Published:Updated:

புல்லட் ஓட்டுறதைவிட கழட்டி மாட்டுறதுதான் பிடிக்கும்!

ராசுக்குட்டி ஒர்க்ஷாப் மதன்
பிரீமியம் ஸ்டோரி
ராசுக்குட்டி ஒர்க்ஷாப் மதன்

நம்ம ஊரு மெக்கானிக்: புதுக்கோட்டை

புல்லட் ஓட்டுறதைவிட கழட்டி மாட்டுறதுதான் பிடிக்கும்!

நம்ம ஊரு மெக்கானிக்: புதுக்கோட்டை

Published:Updated:
ராசுக்குட்டி ஒர்க்ஷாப் மதன்
பிரீமியம் ஸ்டோரி
ராசுக்குட்டி ஒர்க்ஷாப் மதன்
ராசுக்குட்டி ஒர்க்ஷாப் மதன்
ராசுக்குட்டி ஒர்க்ஷாப் மதன்

புதுக்கோட்டையில் புல்லட் பைக்குக்கு என்று பிரத்யேகமான சர்வீஸ் ஒர்க்க்ஷாப்கள் பல இருந்தாலும், அசோக் நகரில் உள்ள ராசுக்குட்டி என்ஃபீல்டு ஒர்க்க்ஷாப், புல்லட் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. சர்வீஸ், ரீ-டிசைன், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் என்று லேட்டஸ்ட் மாடல் புல்லட்களைப் பிரித்து மேய்கின்றனர் இங்கே! புல்லட் ரீ-டிசைன் செய்ய விரும்புவோரின் ரைட் சாய்ஸாகவும் இது இருக்கிறது. ஆரம்பித்த குறுகிய காலத்துக்குள் 300–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் என பரபரப்பாக இயங்குகிறது. மிகுந்த போராட்டத்துக் கிடையே இந்த ஒர்க்க்ஷாப்பை அமைத்திருக்கிறார் உரிமையாளர் மதன்.

‘‘கோச்சுக்காதீங்க… இன்னைக்கு இந்த புல்லட்டுக்கு டியூ டேட். முடிச்சிக் கொடுக்கணும்’’ என்று சர்வீஸ் செய்து கொண்டே மதன் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

"நான் பொறந்து வளர்ந்தது எல்லாம், மறமடக்கி. எங்க பெரியப்பா ரொம்ப வருஷமா சென்னையில சைக்கிள் கம்பெனி வச்சிருந்தாரு. சின்ன வயசுல லீவுக்கு எல்லாம் அங்க போயிடுவேன். அங்கதான் டூவிலருக்கு மொத மொதலா பஞ்சர் ஒட்டக் கத்துக்கிட்டேன். அப்படித்தான், இந்த ஃபீல்டுக்குள்ள வந்தேன். எல்லாருக்கும் மாதிரி எனக்கும் புல்லட் ரொம்பவே பிடிக்கும். என்னோட சின்ன வயசு விளையாட்டுச் சாமான்லகூட பாதி புல்லட், பைக்காதான் இருக்கும். ‘ராசுக்குட்டி’ படத்துல ஹீரோ புல்லட்ல வருவாரு. அதைப் பார்த்துட்டு, அந்தப் படத்துக்குப் பிறகு எங்க பகுதியில இருக்கவங்க எல்லாரும் என்னை ‘ராசுக்குட்டி’ன்னுதான் கூப்பிடுவாங்க. அதையே என்னோட ஒர்க் ஷாப்புக்கும் பெயரா வெச்சிட்டேன்.

பள்ளிப்படிப்பு முடிஞ்சு சென்னையிலயே தங்கி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிச்சேன். படிச்சிக்கிட்டே பஞ்சர் ஒட்டுறது, செயின் டைட் பண்றது, பிரேக் ஷூ மாட்றதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். சைக்கிள் கம்பெனியைச் சின்ன மெக்கானிக் ஷெட்டா மாத்திட்டேன். அந்த நேரத்துலதான் புல்லட் ஒண்ணு பஞ்சருக்கு வந்துச்சு. பெரியப்பா மட்டுமில்லாம, பக்கத்துல இருந்த மெக்கானிக் ஷெட்க்காரங்க யாரும் கழட்டி பஞ்சர் ஓட்டலை. அதுல கொஞ்சம் வேலை அதிகம்ங்கிறதால யாரும் ஒட்டத் தயங்கனாங்க. நான் அப்போ ரிஸ்க் எடுத்து அதைக் கழட்டி மாட்டுனேன்.

அதற்கப்புறமே, புல்லட் மீதான ஆர்வம் அதிகமாயிருச்சு. புல்லட் ஓட்டிப் பார்க்கணும்ங்கிற ஆசை போய், புல்லட் சர்வீஸ் பிரத்யேகமா கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். சென்னையில ஒரு புல்லட் மெக்கானிக் ஷெட்ல வேலை பார்த்துக் கொஞ்சம் வேலை கத்துக்கிட்டேன். அதற்கப்புறம், புதுக்கோட்டையில இருக்கிற புல்லட் ஷோரூம்ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதான் விக்கி, மன்சூர் ரெண்டு பேரோட பழக்கம் கிடைச்சது. அவங்க தான் எனக்கு ஆஸ்தான குருவாகவும் இருந்து என்னை மெருகேத்துனாங்க.

இதற்கிடையில, அங்கயிருந்து வெளிய வந்துட்டேன். அதற்கப்புறம் ஆக்சஸரீஸ் பத்தியும் , ரீ-டிசைன் ஒர்க் பத்தியும் கத்துக்கிட்டேன். 2017–ல் நகைகளை வச்சி அடகு வச்சி, ஆக்சஸரீஸ் ஷாப்போட ராசுக்குட்டி புல்லட் ஒர்க் ஷாப்பை ஆரம்பிச்சேன். விக்கி, மன்சூர், நான் 3 பேரும் சேர்ந்து கடுமையா உழைச்சோம். கொஞ்சம், கொஞ்சமா வாடிக்கையாளர்கள் அதிகமானாங்க. ஒரிஜினல் ஸ்பேரோட, தெளிவான வேலை செஞ்சி கொடுக்கணும்ங்கிறதுல மூணு பேரும் ரொம்ப தெளிவா இருப்போம். சர்வீஸ் செஞ்சு முடிச்சி திருப்தி இருந்தா மட்டும்தான் வண்டி டெலிவரி கொடுப்போம். ரீ-டிசைனிங்கைப் பொறுத்தவரைக்கும் எங்ககிட்ட 30–க்கும் மேற்பட்ட சைலன்ஸர்கள் மாடல் இருக்கு. கஸ்டமர்களும் புதுசு புதுசா டிசைன் பண்ண விரும்புறாங்க. அவங்களே நெட்ல எல்லாம் தேடி இந்த மாதிரி வேணும்னு, கேட்கிறாங்க. சட்டத்துக்கு உட்பட்டு இருந்தா மட்டும்தான் பண்ணுவேன். அதற்கேற்ப நானும் அப்டேட் ஆகிக்கிட்டு இருக்கேன். என்ஃபீல்டு மட்டுமில்லாம, பல்ஸர், ஸ்ப்ளெண்டர்னு எல்லாத்தையும் மாத்திக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். ஆவரேஜான கூலிதான் வாங்குறேன்!’’ என்று நமக்கு ‘பை’ சொல்லிவிட்டு, சர்வீஸ் செய்த புல்லட்டை ‘தட் தட்’ என எடுத்துக் கிளம்பிவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதனின் புல்லட் டிப்ஸ்!

புல்லட்டுக்கு அதிகபட்சம் 4,000 கிமீதான். அதுக்கு மேல ஓடிருச்சின்னா கண்டிப்பா ஆயில் மாத்திடணும்.

வாரத்துக்கு ஒரு தடவை செயினுக்கு ஆயில் விடுறதும் அவசியம். மாசத்துக்கு ஒருமுறை பிரேக், கேபிள், ஸ்பார்க் பிளக் இது எல்லாத்தையும் செக் பண்ணிடுங்க!

புல்லட்டில் லாங் ரைடு, ட்ரெக்கிங் போறவங்க, ஒருமுறை புல்லட் மெக்கானிக்கை அணுகி, என்னென்ன ஸ்பேர் வெச்சுக்கணும், எப்படி ஓட்டணும்னு ஐடியா கேட்டுக்கிட்டுப் போவது ரொம்பவே நல்லது.

அதே மாதிரி புல்லட் ரீ–டிசைனைப் பொருத்தவரை கன்னா பின்னானு மாத்தாம, சட்டத்துக்கு உட்பட்டு எப்படிப் பண்ணணுமோ, அப்படிப் பண்ணுங்க!