Published:Updated:

ஒகினாவா மலிவான எலெக்ட்ரிக் நண்பன்!

ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எலெக்ட்ரிக்

ரீடர்ஸ் ரிவ்யூ: ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எலெக்ட்ரிக்

ஒகினாவா மலிவான எலெக்ட்ரிக் நண்பன்!

ரீடர்ஸ் ரிவ்யூ: ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எலெக்ட்ரிக்

Published:Updated:
ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எலெக்ட்ரிக்

சென்னை அம்பத்தூர் பகுதியில், சத்தமே இல்லாமல் 60 கிமீ வேகத்தில் பறந்து கொண்டிருந்த சங்கரலிங்கத்தை நிறுத்தி ஒகினாவா ப்ரெய்ஸ் ப்ரோவின் ப்ளஸ்/மைனஸ் பற்றி கேட்டோம்.

ஏன் ஒகினாவா?

வீட்டில் உட்காரும் நேரத்தைவிடவும் நான் 2 வீலரில் பறக்கும் நேரம்தான் அதிகம். ஏன்னா, என் தொழில் அப்படி. பெட்ரோல் விக்கிற விலைக்கு IC ஸ்கூட்டர்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க. அதான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போகலாமேனு ஐடியா தோணுச்சு. ஆம்பியர், கோமாகி, ஹீரோ, ஒகினாவானு பல ஸ்கூட்டர் பார்த்தேன். அருண் என்கிற என் நண்பர் மூலமா ஒகினாவா பத்திக் கேள்விப்பட்டேன்.

பார்க்கிறதுக்கு ஸ்டைலா இருந்தது. ரேஞ்சும் நல்லா இருந்துச்சு! நான் பார்த்தது Praise Pro மாடல். விலை அதிகமான மாடல்லாம் இருந்துச்சு. அதுல செல்போன் சார்ஜெல்லாம் போட்டுக்கலாம். ஆனா எனக்கு அது தேவையில்லை. முன்னாடி பொருட்கள் வெச்சுட்டுப் போக ஆப்ரானில் இடவசதிதான் முக்கியமான தேவை. ‘‘ஸ்டைல் பார்க்காதண்ணா… ப்ராக்டிக்காலிட்டிதான் முக்கியம்’’னு என் தங்கச்சியும் மச்சானும் சொன்னாங்க. ஆன்ரோடு விலை 85,500 ரூபாய் ஆச்சு! புக் பண்ணிட்டேன். தேங்க்ஸ் டு தங்கச்சி!

ஒகினாவா
ஒகினாவா

ஷோரூம் அனுபவம்

ஒகினாவா ஸ்கூட்டர் நல்லா இருந்தாலும், நான் ரொம்பச் சலிச்ச விஷயம் – அதோட ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸில்தான். சென்னை திருமங்கலத்தில் இருக்கிற Gee Electrical Bikes–ல்தான் புக் பண்ணினேன். ஸ்கூட்டரை டெலிவரி எடுத்து, ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி, நம்பர் வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். சரியாவே ரெஸ்பான்ஸ் பண்ணலை. ஆர்டிஓ ஆஃபீஸில் நாள் முழுக்கக் காத்திருந்துதான் நம்பர் வாங்கினேன். ஃபர்ஸ்ட் சர்வீஸ் வந்தப்போ, பணம் கம்மியாதான் வந்துச்சு. ஆனா வாட்டர் சர்வீஸ்னு ஒரு பில் போட்டாங்க. வண்டியை ஈரத்துணி வெச்சுக்கூடத் துடைக்காமத்தான் தந்தாங்க(!)

பேட்டரியைக் கழற்றி சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.
பேட்டரியைக் கழற்றி சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

சார்ஜிங் மற்றும் ரைடிங்

தினசரி 3 – 3.15 மணி நேரம் சார்ஜ் போடுவேன். எங்க வீடு கிரவுண்ட் ஃப்ளோர்தான். இருந்தாலும் நான் பேட்டரியைக் கழட்டிட்டு வீட்டில்தான் சார்ஜ் போடுவேன். 3.5 மணி நேரத்துக்குள்ள அதுவாவே ஆட்டோ கட் ஆகிடும். 3 யூனிட் வந்துச்சு. ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய்தான். என் ஸ்கூட்டரோட ரேஞ்ச், சொன்னா நம்பமாட்டீங்க! எனக்கு 100 கிமீயெல்லாம் ஒரு தடவை தந்துச்சு. ஆனா நிச்சயம் 90–95 கிமீ தந்துடும். ஒரு தடவை காஞ்சிபுரம், பம்மல், தாம்பரம் எடுத்துட்டுப் போனேன். 180 கிமீ ஓட்டினேன். ஃப்ரண்டு வீட்ல சார்ஜ் போட்டுக்கிட்டேன். நான் சார்ஜ் பண்ணின மொத்த நேரம் 5.50 மணி நேரம். வெறும் 25 ரூபாய்க்கு 190 கிமீ. செம ஹேப்பியா இருக்கு. இதுவே நான் என் ஹோண்டா பைக்கா இருந்தா, ஒரு 400 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கணும்.

இதோட ரைடிங் எனக்குப் பிடிச்சிருக்கு. ஹைவேஸில் சுமார் 75 கிமீ வரை போக முடியுது. இதில் எக்கோ, ஸ்போர்ட்ஸ்னு ரெண்டு மோடுகள் இருக்கு. நமக்கு எப்பவுமே எக்கோ மோடுதான். ஹைவேஸ்னா ஸ்போர்ட்ஸ் மோடு. டர்போ பட்டன் போட்டுக்கலாம். வண்டி பறக்குது. சஸ்பென்ஷனும் ஓகேதான். என்ன, கொஞ்சம் ஸ்டிஃப்பா இருக்கு. ஆனா மத்தபடி ஓகேதான். இதோட ஃபுட் போர்டு உயரம் கொஞ்சம் அதிகமா இருக்கும். இது மத்தவங்களுக்கு செட் ஆகாது. ஆனா, இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.

ஹெட்லைட், ஆப்ரானில் இருப்பது இரவு நேரங்களில் சிக்கலாக இருக்கிறது.
ஹெட்லைட், ஆப்ரானில் இருப்பது இரவு நேரங்களில் சிக்கலாக இருக்கிறது.

பிடித்தது

ஸ்கூட்டரில் ரொம்பப் பிடிச்சது – அதோட டிசைன், அப்புறம் எல்இடி ஹெட்லைட். கி.கிளியரன்ஸ் அதிகம்னு நினைக்கிறேன். ஸ்பீடு பிரேக்கரில் இடிக்கவே இல்லை. ரேஞ்ச்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 95 கிமீ. பிரேக்ஸும் ஓகேதான். அப்புறம், விலையும் ஓகேதான். பராமரிப்பு அதைவிட. ஃபர்ஸ்ட் சர்வீஸில் பிரேக் பேடு மாத்தினேன். 120 ரூபாய்தான் வந்துச்சு. 14.5 கிலோ பேட்டரியை ஈஸியா கழட்டி சார்ஜ் போடுறது எனக்குச் சிரமமமே இல்லாம இருக்கு. ஒரு காலி சிலிண்டரைத் தூக்கிட்டுப் போறது மாதிரி ஈஸியாதான் இருக்கு. அருமை! கார் மாதிரி, ரிமோட் கீ–யெல்லாம் கொடுத்திருக்காங்க. சாவியைக் கையில வெச்சுக்கிட்டே ஸ்டார்ட் பண்ணியும் கிளம்பலாம். மேடான இடங்களில் ரிவர்ஸ் எடுக்க லேசா ஸ்கூட்டரைப் பின்னால் தள்ளினால் போதும். ஆட்டோமேட்டிக் ரிவர்ஸ் சூப்பரா இருக்கு.

டிஸ்க் பிரேக் இருப்பது நம்பிக்கையாக இருக்கிறது.
டிஸ்க் பிரேக் இருப்பது நம்பிக்கையாக இருக்கிறது.
க்ளஸ்ட்டர் டிசைன் சிம்பிள் அண்ட் நீட்...
க்ளஸ்ட்டர் டிசைன் சிம்பிள் அண்ட் நீட்...

பிடிக்காதது

இந்த Li-Ion பேட்டரியில் 5 பார் லெவல் இருக்கும். பேட்டரி லெவல் ஃபுல்லா இருந்தா மட்டும்தான் 70 கிமீ ஸ்பீடுக்கு மேல போக முடியும். பேட்டரி பார் லெவல் இறங்க இறங்க வண்டியோட ஸ்பீடு குறையுது. கடைசி பாரில் ஓட்டினா, 35 கிமீ–க்கு மேல ஸ்கூட்டர் போகமாட்டேங்குது. இதோட எர்கானமிக்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. உதாரணத்துக்கு இடது பக்கம், ஹார்ன் ஸ்விட்ச் இருக்க வேண்டிய இடத்தில், டர்போ பட்டன் கொடுத்திருக்காங்க. ஹார்ன்னு நினைச்சு டர்போவை அழுத்திடுறேன். இது பழகிட்டு இருக்கேன். அதேமாதிரி ஸ்பீடோ மீட்டரில் காட்டுற ஸ்பீடு ரொம்பக் குறைவா இருக்கு. ஆப் வெச்சு செக் பண்ணுவேன். ஆப்பில் 55 கிமீ காட்டினா ஸ்கூட்டர் 65 கிமீ–க்கு மேல காட்டுது. அதாவது, ஸ்கூட்டர் பொய் சொல்லுது. அப்போ டாப் ஸ்பீடு 75–ல் போனா நிஜ ஸ்பீடு 60 கிமீ–யாத்தான் இருக்கும்.

சீட்டுக்கு அடியில் 14.5 கிலோ பேட்டரி...
சீட்டுக்கு அடியில் 14.5 கிலோ பேட்டரி...

அப்புறம், இதோட பில்டு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம். ஹெட்லைட் பொசிஷன் ஆப்ரானில் இருக்கு. இது நைட்ல ஸ்கூட்டரைத் திருப்பும்போது, தேவையான இடத்தில் வெளிச்சம் கிடைக்கலை. அண்டர் சீட்டில்தான் பேட்டரி வெச்சிருக்காங்க. அதனால இதில் சீட்டுக்கு இடவசதி எதிர்பார்க்க முடியாது. ஏபிஎஸ் இருந்திருக்கலாம். என்னைக் கேட்டா, இதெல்லாம் பெரிய குறைகள்னு சொல்லமாட்டேன். ஏன்னா, இதெல்லாம் தெரிஞ்சுதான் நான் ப்ரெய்ஸ் ப்ரோவை வாங்கினேன்.

ஒகினாவா
ஒகினாவா

என் தீர்ப்பு

ஏத்தர், ஐ–க்யூப், ஓலானு இப்போ எல்லாமே காஸ்ட்லி ஸ்கூட்டர்களா இருக்கு மார்க்கெட்டில். டெக்னாலஜி தேவையில்லை; ப்ராக்டிக்காலிட்டி போதும்னு நினைக்கிற என்னை மாதிரி எக்கனாமிக்கல் மனுஷங்களுக்கு ஒகினாவாதான் பெஸ்ட்னு சொல்வேன்.