கடந்த மார்ச் மாதம், உலகின் பழைமையான மோட்டார் சைக்கிள் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு, அதன் மிகப் பழைமையான 500சிசி இன்ஜினை நிறுத்திவிட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. கிட்டத்தட்ட 1920-களின் மத்தியில் முதல் முதலாக வந்த இன்ஜின் இது. நூறு ஆண்டுகளைத் தொட்ட இந்த இன்ஜினை வரலாறு என்றும் மறக்காது.

போருக்கு முந்தைய போராளி!

ராயல் என்ஃபீல்டின் 500cc இன்ஜின் பொருத்தப்பட்ட முதல் பைக் The Model 500. 1927-ம் ஆண்டு, அதாவது முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு வந்த பைக் இது. அப்போது இதன் விலை 52 யூரோ (அப்போது யூரோவே இல்லை என்பது வேறு விஷயம்).

முதல் 500 மாடலே ராயல் என்ஃபீல்டுக்கு செம ஹிட். இரண்டு ஆண்டுகள் கழித்து 505 வந்தது. ராயல் என்ஃபீல்டின் முதல் OHV தொழில்நுட்பத்தோடு வந்த பைக்.

1930-ம் ஆண்டில்தான் இந்த இன்ஜினில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அப்போது வந்த Dry sump லூப்ரிகேஷன் சிஸ்டமும், ஆயில் பம்ப் முறையும் அடுத்த 78 ஆண்டுகளுக்கு மாறவில்லை. 1932, ராயல் என்ஃபீல்டின் செல்லப்பிள்ளை புல்லட் விற்பனைக்கு வந்த காலம். LF500 எனும் அதிக திறன் கொண்ட இன்ஜினோடு வந்ததால்தான், நூறு ஆண்டுகள் கழித்தும் யாரும் மறக்க முடியாதபடி தன் பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. இந்த இன்ஜினில் வந்த 4 வால்வ் சிஸ்டம் அப்போதே 25bhp பவர் கொடுத்தது. தற்போது நிறுத்தப்பட்ட பைக்குடன் ஒப்பிட்டால் வெறும் 2.7bhp மட்டுமே குறைவு.

இவ்வளவு பவரா என்று வாயைப் பிளக்க வேண்டாம். இந்த பவரும் அவர்களுக்குப் போதவில்லை. அதிக கம்ப்ரஷன் உருவாக்கும் பிஸ்டன், நீளமான-நேரான எக்ஸாஸ்ட் என்று இந்த பைக்குக்கு ஒரு பிரத்தியேக ரேஸிங் கிட் உருவாக்கினார்கள். இதனால், பவர் 29bhp என அதிகரித்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த இன்ஜினில் கூலிங்கை அதிகப்படுத்தப் பெரிய ஃபின்ஸ் வைத்தார்கள். ஆயில் கெப்பாசிட்டியை அதிகரித்தார்கள். பைக் ரேஸ்களின் நரகம் எனப்படும் Isle of man TT போட்டியில் இந்த பைக் கலந்துகொண்டது. முதல் ஆண்டு பயன்படுத்தப்பட்ட இரண்டு பைக்கும் ரேஸை முடிக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு Cecil Barrow எனும் ரேஸர் இந்த பைக்கில் 8-வது இடம் பிடித்தார். ஆவரேஜ் வேகமே 119 கி.மீ.

LF இன்ஜின் என்னதான் சிறப்பானதாக இருந்தாலும், ஆயில் லீக் எனும் கோளாறு இருந்தது. இதனால், 1935-ல் மூன்று வால்வ் செட்டப் உடன் ராக்கர் மற்றும் வால்வ் கியருக்கு கேஸிங் அமைத்து, இன்ஜினில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.

இதை 500 LO என்பார்கள். இதில் பவர் குறைவாக இருந்ததால், அடுத்த ஆண்டே JF500 என்ற புது இன்ஜினை உருவாக்கினார்கள். இன்ஜின் மட்டுமில்லை; டபுள் கிராடில் ஃபிரேம், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் என 1936-ல் அசத்திய பைக் அது. இந்த பைக்கை பிரிட்டிஷ் அரசு இரண்டாம் உலகப் போருக்குப் பயன்படுத்தியது.

போருக்குப் பிந்தைய காலகட்டம்

உலகப்போர் முடிவுக்கு வந்த பின் 1959-ம் ஆண்டு, ராயல் என்ஃபீல்டு கொண்டுவந்த முதல் இன்ஜின் JS 500. 20 ஆண்டுகளுக்கு முன் வந்த அதே J பிளாட்ஃபார்ம்தான். இந்த முறை அதிக பர்ஃபாமன்ஸ் வெளிப்படுத்தியது. மணிக்கு 146 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியதாக இருந்தது புது 500சிசி புல்லட். கடைசியாக, ராயல் என்ஃபீல்டின் ரெட்டிச் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இதுதான்.

1962-ல் தொழிற்சாலை மூடப்பட்ட பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ராயல் என்ஃபீல்டின் கேட்டலாக்கில் 500 இல்லை. 1956-ல் சென்னையில் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது, 350சிசி பைக்குகள் மட்டும் உருவாக்கப்பட்டன. இன்டர்நேஷனல் சந்தையில் பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு மட்டுமே மதிப்பு என்று தெரிந்து கொண்டு, கடைசியாக 1989-ல் மீண்டும் தனது 500சிசி இன்ஜினைக் களம் இறக்கினார்கள். பழைய J பிளாட்ஃபார்ம் இன்ஜின்தான். ஆனால் காயில் இக்னிஷன், ஆல்டர்நேட்டர் எனக் காலத்துக்கு ஏற்ப மாறியிருந்தது. சேஸி மற்றும் அல்பேனியன் கியர்பாக்ஸ் 350சிசி இன்ஜினில் இருந்து எடுக்கப்பட்டது.

என்ஃபீல்டுக்கு இது பெரிய வெற்றியில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து 2004-ல் ‘Lean Burn’ 500 இன்ஜினை உருவாக்கினார்கள். ஆஸ்திரிய நிறுவனமான AVL, இந்த இன்ஜினை உருவாக்கிக்கொடுத்தது. ராயல் என்ஃபீல்டு கமல்-ரஜினி காலத்தில் இருந்து விஜய்-அஜித் காலத்தில் நுழைந்த தருணம் அது.

மாடர்ன் இன்ஜின்

AVL இன்ஜினும் பெரிய வெற்றி இல்லை. என்ஃபீல்டுக்குத் தனது ஐரோப்பிய ஸ்டைல் புஷ் ராட் இன்ஜினை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. ஆனால், கடுமையான எமிஷன் விதிகள் காரணமாக வேறு வழியில்லாமல், 2008-ல் UCE 500 இன்ஜினைக் கொண்டுவந்தார்கள். ஹைட்ராலிக் வால்வ் லிஃப்ட் தொழில்நுட்பம், ஃப்யூல் இன்ஜக்ஷன், crank case உடன் அட்டாச் செய்யப்பட்ட கியர்பாக்ஸ் எனப் பல விஷயங்கள் இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. UCE இன்ஜின் பொருத்திய க்ளாஸிக் 500, இதுவரை ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்ததிலேயே பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு விற்பனையைக் கொடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதே இன்ஜினில் புல்லட், தண்டர்பேர்டு பைக்குகளும் வந்தன.

இந்த 500சிசி இன்ஜின்தான், ராயல் என்ஃபீல்டின் மறுபிறவிக்கு வழி அமைத்துக் கொடுத்தது. இவை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பறந்தன. ரைடிங் என்பதை பைக் இல்லா இந்தியரின் மனதிலும் ஆழமாகப் பதிய வைத்த பெருமை இந்த இன்ஜினுக்கு உண்டு. சென்னையில் வசிக்கும் சுபாஷ் சந்திரபோஸ், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ரேஸில் பயன்படுத்தியவர். இந்த பைக்குகளோடு இவருக்குப் பல ஆண்டு தொடர்பு இருப்பதால், இவரை புல்லட் போஸ் என்று செல்லமாக அழைக்கிறார்கள். UCE இன்ஜின் வந்தபோது, அதன் FI சிஸ்டம் மொத்தத் திறனையும் வெளிப்படுத்தவில்லை. இதனால், UCAL நிறுவனத்துடன் இணைந்து இந்த பைக்குக்குப் புது கார்புரேட்டர் கிட் ஒன்றை அமைத்துக் கொடுத்தார். இந்த கார்புரேட்டரின் பர்ஃபாமன்ஸைப் பார்த்து, என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்கின் இன்ஜினில் கார்புரேட்டர் மவுன்ட் மற்றும் பெட்ரோல் டேங்க் உட்படப் பல விஷயங்களை மாற்றியமைத்தது. இதனால், கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர்கூட இந்த பைக்குக்குத் தேவைப்படவில்லை.

ராயல் என்ஃபீல்டு, தனது நவீன 500சிசி பைக்குகளை வாங்குபவர்களுக்கு இன்ஜினை டியூன் செய்து பரிசோதிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தது. இதனால், ராயல் என்ஃபீல்டு வெறும் ஓனர்களை மட்டுமல்ல; ரைடர்களையும் உருவாக்கியது.

இப்போது, க்ளாஸிக் 500 நிறுத்தப்படுவதற்கு எமிஷன் நார்ம்ஸ் மட்டும் காரணமில்லை. புது 650 ட்வின் பைக்குகளுக்கு அருகில் இதன் விலை இருந்ததும் முக்கிய காரணம். என்ஃபீல்டு பைக்குகளின் இன்ஜினீயரிங் சர்வதேச அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், 500 கொடுத்த மெக்கானிக்கல் அனுபவங்கள் என்பது என்றும் மறக்க முடியாத விஷயம். ராயல் என்ஃபீல்டின் 119 ஆண்டு வரலாற்றில், எத்தனையோ தொழில்நுட்பங்களையும், பல கோடி காதல் கதைகளையும் பார்த்த இந்த இன்ஜினுக்கு காதலோடு ஒரு குட்பை.