Published:Updated:

ஓலா ஸ்கூட்டர் செப்டம்பர் முதல் விற்பனைக்கு... அக்டோபரில் டெலிவரி! - சர்ப்ரைஸ் உண்டா?!

Ola Scooter Factory

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகை இருப்பதால் டெல்லியில் இதன் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது. S1 Proவின் டெல்லி விலை ரூ.1.10 லட்சம். S1 ரெகுலர் ஸ்கூட்டரின் விலை 85,059 ரூபாய்.

ஓலா ஸ்கூட்டர் செப்டம்பர் முதல் விற்பனைக்கு... அக்டோபரில் டெலிவரி! - சர்ப்ரைஸ் உண்டா?!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகை இருப்பதால் டெல்லியில் இதன் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது. S1 Proவின் டெல்லி விலை ரூ.1.10 லட்சம். S1 ரெகுலர் ஸ்கூட்டரின் விலை 85,059 ரூபாய்.

Published:Updated:
Ola Scooter Factory

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிட்டதாக இந்தியாவின் 75-வது சுதந்திரநாளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விற்பனைக்கு வந்துவிட்டதாக சொன்னாலும் வீட்டுக்கு டெலிவரி வர அக்டோபர் மாதம் ஆகுமாம். ''பரவால்ல சார்... நாங்க வெயிட் பண்றோம்'' என வாடிக்கையாளர்களும் ஓலா ஸ்கூட்டருக்காக வேறு எந்த ஸ்கூட்டரும் வாங்காமல் காத்திருக்கிறார்கள். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விவரங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறார்கள், அப்படி என்னதான் இருக்கிறது ஓலா ஸ்கூட்டரில், விலை என்ன, வாங்கலாமா?!

தரம் இருக்காது, அதிக தூரம் நம்பி பயணிக்கும் அளவுக்கு பேட்டரி சார்ஜ் நிற்காது, சர்வீஸ் பிரச்னைகள் ஏராளம்... இதுதான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுவரை இந்திய மார்க்கெட்டில் அதிகம் எடுபடாததற்கான முக்கிய காரணங்கள். ஆனால், தற்போது ஏதர், ஹீரோ, டிவிஎஸ் என பெரிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டுக்குள் நுழைந்துவிட்டன. இந்நநிலையில்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டுக்குள் நுழைந்திருக்கும் ஓலாவின் வருகை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Ola
Ola

சுதந்திர தினமான நேற்று தனது கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் இருந்து முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது ஓலா. இதற்கு S1 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

S1, S1 Pro என இரண்டு வேரியன்ட்களில் வரவிருக்கிறது ஓலா ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச், சுமார் 150 கிமீ என்று நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம். ஆனால், ‛‛எங்கள் ஸ்கூட்டர் 181 கிமீ ரேஞ்ச் தரும்’’ என்கிறார் ஓலாவின் CEO பவிஷ் அகர்வால்.

பொதுவாக, கம்பெனி சொல்லும் மைலேஜ் அப்படியே கிடைக்காது என்றாலும், நிச்சயம் 150 கிமீ-க்கு மேல் இதன் ரேஞ்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்குக் கிடைத்த ஒரு ஸ்பை ஷாட்டில் 87% சார்ஜுக்கு 120 கிமீ ரேஞ்ச் டிஸ்ப்ளே காட்டியது இந்த ஸ்கூட்டர்.

S1 Pro வேரியன்ட்தான் விலை அதிகமான டாப் எண்ட். இதன் டாப் ஸ்பீடு 115 கிமீ என்கிறார்கள். 0-40 கிமீட்டர் வேகத்துக்கு வெறும் 3.1 விநாடிகள்தான் ஆகுமாம். இது ஐக்யூப்பைவிட 1.1 விநாடி குறைவு. இதில் மலைப் பயணங்களில் சரியாமல் இருக்க கார்களில் இருப்பதுபோல் ஹில்ஹோல்டு அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட் அசிஸ்ட் என்று எக்கச்சக்க வசதிகளும் உண்டு. இதன் விலை 1,29,999 லட்சம் என்று அறிவித்திருக்கிறது ஓலா. இதுவே S1 வேரியன்ட்டின் விலை ரூ.99,.999.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகை இருப்பதால் டெல்லியில் இதன் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது. S1 Proவின் டெல்லி விலை ரூ.1.10 லட்சம். S1 ரெகுலர் ஸ்கூட்டரின் விலை 85,059 ரூபாய்.

மற்றபடி ரெகுலர் S1 ஸ்கூட்டரில்கூட தேவையான பல வசதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். BMS (Battery Management System) என்றொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஓலா. இதில் பேட்டரியின் கண்டிஷன், ரேஞ்ச், பாதுகாப்பு, பெர்ஃபாமன்ஸ் என்று எல்லாமே ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ளலாம்.

7 inch touchscreen
7 inch touchscreen

கார்களைப்போல் இதில் டிஜிட்டல் சாவி வசதி உண்டு. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இதை இணைத்துக் கொள்ளலாம். போன் மூலமாகவே அன்லாக் செய்வது, ஆன் செய்வது, ஆஃப் செய்வது என்று எல்லாம் செய்து கொள்ளலாம். மால்கள் போன்ற பார்க்கிங்கில் நீங்கள் ஸ்கூட்டர் அருகே போனாலே ஆட்டோமேட்டிக்காக அன்லாக் செய்யும் தொழில்நுட்பமும் இதில் உண்டு. இந்த டச் ஸ்க்ரீனில் ஜிபிஎஸ் நேவிகேஷன் முதல் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் வரை அனைத்தும் உண்டு. பொதுவாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நார்மல் – ஸ்போர்ட் என இரண்டு மோடுகள்தான் இருக்கும். ஆனால், ஓலாவில் ‛ஹைப்பர்’ என எக்ஸ்ட்ராவாக ஒரு மோடு கொடுத்திருக்கிறார்கள். இது டிரைவிங்கில் இன்னும் ஸ்போர்ட்டியாக இருக்குமாம்.

Ola
Ola

ஸ்கூட்டர் திருடு போகாதபடி ஆன்ட்டி தெஃப்ட் அலெர்ட் சிஸ்டம் இதில் கொடுத்திருக்கிறார்கள். யாரிடமாவது ஸ்கூட்டரை இரவல் கொடுத்தால், அவர்களை ட்ராக் செய்யும் ஜியோஃபென்சிங் சிஸ்டமும் உண்டு. மழைக்காலங்களில் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் ஷார்ட் ஷர்க்யூட் ஆகாது என்கிறது ஓலா. இரண்டு பக்கமுமே 12 இன்ச் வீல்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். பைக்குகள் போல் ரியரில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும், முன் பக்கம் சிங்கிள் ஃபோர்க் சஸ்பென்ஷனும் இருப்பதால், ஓட்டுதலில் சொகுசு கேரன்ட்டி.

வழக்கம்போல், இதில் ரிவர்ஸ் மோடு-ம் உண்டு. முன் பக்கம் எத்தனை வேகத்தில் போகிறோமோ, அதே வேகத்தில் ரிவர்ஸும் போகலாம் என்கிறது ஓலா. பெரிய பள்ளங்களில் பார்க் செய்துவிட்டு, ரிவர்ஸ் எடுக்கச் சிரமப்பட வேண்டியதில்லை. மேலும், எந்த ஸ்கூட்டர்களிலும் இல்லாத அளவு 50 லிட்டர் இடவசதி அண்டர்சீட் ஸ்டோரேஜில் உண்டு. இதில் இரண்டு ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளலாம் என்பது ஸ்பெஷல்.

S1 and S1 Pro
S1 and S1 Pro
First Scooter rolled out
First Scooter rolled out

புக் செய்த அன்றே 1 லட்சம் ஸ்கூட்டர்கள் புக் ஆனது வேறெந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இல்லாத ஸ்பெஷல். மொத்தம் 10 கலர்களில் FAME-II மானிய விலையான 99,999 மற்றும் 1.29,999 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கும் ஓலா, மொத்தம் 10 கலர்களில் கிடைக்கிறது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் தொழிற்சாலையில், ஷிஃப்ட் அடிப்படையில் ஊழியர்கள் ஓலாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். செப்டம்பர் – 8, 2021-ல் இருந்து ஓலா S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்களின் விற்பனை ஆரம்பித்துவிடுமாம். டெலிவரி அக்டோபரில் இருக்கும் என அறிவித்திருக்கிறார்கள்.

விரைவில் ஓலா ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து அதன் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்டை வெளியிட தயாராக இருக்கிறது மோட்டார் விகடன் டீம்!