Published:Updated:

மலைக்கு-ம்- பயணம்!

பைக்
பிரீமியம் ஸ்டோரி
பைக்

பயணம் சென்னை to லடாக்

மலைக்கு-ம்- பயணம்!

பயணம் சென்னை to லடாக்

Published:Updated:
பைக்
பிரீமியம் ஸ்டோரி
பைக்

பைக்கர்களுக்குப் புனித யாத்திரை என்றால் அது `லடாக்' பயணம்தான். இமயமலையில் மனிதன் தொட்ட உயர்ந்த சிகரம் எவரெஸ்ட். ஆனால் அங்கு பைக்குகள் போகாது.

மலைக்கு-ம்- பயணம்!

பைக்குகள் போகும் அளவு இமயமலையில் உயரமான இடம் கார்துங்லா. இந்த கார்துங்லாவுக்கு பைக்கர்களைக் கூட்டிப்போவதுதான் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் ஒடிசி. இந்த முறை ஹிமாலயன் ஒடிசியில் லடாக் வரை ராயல் என்ஃபீல்டோடு மோட்டார் விகடனும் கலந்து கொண்டது.

ஹிமாலயன் ஒடிசியில், ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். மொத்தம் 18 நாள். சண்டிகரில் இருந்து தொடங்கி அங்கேயே முடிகிறது இந்தப் பயணம். இதற்கு 40,000 ரூபாய் செலவாகும். இந்த ஆண்டு மொத்தம் 54 ரைடர்கள் பங்கேற்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இமயமலை போன்ற அட்வென்ச்சர் பயணங்களுக்கு CE லெவல் ரேட்டிங் ஆர்மர் இருக்கும் ரைடிங் கியர் அவசியம். ஹெல்மெட்டைப் பொருத்தவரை ISI போதுமானது. ஆனால், DOT அல்லது ECE சான்றிதழ் இருந்தால் நல்லது.

பயணம் போகிறவர்கள் முதலுதவியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

மலைக்கு-ம்- பயணம்!

பயணத்துக்கு BS-4 ஹிமாலயன் ஸ்லீட் பயன்படுத்தினோம். இது கொஞ்சம் ஸ்பெஷல் பைக். 20% எடை குறைவான, அதேசமயம் ஸ்டாக்கைவிட வலுலான அலுமினியம் ஹேண்டில்பார், அதற்கேற்ற பார் எண்டு, அதிக நேரம் உட்கார்ந்து பயணிக்க தெர்மோ சீல் கொண்ட டூரிங் சீட்டுகள், வலுவான ஸ்டீலால் உருவாக்கப்பட்ட பேனியர் கிட் மற்றும் 26 லிட்டர் அளவு கொண்ட அலுமினியம் பேனியர்கள், 22 மிமீ தடிமனான எளிதில் துருப்பிடிக்காத இன்ஜின் கார்டு போன்றவை இந்த பைக்கில் பொருத்தப் பட்டிருந்தன.

மலைக்கு-ம்- பயணம்!

கூடுதலாக K&N பர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்ட்டரும், ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பைப்பும் இருந்தன. ஃபில்ட்டர் மற்றும் எக்ஸாஸ்ட் தவிர்த்து அனைத்துப் பொருள்களும் ஹிமாலயன் GMA கிட் என்று கேட்டால் கிடைக்கும். இமயமலையின் கம்பீரத்துக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இந்த பாகங்கள் ஹிமாலயனுக்கு வலுச் சேர்த்தன.

முதல் ஸ்டாப் மணாலி. இது சண்டிகரில் இருந்து 306 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

மணாலியை நெருங்க நெருங்க வழிகாட்டும் போர்டுகளில் இருந்து ஆங்கிலம் மறைந்தது. மணாலியை நெருங்கிவிட்டால் இந்தி தெரிந்தவர் களுக்கு மட்டுமே ரூட் தெரியும். முஜே ஹிந்தி அச்சி தரஃப் சே நஹி ஆத்தா ஹை!

இந்த ஆண்டு ஒடிசியில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 15 ரைடர்கள் வந்திருந்தனர். இதில் மதுரையில் இருந்து வந்தவர்கள் மட்டுமே 12 பேர்.

மலைக்கு-ம்- பயணம்!

முதல் நாள் ரைடு முடிந்து மணாலியில் தங்கும் இடத்துக்கு வந்திருந்தபோது, நேரம் இரவு 7.30. ஆனால், மாலை 4 மணி போல சூரியன் கதிர்களை நீட்டிக் கொண்டிருந்தது.

இரண்டாம் ஸ்டாப் கெலாங். முழுவதும் மலைப்பாதையில் பைக் ஓட்டவேண்டும் என்பதால் வெறும் 116 கி.மீ மட்டுமே இலக்கு!

கெலாங் செல்லும் வழியில் 13,052 அடி உயரத்தில் இருக்கும் ரோத்தங் பாஸ் எனும் இடத்தில் பனிச் சறுக்கு முதல் பாரா கிளைடிங் வரை சாகச விளையாட்டுகள் நிறைய உண்டு.

மலைக்கு-ம்- பயணம்!

வழியில் நிறைய செக்போஸ்ட்கள் இருந்தன. செக்போஸ்ட்டுகளில் லைசென்ஸைக் காட்டி பைக் நம்பரையும், பெயரையும் பதிவு செய்வது கட்டாயம்.

ஒடிசியில் பங்கேற்கும் பைக்கர்களுக்குத் துணையாக ஒரு Gunwagon வருகிறது. இதில் பைக்குகளுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ், வண்டியை எடுத்துச் செல்லும் வசதி என என அனைத்தும் இருக்கும். கூடவே ஒரு மெக்கானிக் அண்ணனும் வருவார்.

மலைக்கு-ம்- பயணம்!

கெலாங்கிற்கு 9 கி.மீக்கு முன் LPG Filling station என்ற பெட்ரோல் பங்க் உண்டு. இதைத் தாண்டிவிட்டால் அடுத்த 365 கி.மீ தூரத்துக்கு பெட்ரோல் பங்க் கிடையாது.

மலைக்கு-ம்- பயணம்!

மூன்றாவது ஸ்டாப் சார்ச்சு கேம்ப். இந்தப் பயணத்திலேயே அட்வென்ச்சர் அதிகமான சாலை என்றால் அது கெலாங்-சார்ச்சு சாலைதான். இந்தப் பகுதியில்தான் அதிகமான ஆறு, அருவி, நீர்த் தேக்கங்களை பைக்கில் கடந்தோம்.

சார்ச்சுவைச் சுற்றி ஜிங்ஜிங் பார், பாராலாசாலா, பாராத்பூர், விஸ்க்கி நாலா என ஊர்கள் டாஸ்மாக்கை நினைவுபடுத்தலாம். ஆனால், இந்த இடங்களில் எல்லாம் பனியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. பெட்ரோல், பஞ்சர் கடைகூடக் கிடையாது.

சார்ச்சு கேம்ப் பகுதியில் டிராவல் சீஸன் வரை மட்டுமே மக்கள் இருப்பார்கள். மற்ற நாட்களில் எல்லாம் அது வெறும் ஆதரவற்ற பள்ளத்தாக்கு.

மலைக்கு-ம்- பயணம்!

அடுத்த ஸ்டாப், லடாக் பகுதியில் இருக்கும் லே. ஹிமாலயன் ஒடிசியின் கடைசி ஸ்டாப் சண்டிகர். ஆனால், மோட்டார் விகடனின் கடைசி ஸ்டாப் லே.

ஒரு 45 ஆண்டுகளுக்கு முன்பு 500 டூரிஸ்ட்டுகள் மட்டுமே வந்த லடாக் பகுதியின் டூரிஸ்ட் வருகை, 2018-ல் 3,27,366 அளவு உயர்ந்துள்ளது. லடாக்கின் மக்கள் தொகையே மொத்தமே 30,000 தான்.

சார்ச்சு - லே நெடுஞ்சாலை ரொம்பவே சூப்பரான சுத்தமான சாலை.

பார்த்துப் போங்க ப்ரோ, வளைவில் முந்தாதே ப்ரோ, மரங்களைப் பாதுகாப்போம் ப்ரோ போன்ற விழிப்பு உணர்வுப் பலகைகளைப் பார்த்தால் குழம்பவேண்டாம். ப்ரோ என்றால் பிரதர் இல்லை; Border Road Organization (BRO). இந்தியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் சாலைகளை எல்லாம் கட்டமைப்பது இவர்கள்தான்.

மலைக்கு-ம்- பயணம்!

லே 11,562 அடி உயரத்தில் இருக்கும் நகரம். காஷ்மீரின் லடாக் பள்ளத்தாக்கில் இருக்கும் பனிப் பாலைவனம் இது.

லடாக் செல்ல, டாங்லாங்லா என்கிற 17,480 அடி உயரச் சிகரத்தை கடக்க வேண்டும்.

வழியில் பாங் எனும் நதி ஓரமாக அமைந்திருக்கும் பகுதி ஒன்று உண்டு. உலகின் உயரமான ஆர்மி டிரான்ஸிட் இங்குதான் உள்ளது. பாங் பகுதியைக் கடந்தால், அடுத்து ரும்ஸேவில்தான் உங்களுக்குச் சோறு கிடைக்கும்.

மலைக்கு-ம்- பயணம்!

டாங்லாங்லாவில் அதிக நேரம் செலவழித்தால் தலைச்சுற்றல், அஜீரணம் போன்ற சில மவுன்டெய்ன் சிக்னஸ் வருவது சகஜம்.

தண்ணீர் குடித்துவிட்டு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது நல்லது.

மலை ஏறத்தொடங்கிவிட்டால் மேகி நூடுல்ஸ் மட்டுமே துணை. மேகி, டால் சாவல், பிரெட் ஆம்லெட் மட்டுமே இந்தப் பகுதிகளில் கிடைக்கும். சில நொறுக்குத்தீனிகளுக்கு அவ்வப்போது கேரன்ட்டி.

எனர்ஜி டிரிங்க், கேஃபைன், சிகரெட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தண்ணீர் மிகவும் அவசியம்.

மலைக்கு-ம்- பயணம்!

சண்டிகரைத் தாண்டிவிட்டால் காவல்துறை கிடையாது. ராணுவம் மட்டுமே. லடாக் வருபவர்களுக்குக் கிளர்ச்சியாளர்கள் பயம் தேவையில்லை.

இமயமலையில் கார் போகுமா என்ற சந்தேகமே தேவையில்லை. இந்தப் பயணத்தில் மலையேறிய கார்களில் ஆல்ட்டோவும், இனோவாவும்தான் அதிகம். பைக்கைப் பொருத்தவரை...எங்கெங்கு காணினும் புல்லட்டடா!