Published:Updated:

Ola: "சிங்கிள் சார்ஜில் 202 கி.மீட்டரா? இந்தா இன்னொரு ஸ்கூட்டர்!"- கஸ்டமருக்குக் கிடைத்த கிஃப்ட்!

ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், "தங்களின் ஓட்டுதலைக் கண்டு மெச்சினோம். அறிவித்தபடியே உங்களுக்கு இலவசமாக Gerua S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாகக் கிடைக்கும்!" என்று பொற்கிழிபோல் தனது பரிசுப் பொருளை அறிவித்திருக்கிறார்.

Ola: "சிங்கிள் சார்ஜில் 202 கி.மீட்டரா? இந்தா இன்னொரு ஸ்கூட்டர்!"- கஸ்டமருக்குக் கிடைத்த கிஃப்ட்!

ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், "தங்களின் ஓட்டுதலைக் கண்டு மெச்சினோம். அறிவித்தபடியே உங்களுக்கு இலவசமாக Gerua S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாகக் கிடைக்கும்!" என்று பொற்கிழிபோல் தனது பரிசுப் பொருளை அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
நாள் முழுக்க சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டே இருந்தாலும், அங்கங்கே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தாலும் - ஓலாதான் எப்போதுமே சேல்ஸ் சார்ட்டில் டாப்பில் இருக்கிறது. ஆம், போன மாதம் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலாதான் டாப்! ஏப்ரல் மாதம் மட்டுமே சுமார் 12,500–க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது ஓலா.

ஓலாவில் இரண்டு வேரியன்ட்கள். S1 Pro மற்றும் S1. இதில் S1 Proதான் அனைவரின் சாய்ஸும். காரணம், இதுதான் அதிக ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. S1–ன் ரேஞ்ச் 121 கிமீ. இதுவே S1 Pro–வின் ரேஞ்ச் 181 கிமீ என்று க்ளெய்ம் செய்து வந்தது ஓலா. இப்போது S1–ன் தயாரிப்பை நிறுத்திவிட்டு, S1 Pro–வின் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது ஓலா.

Bhavish Aggarwal gift promise
Bhavish Aggarwal gift promise

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓலா ஸ்கூட்டரின் ரேஞ்ச் பற்றிப் பல பேர் பலவிதமாக ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘‘80 கிமீதான் வருது’’ என்று சிலரும், ‘‘S1 ஸ்கூட்டர் அளவுகூட ரேஞ்ச் தரமாட்டேங்குது’’ என்று பலரும் புகார் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில்… ‘‘202 கிமீ ஓட்டியிருக்கேன் சிங்கிள் சார்ஜில். மிஸன் சக்ஸஸ். என்னை வாழ்த்துங்க ஃப்ரெண்ட்ஸ்!’’ எனும் தொனியில் கார்த்திக் எனும் ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர், ஓலா பற்றி ட்விட்டரில் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்.

கம்பெனி க்ளெய்ம் செய்யும் ரேஞ்சைத் தாண்டி ஒரு ஸ்கூட்டர் அதிகமாகத் தருவது ஆச்சரியமான விஷயம் என்று ஆர்வலர்கள் பலரும் வியக்கிறார்கள். நிஜம்தான்; அராய் (Automotive Research Association of India) எனும் அரசுக்குச் சொந்தமான அமைப்பு, பல கட்டுப்பாடுகளுடன் ஒரு வாகனத்தை இயக்கி, அதில் கிடைக்கும் ரேஞ்சையோ, மைலேஜையோ சொல்லும். அப்படி ஓலா க்ளெய்ம் செய்ததுதான் 181 கிமீ. ரியல் டைமில் இத்தனை கிடைக்க சாத்தியமே இல்லை எனும் பட்சத்தில், கார்த்திக்கின் ஸ்கூட்டர் எப்படி அதையும் தாண்டி 202 கிமீ ஓடியது என்பதுதான் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.

Move OS 2.0
Move OS 2.0

ஆனால், கார்த்திக்கும் அராய்க்கு இணையாக பல கட்டுப்பாடுகளுடன் ஓலா ஸ்கூட்டரை ஓட்டியிருக்கிறாராம். ஆம், ஸ்கூட்டரை எக்கோ மோடில் மட்டும்தான் ஓட்டியிருக்கிறார். ஹைப்பர் மோடெல்லாம் போனால்… 90–கிமீயே தாண்டாது என்பது பலருக்கும் தெரியும். அதேபோல், இந்த S1 Pro–வின் டாப் ஸ்பீடு 115 கிமீ. ஆனால், கார்த்திக் ஆக்ஸிலரேட்டரை முறுக்கு முறுக்கு என்று முறுக்கவில்லை; 27 கிமீ–லேயே கிராஜுவலாகச் சென்றிருக்கிறார். அதிகபட்சம் அவரது டாப் ஸ்பீடு 48 கிமீ!

கார்த்திக்கின் ஸ்கூட்டர் மட்டுமில்லை; ‘இனிமேல் இப்படித்தான்’ என்கிறார்கள் ஓலா டெக்னீஷியன்கள். காரணம், Move OS 2.0 எனும் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் VCU (Vehicle Control Unit) எனும் எலெக்ட்ரிக் வாகனத்தை கன்ட்ரோல் செய்யக்கூடிய ஒரு யூனிட். இவை இரண்டு அப்டேட்களையும் இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு வரிசையாகக் கொடுத்து வருகிறது ஓலா. கார்த்திக் ஓட்டியது Move OS 2.0 மற்றும் VCU அப்டேட் செய்யப்பட்ட ஸ்கூட்டர்.

3% சார்ஜ் இருக்கும் நிலையில், 202 கிமீ ஓடியதற்கான டிஸ்ப்ளே ஆதாரத்துடன் கார்த்திக் வெளியிட்ட புகைப்படத்தைக் கண்டு மகிழ்ச்சியாகிப் போன ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், ‘‘தங்களின் ஓட்டுதலைக் கண்டு மெச்சினோம். அறிவித்தபடியே உங்களுக்கு இலவசமாக Gerua S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாகக் கிடைக்கும்!’’ என்று பொற்கிழிபோல் தனது பரிசுப் பொருளை அறிவித்திருக்கிறார்.

Gerua Colour Edition Ola
Gerua Colour Edition Ola
Gerua என்பது ஓலா S1 Pro ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷன். ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் நினைவாக, ஜிகுஜிகுவென மின்னும் ஆரஞ்ச் கலரில் ஒரு S1 Pro ஸ்கூட்டரை லிமிட்டெட் எடிஷன் மாடலாகத் தயாரித்திருந்தது ஓலா. அதன் பெயர்தான் Gerua. விரைவில் 2 ஓலா ஸ்கூட்டர்களின் உரிமையாளராகப் போகிறார் கார்த்திக்.

இதைக் கண்டு கொதித்துப் போன மற்ற ஓலா வாடிக்கையாளர்கள், ‘‘எங்களுக்கும் Move OS 2.0 அப்டேட் பண்ணினா நாங்களும் பரிசு வாங்கிருப்போம்ல!’’ எனும் ரீதியில் கமென்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர், ‘‘எங்களுக்கு Gerua–வும் வேணாம்; Move OS 2.0 அப்டேட்டும் வேணாம். ஒழுங்கா நம்பர் பிளேட்டையாச்சும் குடுங்க!’’ எனும் ரீதியிலும் திட்டி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism