Published:Updated:

ஓலா ஸ்கூட்டர் S1 அல்லது S1 Pro… எதுக்கு மவுசு அதிகம்?

ஓலாவில் மொத்தம் இரண்டு வேரியன்ட்கள் இருக்கின்றன. S1 மற்றும் S1 Pro. இதில் S1 Pro மாடலுக்குத்தான் பெரிய மவுசு இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. அந்த ஓலா S1 Pro-வில் இவ்வளவு வசதிகளா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இப்போதைக்கு மார்க்கெட்டில் நுழையாமலேயே பேசப்பட்டுக் கொண்டிருப்பது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான். கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா தொழிற்சாலையில் ஆண்டுக்கு 10 மில்லியன் ஓலா ஸ்கூட்டர்கள் தயாராகும் அளவுக்கு இதன் கட்டமைப்பு இருக்கிறது. அதைத் தாண்டி, முழுக்க முழுக்க 10,000 பெண் ஊழியர்களைக் கொண்டு ஓலாவைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

ஓலாவில் மொத்தம் இரண்டு வேரியன்ட்கள் இருக்கின்றன. S1 மற்றும் S1 Pro. இதில் S1 Pro மாடலுக்குத்தான் பெரிய மவுசு இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. ஒரே நாளில் 1 லட்சம் ஸ்கூட்டர்கள் புக் ஆனது எல்லோருக்கும் தெரியும். செப்டம்பர் 15–ல் இருந்து ஆன்லைன் விற்பனையைத் தொடங்கிய ஓலாவின் முன்பதிவு இன்னும் மீதம் இருக்கும் நிலையில், நவம்பர் 1–ல் இருந்து அதை மீண்டும் தொடங்க இருக்கிறதாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இரண்டே நாள்களில் இந்த ஆன்லைன் விற்பனை மூலம் 1,100 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்திருக்கிறது ஓலா. இதில் அதிகப்படியான விற்பனை – S1 Pro மாடலுக்குத்தான் நடந்திருக்கிறது. அதாவது, S1 மாடலைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான புக்கிங்குகள் S1 Pro மாடலுக்குத்தான் கிடைத்திருக்கின்றனவாம். S1 Pro மாடலின் விலை 1.30 லட்சம். இதுவே S1 மாடலின் விலை 1.0 லட்சம். இது ஒவ்வொரு மாநிலத்தின் மானியத் தொகைக்கு ஏற்றவாறு கூடி/குறையும்.

இதனால், S1 Pro மாடலைத்தான் முதல்கட்டமாக அதிகமாக ரோல் அவுட் வருகிறது ஓலா. S1 Pro மாடல், S1 மாடலைவிட நிஜமாகவே மதிப்புதானா? 30,000 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுப்பதில் எக்ஸ்ட்ரா லாபம் உண்டா?

* எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மைலேஜ் என்று சொல்லக்கூடிய ரேஞ்சில்தான் முதல் பலன் கிடைக்கிறது S1 Pro மாடலில். S1 மாடலின் ஃபுல் ரேஞ்ச் 120 கிமீ எனும் பட்சத்தில், S1 Pro மாடலின் ரேஞ்ச் 180 கிமீ என்று சொல்கிறது ஓலா. அண்மையில் நமக்குக் கிடைத்த ஸ்பை ஷாட்டிலும் இது நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒரு சார்ஜுக்கு பேஸ் வேரியன்ட்டைவிட கூடுதலாக 60 கிமீ கிடைப்பது லாபம்தானே!

* ரைடிங் மோடுகளில் S1 Pro கலக்குகிறது. இரண்டு வேரியன்ட்களிலுமே நார்மல் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு மோடுகள் இருக்கும் நிலையில், S1 Pro மாடலில் எக்ஸ்ட்ராவாக ‘ஹைப்பர் மோடு’ (Hyper Mode) என்றொரு மோடு உண்டு. இதில் பிக்–அப் செமையாக இருக்கும். 0–40 கிமீ வேகத்தை வெறும் 4 விநாடிகளில் கடக்கும் இது. S1–யை விட இது 0.6 விநாடிகள் குறைவு. அதேபோல், 0–100 கிமீ வேகப் போட்டியிலும் S1 Pro சில விநாடிகள் முன்னணியில் இருக்கும். மற்றபடி இரண்டிலுமே இருப்பது 8.5KW மோட்டார் பவர்தான்.

பாதுகாப்பு வசதி
பாதுகாப்பு வசதி

* S1 மாடலைவிட S1 Pro மாடலின் டாப் ஸ்பீடும் அதிகம். இதன் அதிகபட்ச வேகம் 115 கிமீ என்று சொல்கிறது ஓலா. இதுவே பேஸ் வேரியன்ட்டான S1 மாடலின் டாப் ஸ்பீடு 95 கிமீதான். இது நெடுஞ்சாலைகளில் பைக்கை விரட்டிச் செல்லும் வேகப் பார்ட்டிகளுக்கு உற்சாகமாக இருக்கும்.

`Raider 125' கம்யூட்டர் செக்மன்டில் புதிய பைக்கை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்... என்ன ஸ்பெஷல்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* S1 Pro டாப் மாடலில் இன்பில்ட் ஸ்பீக்கர்கள் உண்டு. இதில் மல்ட்டி மைக்ரோ போன் அமைப்பும், A1 Speech Recognition Algorithm சிஸ்டமும் இருப்பதால், ‘ஹேய் ஓலா’ என்று அழைத்து, வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் ஸ்கூட்டரை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, சைடு ஸ்டாண்டை எடுப்பது, பாட்டுக் கேட்பது, போன் அழைப்புகளை ஏற்பது என்று வசதிகள் செம! இது S1 மாடலில் இல்லை! மற்றபடி சைடு ஸ்டாண்ட் அலெர்ட், டேம்ப்பர் அலெர்ட் என்று சொல்லக்கூடிய திருட்டைத் தடுக்கும் அலெர்ட், ஸ்கூட்டரை இரவல் கொடுத்தால் கண்காணிக்கக் கூடிய ஜியோஃபென்சிங் சிஸ்டம் பேஸ் வேரியன்ட்டிலேயே உண்டு.

ஸ்கூட்டர் திருடு போனால் வார்னிங் கொடுக்கும் டேம்ப்பர் அலெர்ட்
ஸ்கூட்டர் திருடு போனால் வார்னிங் கொடுக்கும் டேம்ப்பர் அலெர்ட்
சைடு ஸ்டாண்ட் அலெர்ட்
சைடு ஸ்டாண்ட் அலெர்ட்

* கார்களில் இருக்கும் வசதியான ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் S1 Pro மாடலில்தான் உண்டு. மலைச் சாலைகளில் கீழிறங்காமல் இருக்க ஹில் ஹோல்டு அசிஸ்ட்டும், வேகத்தை செட் செய்துவிட்டு ஆக்ஸிலரேட்டர் முறுக்காமலேயே பயணிக்க க்ரூஸ் கன்ட்ரோலும் உதவும். மற்றபடி இரண்டிலுமே ரிவர்ஸ் மோடு உண்டு.

* கலர்களில்கூட வித்தியாசம் காண்பித்திருக்கிறார்கள். ஓலா S1 பேஸ் மாடலில் வெறும் 5 கலர்கள்தான். இதுவே S1 Pro மாடலில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை, நீலம் என்று ஆரம்பித்து மொத்தம் 10 கலர்களில் கிடைக்கிறது.

10 கலர்களில் S1 Pro
10 கலர்களில் S1 Pro

* இப்படி எல்லாமே S1 Pro–வில் ப்ளஸ்களாக இருக்கும் நிலையில், சார்ஜிங் மட்டும் பின்வாங்குகிறது. காரணம், S1–ல் இருக்கும் 2.98kWh பேட்டரியைவிட, இதில் இருப்பது 3.97 kWh பெரிய பேட்டரி. இதனால், வழக்கமாக சார்ஜிங் டைம் எக்ஸ்ட்ரா ஆகும். சாதாரண நமது ப்ளக் பாயின்ட் சார்ஜிங் செய்தால், S1 மாடலுக்கு ஃபுல் சார்ஜிங்குக்கு 4.50 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில், S1 Pro மாடலுக்கு சுமார் 6.30 மணி நேரம் ஆகும். ஆனால், அதற்கும் ஹைப்பர் சார்ஜிங் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது ஓலா. வெறும் 18 நிமிடங்களில் 75 கிமீ தூரம் செல்லும் அளவுக்கு 50%–க்கு மேல் வேகமாக சார்ஜ் ஆகும் வசதி உண்டு.

இப்போ தெரியுதா? S1–யை விட S1 Pro ஏன் மவுசுனு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு