Published:Updated:

புது ஏத்தர்... புது ஓலா... புது பஜாஜ்... வரப்போகும் டாப்-7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

வரப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
பிரீமியம் ஸ்டோரி
வரப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

அறிமுகங்கள்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்

புது ஏத்தர்... புது ஓலா... புது பஜாஜ்... வரப்போகும் டாப்-7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

அறிமுகங்கள்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்

Published:Updated:
வரப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
பிரீமியம் ஸ்டோரி
வரப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

அடுத்த ஆண்டு முழுவதும் எலெக்ட்ரிக் மயமாக இருக்கப் போகிறது. ஆம், இப்போதே அதற்கு ரெடியாகிக் கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கென்று ஒரு பாக்ஸ் இருந்தால்… கொஞ்சம் காத்திருங்கள். இந்தியாவின் முக்கியமான எலெக்ட்ரிக்காக இந்த டாப்–7 ஸ்கூட்டர்கள் இருக்கலாம். அது என்னனு பார்க்கலாம்!

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: (பெயர்: தெரியவில்லை)

விலை: சுமார் 1.30 லட்சம் | ரிலீஸ்: ஏப்ரல் 2022

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த அரையாண்டு முடிவதற்குள்… அதாவது கிட்டத்தட்ட ஏப்ரல் 2022–க்குள் ஹீரோ நிறுவனத்திடம் இருந்து ஓர் அற்புதமான ஸ்கூட்டர் வரக் காத்திருக்கிறது. இந்தியாவில் இப்போதைக்கு IC இன்ஜின் மார்க்கெட்டில் டூ–வீலர் ஜயன்ட்டாக ஆட்சி புரிந்து கொண்டிருப்பது ஹீரோ மோட்டோ கார்ப்தான். டிவிஎஸ், பஜாஜ் போன்ற போட்டியாளர்கள், ஏற்கெனவே தங்கள் எலெக்ட்ரிக்கை அறிமுகம் செய்துவிட்ட நேரத்தில், ஹீரோ சும்மா இருந்தால் நன்றாக இருக்காது.

அதற்காகத்தான் முழு மூச்சாக இறங்கி, இந்த ஏப்ரலுக்குள் ஓர் அட்டகாசமான ஸ்கூட்டரை ஹீரோ கொண்டு வரவிருப்பதாகத் தகவல். ஆனால், இதன் பெயர் மற்றும் பேட்டரி/மோட்டார் விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடவில்லை ஹீரோ. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ டீஸரில் வந்த ஸ்கூட்டரைப் பார்க்கும்போது, இது காலத்துக்கு ஏற்றபடி டச் ஸ்க்ரீன், கணவன்/மனைவி/குழந்தை என ஒரு குடும்பம் பயணிக்கும் அளவுக்கு நீளமான ஸ்ப்ளிட் சீட், அட்டகாசமான மில்லினியல் டிசைன், முன்பக்கம் 12 இன்ச், பின் பக்கம் 10 இன்ச் அலாய் வீல்கள் என்று கலக்கலாக இருக்கிறது இந்த ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால், சார்ஜிங்தான் பெரிய டாஸ்க். அதைச் சமாளிக்கவும் ஹீரோ ஒரு யோசனை வைத்துள்ளது. ஏற்கெனவே தைவானைச் சேர்ந்த Gogoro எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்துடன் கூட்டு வைத்திருப்பது பலருக்கும் தெரியும். இந்த Gogoro உடன் சேர்ந்துதான் நமது நாடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கத் திட்டம் தீட்டியிருக்கிறதாம். இதுவரை இந்தியாவில் பவுன்ஸ் நிறுவனத்தைத் தவிர பேட்டரி ஸ்வாப்பிங் சிஸ்டம் வேறெந்த நிறுவனத்திடமும் இல்லை. அதையும் கொண்டு வரவிருக்கிறது ஹீரோ.

ஒரு ஸ்கூப் நியூஸ்: ஏற்கெனவே ஏத்தர் எனெர்ஜியுடன் 35% Stake வைத்திருக்கிறது ஹீரோ.

நியூ ஓலா எலெக்ட்ரிக்

விலை: 1 லட்சத்துக்குள் | ரிலீஸ்: 2022 இறுதி அல்லது 2023 ஆரம்பத்தில்…

நியூ ஓலா எலெக்ட்ரிக்
நியூ ஓலா எலெக்ட்ரிக்

ஓலாதான் எப்போதுமே எலெக்ட்ரிக்கில் ஷாக் டாப்பிக்காக இருந்து வருகிறது. இன்னும் தனது S1 மற்றும் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெலிவரியே முடிக்காத நிலையில், ஓலாவிடமிருந்து அடுத்தொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்க இருப்பதாகத் தகவல். இந்தப் புது ஓலா ஸ்கூட்டர், S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்களை அடிப்படையாகக் கொண்டுதான் தயாரிக்கப்படுமாம். தற்போதுள்ள ஓலா ஸ்கூட்டர் விலை அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், புது ஓலாவில் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால், S1 – S1 Pro–வில் இருக்கும் முக்கியமான சில வசதிகள் புதுசில் இருக்காதாம். ஆனால் சிங்கிள் சைடு சஸ்பென்ஷன் மற்றும் டிஸ்க் பிரேக்குகள், 12 இன்ச் அலாய் வீல்கள், பெரிய TFT டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், வாய்ஸ் அசிஸ்ட் போன்ற சில வசதிகள் இருக்கும். அதேபோல், இதன் பேட்டரி பேக்கேஜ் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பவரும் தனது அண்ணன்–தம்பிகளிடம் இருந்து வேறுபடுமாம். ஆனால், ஹைப்பர் பவர் மோட்டார் இருந்தாலும், அதன் பவர் குறைவாகவே இருக்கலாம். மற்றபடி இந்தப் புது ஓலா ஸ்கூட்டர் பற்றி வேறெந்தத் தகவல்களும் இல்லை.

இன்னும் 3 ஆண்டுகளில் ஓலாவில் இருந்து எலெக்ட்ரிக் காரும் வரப்போவதாகப் பேச்சு அடிபட்டுக் கொண்டிருப்பது தனி ஸ்டோரி!

ஹோண்டா PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

விலை: சுமார் 1.60 லட்சம் | ரிலீஸ்: 2023

ஹோண்டா PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹோண்டா PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

2018 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இதைப் பார்த்துப் பழகிவிட்டார்கள் வாடிக்கையாளர்கள். ஹோண்டாவிடம் இருந்து இந்த PCX ஸ்கூட்டரைக் கடந்த 4 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். முதலில் பெட்ரோல் ஸ்கூட்டராக இது வரும் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது அதிரடியாக இந்த PCX–யை எலெக்ட்ரிக்கில் கொண்டு வரவிருக்கிறது ஹோண்டா. இது ஒரு மேக்ஸி ஸ்கூட்டர் என்பதால், இதன் டைமென்ஷன்கள் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். நீளமான டிசைன் கொண்டிருப்பதால்… உட்காரும் சொகுசில் இருந்து இதன் இடவசதி வரை எல்லாமே மேக்ஸிமாமாகவே இருக்கும். இதன் டயர்களும் 14 இன்ச் பெரிதாகவே இருக்கலாம். இதில் கழற்றி மாற்றிக் கொள்ளக்கூடிய Removable Lithioum Ion பேட்டரியைக் கொண்டு வருகிறது ஹோண்டா. இதிலும் ஹோண்டா மொபைல் பவர் பேக்கும், ஓலாவுக்குப் போட்டியாக நிச்சயம் 50.4 V, 20.8 Ah–க்கும் இருக்கலாம் என்கிறார்கள். இதன் ஏசி சிங்க்ரனைஸ்டு மோட்டார், சுமார் 5.7bhp பவரை வெளிப்படுத்தும். மேக்ஸி ஸ்கூட்டர் என்பதால் இரண்டு பக்கமும் டிஸ்க் உறுதி. மற்றபடி கடிகாரம், டிஜிட்டல் மீட்டர், டச் ஸ்க்ரீன், ட்ரிப் மீட்டர், முழுக்க முழுக்க எல்இடி ஹெட்லைட்ஸ் என்று வசதிகளிலும் வள்ளலாக வரவிருக்கிறது ஹோண்டா PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். விலையில் கொஞ்சம் இலகுவாக இருந்தால் PCX எடுபடலாம்.

பஜாஜ் Fluir அல்லது Fluor எலெக்ட்ரிக்

விலை: சுமார் 1.4 லட்சம் | ரிலீஸ்: 2022 இறுதியில்

பஜாஜ் Fluir அல்லது Fluor எலெக்ட்ரிக்
பஜாஜ் Fluir அல்லது Fluor எலெக்ட்ரிக்

பஜாஜில் இருந்து இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரத் தயாராக இருக்கிறது. ஏற்கெனவே சேட்டக் விற்பனையில் இருக்கும் நிலையில், சேட்டக்கின் டிசைனை ஒட்டியே தனது இரண்டாவது ஸ்கூட்டரை லாஞ்ச் செய்ய இருக்கிறது பஜாஜ். சேட்டக் கொஞ்சம் மொழுக்கென்று இருந்தால்… இந்தப் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ட்ரெண்டுக்கு ஏற்ப கொஞ்சம் ஸ்லீக் டிசைனிலும், ஷார்ப்பாகவும் இருக்கும். ஆனால், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இதன் ஸ்விங்ஆர்மும் சேட்டக்கில் இருப்பதுதான். ஆனால், இதில் சில வசதிகள் மிஸ் அவுட் ஆகலாம். கார்களில் இருப்பதுபோன்ற ஸ்டைலான சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், கீலெஸ் ஆப்பரேஷன் போன்றவை இதில் இருக்காது. மோட்டார் மற்றும் பேட்டரியைப் பொருத்தவரை சேட்டக்கில் இருக்கும் அதே 4kW எலெக்ட்ரிக் மோட்டார், 2.9kWh பேட்டரி பேக்கில் இருந்து பவரைப் பெறும். இதன் டார்க் 1.6kgm இருக்கும். சேட்டக் போலவே எக்கோ மற்றும் ஸ்போர்ட் என ரைடிங் மோடுகள் இதிலும் இருக்கலாம். சேட்டக், எக்கோ மோடில் 95 கிமீ–யும், ஸ்போர்ட் மோடில் 85 கிமீ–யும் தருவதாகச் சொல்கிறார்கள். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு Fluir அல்லது Fluor என்று பெயர் வைக்கலாம் பஜாஜ். ஸ்பானிய மொழியில் Fluir என்றால், நீராவி என்று அர்த்தமாம்.

சுஸூகி பர்க்மேன் எலெக்ட்ரிக்

விலை: சுமார் 1.4 லட்சம் | ரிலீஸ்: நவம்பர் 2022

சுஸூகி பர்க்மேன் எலெக்ட்ரிக்
சுஸூகி பர்க்மேன் எலெக்ட்ரிக்

இந்த பர்க்மேன் எலெக்ட்ரிக் ஏற்கெனவே ஸ்பை ஷாட்களில் அடிபட்டு விட்டது. புனேவில் இதன் டெஸ்ட் ரைடிங்கை ஆரம்பித்து விட்டடார்கள். சாதாரண பெட்ரோல் பர்க்மேனை அடிப்படையாகக் கொண்டுதான் இதைத் தயாரித்திருக்கிறது, ஜப்பான் நிறுவனமான சுஸூகி. அதனால், டிசைனைப் பொருத்தவரை பெரிதாக மாற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. பர்க்மேன் பெட்ரோல் மற்றும் இன்ட்ரூடர் பைக்கைத் தயாரித்த அதே லோக்கல் டிசனை் டீம்தான் இந்த பர்க்மேன் எலெக்ட்ரிக்கையும் டிசைன் செய்திருக்கிறதாம். அதே மேக்ஸி டிசைன், டெலிஸ்கோப்பிக் ஃபோர்க், பின் பக்கம் ட்வின் ஷாக் அப்ஸார்பர், ஷார்ப்பான ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், கிராப் ரெயில் என்று அதே மேக்ஸிதான். முன் பக்கம் 12 இன்ச் மற்றும் பின் பக்கம் 10 இன்ச் அலாய் வீல்கள் கொடுத்திருக்கிறார்கள். இதில் முன் பக்கம் மட்டும்தான் டிஸ்க்; பின் பக்கம் டிரம்தான். ஆனால், சுஸூகியின் CBS (Combined Braking System) உண்டு. இந்த ஹப் எலெக்ட்ரிக் மோட்டார் 4kW பவர் கொடுக்கும். இது சாதாரண 110 சிசி பெட்ரோல் ஸ்கூட்டரின் பெர்ஃபாமன்ஸுக்கு இணையாகவே இருக்கும். இதன் ரேஞ்ச் 90 கிமீ இருக்கலாம் என்கிறார்கள். இந்த லித்தியம் அயன் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

நியூ ஏத்தர் எலெக்ட்ரிக்

விலை: சுமார் 1.2 லட்சம் | ரிலீஸ்: 2022 இறுதியில் அல்லது 2023 காலாண்டில்

நியூ ஏத்தர் எலெக்ட்ரிக்
நியூ ஏத்தர் எலெக்ட்ரிக்

இப்போதைக்கு நம்பகத்தன்மை வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று பெயரெடுத்துவிட்டது ஏத்தர் எனெர்ஜி ஸ்கூட்டர். 450X மற்றும் 450 Plus என இரண்டே இரண்டு ஸ்கூட்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு சக்கைப்போடு போட்டு வரும் ஏத்தரில் இருந்து புதிதாய் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரவிருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தயாரிப்பில் அடுத்த பணியைத் தொடங்கிவிட்டதாம் ஏத்தர். இது ஏத்தர் 450–ன் ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாக இருக்கிறது. இதுவும் ஓலா கதையே! அதாவது, இந்தப் புது ஸ்கூட்டரும் 1 லட்சத்துக்குள் இதன் எக்ஸ் ஷோரூம் விலை இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறதாம் ஏத்தர். இப்போது இருக்கும் ஏத்தர் ஸ்கூட்டர்கள் 1.25 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ‘‘எங்களுக்குச் சொந்தமாக ப்ளாட்ஃபார்மும், காஸ்ட் கன்ட்ரோல் திட்டமும் இருப்பதால்… இந்த Sub 1 Lakh விலை என்பதும் சாத்தியம்!’’ என்கிறார் ஏத்தர் எனெர்ஜியின் முக்கிய அதிகாரி ஒருவர். ஓலா, சிம்பிள் ஒன், டிவிஎஸ், பஜாஜ் ஸ்கூட்டர்களுக்குக் கடும்போட்டியாக இருக்குமாம் இந்தப் புது ஏத்தர்! மற்றபடி இந்தப் புது ஏத்தர் ஸ்கூட்டரைப் பற்றிய வேறெந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. விலை குறைவாக இருந்தாலும் – ஏபிஎஸ், ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என்று கலக்குமாம் புது ஏத்தர்.

டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக்

ரிலீஸ்: ஆகஸ்ட் 2022 | விலை: சுமார் 1.5 லட்சம்

டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக்
டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக்

இந்தியாவில் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் இனி டிவிஎஸ்–ன் டார்கெட். அந்த வகையில் க்ரியான்தான் டிவிஎஸ்–ல் இருந்து ஐ-க்யூப்–க்குப் பிறகு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம். பார்ப்பதற்கு ஒரு மேக்ஸி ஸ்கூட்டராகவும் செம ஸ்போர்ட்டியாகவும் இதன் டிசைன் இருக்கிறது. ஹோண்டா PCX–க்குப் போட்டியாக வரவிருப்பதால்… இதை ஒரு நேக்கட் ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்போல் வடிவமைத்திருக்கிறார்கள். முன் பக்கம் இதிலுள்ள செங்குத்தான எல்இடி ஹெட்லைட், இதன் ஏப்ரானில் இருக்கும். இதிலுள்ள லித்தியன் அயன் பேட்டரியின் பவர் 40Ah கொண்டிருக்கும். இது ஹோண்டா PCX–யைவிடக் குறைவுதான். இந்த ஹப் எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 12Kw. இது ஃபுல் சார்ஜிங்கில் சுமார் 85 கிமீ வரை ரேஞ்ச் போகும் என்கிறது டிவிஎஸ். முழுக்க அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் என்று கலக்கும் இந்த க்ரியானில் ஏபிஎஸ் இருக்குமா என்று தெரியவில்லை. கார் போல் இருக்கும் இதன் டச் ஸ்க்ரீனில் ட்ரிப் மீட்டர், ஓடோ, கடிகாரம், சார்ஜிங் விவரம் என்று எல்லாமே இருக்கும். கூடவே ETA (Estimated Time of Arrival) போன்ற விவரங்களும் உண்டு. இந்த டிஜிட்டலில் அனலாக் போலவே ஸ்பீடோ மீட்டர் இருப்பது புதுமை. இது இந்த ஆகஸ்ட்டுக்குள் வெளிவரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism