரு கை பாத்துடுவேன்.

``பைக் நமக்கு வேலை வைக்காது... நாம்தான் பைக்குக்கு வேலை வைப்போம்!”


எந்த வண்டியுமே நமக்கு வேலை வைக்காது. நாமதான் அதுக்கு வேலை வைக்கிறோம். வண்டியை நாமதான் நல்ல கண்டிஷன்ல பாத்துக்கணும். உதாரணமா, என் வாடிக்கையாளர் ஒருத்தர், ஆக்சஸ் ஸ்கூட்டர் வெச்சிருந்தார். இன்ஜின் ஆயில் மாத்தாம, கிட்டத்தட்ட 6,000 கிமீட்டர் ஓட்டிட்டாரு. அவ்ளோதாங்க... அருமையான இன்ஜின் சீஸ் ஆகிடுச்சு. அப்புறமென்ன... 4,000 ரூபாய் செலவு இழுத்துடுச்சு. இதை எதுக்குச் சொல்றேன்னா, வெறும் 400 ரூபா செலவு பண்ண யோசிச்சா இப்படித்தான் ஆகும். தயவுவெஞ்சு பைக் விஷயத்துல சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டிடுங்க!” என்கிறார்.

பொதுவாக வீடு... ஒர்க்‌ஷாப் - இப்படித்தான் மெக்கானிக்குகளின் ரொட்டீன் வாழ்க்கை இருக்கும். ஆனால், சிவாவை புது பைக் லான்ச் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பார்க்கலாம். இது தவிர, அஸோஸியேஷன் மீட்டிங் எனவும் பிஸியாக இருக்கிறார். நேற்று வரை எந்த பைக் லான்ச் ஆனது, 2021-ல் வரப்போகும் பைக்குகள் என்னென்ன என்று எல்லாமே `சட் சட்’ என ஸ்பானர் டிப்ஸில் வைத்திருக்கிறார்.

``பைக்ஸ் மட்டும்தான் அப்டேட் ஆகணுமா... மெக்கானிக்ஸ் ஆகக் கூடாதா? அதான் அப்டேட்டா ஆக்கிப்பேன். Fuel Injection, டிஸ்க் பிரேக்ஸ் சர்வீஸ் என எல்லா டெக்னாலஜியும் எனக்கு இப்போ அத்துப்படி.

என்கிட்ட வர்ற ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் நான் சில டிப்ஸ் சொல்லுவேன். அவங்க மாசம் ஒரு தடவை அல்லது சர்வீஸ் ஷெட்யூலின்படி வருவாங்க. அப்போ அவங்ககிட்ட ஃபீட்பேக் கேட்பேன். `ஒரே ஒரு நாள் சர்வீஸ் செய்தோம்; மீதம் அறுபது நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜாலியாக ரைடு செய்தோம்’ என்பார்கள். என்னோட கஸ்டமர்ஸ் சில பேரு, பைக் வாங்கி நான்கு வருஷங்களுக்கு மேல் ஆகியும், ஒரு தடவைகூட பைக் பிரேக் டவுனாகி வழியில் நின்னது இல்லைனு சொல்லும்போது இருக்கும் சந்தோஷமே வேற லெவல் பீல்! ஏன்னா, இந்த 20 வருஷத்தில் என்னோட ரெகுலர் கஸ்டமர்ஸ்தான் நான் சேர்த்து வெச்ச சொத்து!” என்கிறார் சிவா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism