Published:Updated:

ஓலாவில் அப்டேட்ஸ் மஸ்ட்! மற்றபடி எல்லாவற்றிலும் பெஸ்ட்!

ஓலா S1 Pro
பிரீமியம் ஸ்டோரி
ஓலா S1 Pro

ரீடர்ஸ் ரிவ்யூ: ஓலா S1 Pro

ஓலாவில் அப்டேட்ஸ் மஸ்ட்! மற்றபடி எல்லாவற்றிலும் பெஸ்ட்!

ரீடர்ஸ் ரிவ்யூ: ஓலா S1 Pro

Published:Updated:
ஓலா S1 Pro
பிரீமியம் ஸ்டோரி
ஓலா S1 Pro

புக்கிங் செய்தது: ஆகஸ்ட், 2021

டெலிவரி கிடைத்தது: பிப்ரவரி 3, 2022

வாங்கிய விலை : ரூ.1.41 லட்சம்

பேட்டரி: 3.97kWh

மோட்டார்: 8.5kW (11.56bhp)

டார்க் : 58Nm

சார்ஜிங் நேரம்: 5.30 – 6.00 மணி நேரம்

ரேஞ்ச் : 115 – 130 கிமீ (ரைடிங்கைப் பொருத்து வேறுபடும்)

பிடித்தது: தரம், பெர்ஃபாமன்ஸ், பிரேக்கிங், டயர் கிரிப், வசதிகள் (ஆனால் இன்னும் அப்டேட் ஆகவில்லை), சர்வீஸ், சீட்டுக்கு அடியில் இடவசதி

பிடிக்காதது: டெலிவரி பீரியட், டச் ஸ்க்ரீன் – சார்ஜிங் பாயின்ட் போன்றவற்றுக்குப் பாதுகாப்பு இல்லாதது, பின் பக்க கிராப் ரெயில், மோடு மாற்றுவதில் ஒரு எர்கானமிக் சிக்கல்

‘‘பெரிய பெரிய லம்போகினி, ஆடி, ஃபெராரி கார்களைக்கூடக் கண்டுகொள்ள மாட்டார்கள் போல. ஆனால், ஓலா ஸ்கூட்டரில் போனால், ப்ரீமியம் கார்களில் போகுமளவு மரியாதை கிடைப்பது உண்மைதான். ‘எவ்வளவு விலை சார் ஆச்சு… ரேஞ்ச் என்ன… சார்ஜிங்லாம் எவ்வளவு நேரம் ஆகுது…’னு நிறுத்தி நிறுத்தி விசாரிக்கிறாங்க சார்!’’ என்கிறார்கள், சென்னையைச் சேர்ந்த ஓலா ஓனரான அசோக் மற்றும் அவரது மகன் கணேஷ்ராஜ்.

நாம் ஏற்கெனவே சொன்னபடி, ஓலாதான் ஆட்டோமொபைலின் ஹாட் டாபிக். இப்போது அசோக்கும் கணேஷ்ராஜும்தான் டாக் ஆஃப் தி ராயப்பேட்டை. ‘‘ஓலா ஸ்கூட்டர்ல போவாங்களே!’’ என்று அடையாளம் காண்பிக்கும் அளவு ஃபெமிலியர் ஆகிவிட்டார்கள் அசோக்கும் கணேஷும்.

புதிதாக டெலிவரி எடுத்த ஓலா ஸ்கூட்டரைப் பற்றிப் பரபரப்பாக ரிவ்யூ கொடுத்தனர் தந்தையும் மகனும்!

ஓலாவில் அப்டேட்ஸ் மஸ்ட்! மற்றபடி எல்லாவற்றிலும் பெஸ்ட்!
ஓலாவில் அப்டேட்ஸ் மஸ்ட்! மற்றபடி எல்லாவற்றிலும் பெஸ்ட்!

ஏன் ஓலா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் என்று முடிவெடுத்து விட்டோம். எந்த ஸ்கூட்டர் வாங்குவது என்று வழக்கம்போல் டைலமா. முதலில் டிவிஎஸ் ஐக்யூப்தான் தேர்ந்தெடுத்திருந்தோம். அதன் ரேஞ்ச் ரொம்பக் குறைவாக இருந்தது. மேலும், அதன் பிக்–அப்பும் எனக்குப் பிடிக்கவில்லை. சேட்டக்கைப் பார்க்கவே முடியவில்லை. ஹீரோவில் ஒரு இ–ஸ்கூட்டரை ஓட்டிப் பார்த்தோம். அது என்ன பேர் என்று ஞாபகம் இல்லை. ஆனால், அதன் பெர்ஃபாமன்ஸ் சுமாராகவே இருந்தது. அதற்கப்புறம் ஒக்கினாவா. எங்களுக்கு ரேஞ்ச்தான் முக்கியமான விஷயமாக இருந்தது. 100 கிமீ கிடைத்தாலே போதும் என்றிருந்தது. எதுவுமே 100 கிடைக்கவில்லை. அப்போதுதான் ஓலா பற்றிய செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அதன் ரேஞ்ச் 150 கிமீ–க்கு மேல் என்று சொன்னார்கள். அப்படியென்றால், 100–வது நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துத்தான் ஓலாவை புக் செய்தேன். சினிமாவில் FDFS பார்ப்பார்களே… அது மாதிரி நாங்கள் ஓலாவின் புக்கிங் ஆரம்பித்த ஆகஸ்ட் மாதத்திலேயே புக் செய்துவிட்டோம். அநேகமாக, நான்தான் FDFB (First Day First Booking) ஆக இருப்பேன் என்று நினைக்கிறேன்.

படுத்தி எடுத்த டெலிவரி!

ஆரம்பத்தில் ஓலா மீதிருந்த காதலில் 2 ஸ்கூட்டர்களை புக் செய்தேன். இவர்களின் டெலிவரிதான் எங்களை மிகவும் படுத்தி எடுத்திவிட்டது. 1 ஸ்கூட்டரை கேன்சல் செய்துவிட்டேன். ஓலாவுக்கு ஷோரூம் இல்லை. யார் யாரோ ஸ்லீப்பர் செல்கள் மாதிரி எங்களைத் தொடர்பு கொண்டிருந்தார்கள். முதலில் செப்டம்பர் என்றார்கள்; அப்புறம் நவம்பர் 16… அப்புறம் டிசம்பர் இறுதி… இதை நம்பி நாங்கள் எங்கள் ஆக்டிவாவை வேறு விற்றுவிட்டோம். (!) ஆனால், பிப்ரவரி 3–ம் தேதிதான் எங்கள் வீட்டு வாசலில் வந்திறங்கியது ஓலா.

செய்திகளில் பார்த்தபடி எனக்கு நடக்கவில்லை. பக்காவாக புதுப் பரிசை அளிப்பதுபோல், எனக்கு ஓலா ஸ்கூட்டரை டெலிவரி செய்தார்கள். ஒருவர் ஸ்கூட்டரை எப்படி ஆப்பரேட் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பாடம் எடுத்துவிட்டுப் போனார். அவர்களின் அப்ரோச் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் – ஒரு விஷயம், இன்ஷூரன்ஸ், ஆர்டிஓ வேலை, நம்பர் வாங்குவது என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வெண்டார்கள் இருப்பதால்… எல்லாம் நடந்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கஸ்டமர் கேரும் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. இப்போதுதான் நம்பர் வாங்கினேன். இந்தப் பச்சைக் கலர் நம்பர் ப்ளேட்டைப் பார்க்கும்போது, பரவசமாகவே இருக்கிறது.

ஓலா எப்படி இருக்கு?

நாங்கள் புக் செய்தது ஓலாவின் டாப் எண்டான S1 Pro. இதில் S1 மாடலைவிட வசதிகள், ரேஞ்ச், பேட்டரி எல்லாமே அதிகம். வெயிட்டிங் பீரியட் மற்றும் டெலிவரியில் கடுப்பேற்றிய ஓலா, ஓட்டுதலில் எங்களை மயக்கிவிட்டது. ஒரு 150 சிசி ஸ்கூட்டருக்கு இணையான பெர்ஃபாமன்ஸ் கிடைக்கிறது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். பார்க்கும்போது எடை குறைவாகத் தெரிந்தாலும், ஓட்டும்போது கிச்சென இருக்கிறது ஓலா. இதன் கட்டுமானம் சூப்பர். இதன் எடை 125 கிலோ. ரைடு அண்ட் ஹேண்ட்லிங் அருமை!

எனது தாத்தா ஒருவர், ஸ்கூட்டரை ஓட்டும்போது கீழே போட்டு விட்டார். வாங்கிய ஒரே மாதத்தில் அடி. நல்லவேளையாக, பெரிய சேதம் இல்லை. ஹெட்லைட்டுக்கு மேலே உள்ள டூமில் ஸ்க்ராட்ச் விழுந்துவிட்டது. போன் செய்த உடனேயே மறுநாளே வந்து மாற்றிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இது எனக்குப் பிடித்திருந்தது. மற்றபடி இதை ஓட்ட அற்புதமாகவே இருக்கிறது. ஓட்டுதலில் எந்தக் குறையும் தெரியவில்லை. என்னுடைய பழைய பெட்ரோல் ஸ்கூட்டரில் ரொம்ப தூரம் போனால், முதுகுவலியே வரும். ஆனால், ஓலாவில் நோ! இதன் சீட் உயரம் 792 மிமீ. என் போன்றவர்களுக்குச் சரியாக இருக்கிறது.

சாவி இல்லை. பாஸ்கோடு போட்டால்தான் ஸ்டார்ட் ஆகும்!
சாவி இல்லை. பாஸ்கோடு போட்டால்தான் ஸ்டார்ட் ஆகும்!
சார்ஜிங் ஸாக்கெட்டுக்கு லாக் இல்லை.
சார்ஜிங் ஸாக்கெட்டுக்கு லாக் இல்லை.
36 லிட்டர் இடவசதி. 2 ஹெல்மெட் வைக்கலாம்.
36 லிட்டர் இடவசதி. 2 ஹெல்மெட் வைக்கலாம்.
பட்டன் ஸ்டார்ட், செம ஸ்மூத்!
பட்டன் ஸ்டார்ட், செம ஸ்மூத்!

சார்ஜிங் மற்றும் ரேஞ்ச் எப்படி?

இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய சரியாக எனக்கு 5.30 மணி நேரம் முதல் 6.00 மணி நேரம் வரை ஆகிறது. அதுவாகவே ஆட்டோ கட் ஆஃப் ஆகிவிடுவது அருமை. பயப்படத் தேவையில்லை. இன்பில்ட் பேட்டரி என்பதால், கழற்ற முடியாது. எங்கள் வீடு தரைதளம் என்பதால், நேராக பார்க்கிங்கிலேயே சார்ஜ் போட்டுக் கொள்கிறேன்.

இதன் ரேஞ்ச் அருமை! நான் வெரைட்டியாக டிரைவ் செய்வேன். ஒரு தடவை நார்மல் மோடு, ஹைப்பர் மோடு என்று மாற்றி மாற்றி ஓட்டுவேன். டாப் ஸ்பீடு போவேன். பில்லியன் ரைடரை ஏற்றுவேன். இப்படி ஓட்டும்போது எனக்கு 115 கிமீ வரை கிடைத்தது. ஆனால், என் அப்பா கிராஜுவலாக ஓட்டுவார். அவருக்கு 135 கிமீ வரை கிடைத்ததாகச் சொன்னார். ஓலா க்ளெய்ம் செய்வது 181 கிமீ. ஆனால், எங்களுக்கு இந்த ரேஞ்ச் திருப்திதான். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

பிடித்தது

ஓலாவில் நிறையப் பிடித்த விஷயங்கள் சொல்லலாம். ஒவ்வொன்றாகச் சொல்கிறோம்.

பூட் ஸ்பேஸில் ஷாப்பிங் போய்விட்டு இரண்டு கட்டைப் பைகளை வைத்துவிட்டு வரலாம்போல! அவ்வளவு இடவசதி! 36 லிட்டர் என்றார்கள். இதில்தான் சார்ஜர், ஒரு ஹெல்மெட், கிட் என்று எல்லாமே வைத்துக் கொடுத்தார்கள்.

இதன் பெர்ஃபாமன்ஸ் செம! ஆக்ஸிலரேட்டர் திருகினால் பறக்கிறது. அதிலும் ரைடிங் மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர். 0-40 கிமீ வெறும் 4 விநாடிகளிலேயே ரீச் ஆகிவிடும் என்றார்கள். அது உண்மைதான் சார். என் அப்பா நார்மல் மோடிலேயே ஓட்டுவார். அதுவே சூப்பராக இருக்கிறது. எனக்கு ஸ்போர்ட்ஸ் மோடு பிடிக்கிறது. ஹைப்பர் மோடு இன்னும் ஜிவ்வென்று இருக்கும். (‘நம்பலைன்னா, நீங்க பின்னாடி உட்கார்ந்து ஒரு ரவுண்டு வாங்களேன்.. ப்ளீஸ்’ என்று நம்மை பில்லியனில் உட்கார வைத்து ஓட்டிக் காட்டிவிட்டு, ‘இப்போ நம்புறீங்களா’ என்றார் கணேஷ்ராஜ்.) இதன் டாப் ஸ்பீடு 115 கிமீ என்று ஓலா வெப்சைட்டில் இருக்கிறது. நான் நிஜமாகவே ஒரு ஹைவேஸில் 115 கிமீ வரை தொட்டேன்.

இதன் பிரேக்கிங் சூப்பர். ஒரு தடவை 100 கிமீ வேகத்தில் போய்க் கொண்டிருந்தபோது, சடர்ன் பிரேக் அடிக்க வேண்டிய கட்டாயம். ‘பச்சக்’ என அப்படியே நின்றது ஓலா. வீல் லாக் ஆகவில்லை; ஸ்கூட்டர் ஸ்கிட் ஆகவில்லை. அந்தளவு கிரிப்! நிஜமாகவே சூப்பர்! 220/180 மிமீ டூயல் டிஸ்க், ஏபிஎஸ், சிபிஎஸ்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

இதன் டச் ஸ்க்ரீன் ஆப்பரேஷன் அருமை. இரவு நேரத்தில் கார்களில் இருப்பதுபோன்று இதன் ஆம்பியன்ட் லைட்டிங் இருக்கிறது. அது டார்க் மோடுதான். ஆனால், அருமையாக இருக்கிறது.

இதில் ஸ்பீக்கர்கள் நல்ல தரம். 30 சார்ஜுக்குள் டிரைவிங் மோடு மாற்றும்போது, இது அலெர்ட் செய்தபோது இதை உணர்ந்தேன்.

இதன் எல்இடி ஹெட்லைட் வேற லெவல். இரவு வெளிச்சத்தைப் பீய்ச்சியடிக்கிறது. சுற்றிலும் எல்இடி டிஆர்எல், இண்டிகேட்டர் மற்றும் ரிவர்ஸுக்கு பஸ்ஸர் சவுண்ட் எல்லாம் கார்களைப் போல் இருக்கின்றன.

சைடு ஸ்டாண்ட் போட்டால், இன்ஜின் கட் ஆஃப் ஆகிவிடுவது அருமை.

இதில் ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் நல்ல ஆப்ஷன். பேட்டரிக்கு சார்ஜ் ஏறுவதால், ரேஞ்ச் எக்ஸ்ட்ரா கிடைக்கும் என்கிறார்கள். ஒரு சரிவான மேட்டில் இறங்கும்போது, பிரேக் பிடிக்கத் தேவையில்லை. ஆக்ஸிலரேட்டரை ரிவர்ஸ் மோடில் திருகினால்… இது வேலை செய்யும். அருமையான கன்ட்ரோல் கிடைக்கிறது. R-Gen பிரேக்கிங்கை நன்கு உணர முடிகிறது.

சார்ஜிங் போர்ட் பயனுள்ளதாக 
இருக்கிறது!
சார்ஜிங் போர்ட் பயனுள்ளதாக இருக்கிறது!
டிஸ்க் பிரேக்குகளின் ஃபீட்பேக் அருமை!
டிஸ்க் பிரேக்குகளின் ஃபீட்பேக் அருமை!
டச் ஸ்க்ரீன் ஆப்பரேஷன் அருமை. 
இரவு நேரங்களில் செமயாக இருக்கிறது.
டச் ஸ்க்ரீன் ஆப்பரேஷன் அருமை. இரவு நேரங்களில் செமயாக இருக்கிறது.
பின் பக்கம் கிராப் ரெயில் ஓகே. பில்லியன் ரைடருக்கு பேக்ரெஸ்ட் இருந்தால், இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
பின் பக்கம் கிராப் ரெயில் ஓகே. பில்லியன் ரைடருக்கு பேக்ரெஸ்ட் இருந்தால், இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

பிடிக்காதது

இதில் கொஞ்சம் பிராக்டிக்கலாக சில பிரச்னைகள் இருக்கின்றன. முதலில் இன்னும் ஓலாவில் OTA அப்பேட் நடக்கவில்லை என்பதால்… எங்களால் செல்போன் கனெக்ட் செய்ய முடியவில்லை. புளூடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், ஸ்பீக்கர் பயன்பாடு, க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை முறையாகச் செய்ய முடியவில்லை.

இதில் கீ–லெஸ் என்பது நன்றாகத்தான் இருக்கிறது. சாவியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. பாஸ்கோடு போட்டால்தான் வண்டி அன்லாக் ஆகும். ஆனால், இதுவே பார்க்கிங்கில் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பல சேட்டை பார்ட்டிகள் நோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தப்பான பாஸ்வேர்டு அடிக்கடி போட்டால், ஸ்க்ரீன் லாக் ஆகிவிடுகிறது. திரும்பவும் அன்லாக் செய்ய 10 நிமிஷம் காத்திருப்பதெல்லாம் கொடுமை சார்! ஓலா இந்த அப்டேட்டுகளெல்லாம் செய்ய ஜூன் மாதம் வரை கெடு கேட்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் ஒரு ட்ரிப்பிங் ஆப்ஷன் கொடுக்கலாம் ஓலா!

அதேபோல் பின் பக்க சார்ஜிங் பாயின்ட்டுக்கும் லாக் இல்லை. அழுத்தினால், யார் வேண்டுமானாலும் திறக்க முடிகிறது.

பின் பக்க கிராப் ரெயில் உறுதியாகத்தான் இருக்கிறது. ஆனால், பேக் ரெஸ்ட் இருந்திருக்கலாம். காரணம், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் மோடில் ஓட்டும்போது பிக்–அப் அதிகமாக இருப்பதால்… பின் பக்கப் பயணிகள் சட்டென பின்னால் கீழே விழ வாய்ப்புண்டு.

பெண்களுக்கு ஃபுட் ரெஸ்ட் இல்லை. என் அம்மா ஏறி இறங்க கஷ்டப்படுகிறார். அதேபோல் லேடீஸ் ஹூக்கும் இல்லை.

மோடு மாற்றும்போது, சட்டென நினைத்த மோடுக்கு வர முடியவில்லை. ஸ்போர்ட்ஸ் மோடிலிருந்து நார்மலுக்கு வர வேண்டுமென்றால், ஹைப்பர் போய்த்தான் வரவேண்டியிருக்கிறது. (பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது புளியம்பட்டி எஃபெக்ட்!)

ஓலா வாங்கலாமா?

ஓலா என்னைப் பொருத்தவரை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக எங்கள் நண்பனாகி இருக்கிறது. இதைச் சாலையில் ஓட்டிப் போகவே கெத்தாக இருக்கிறது. செய்திகளில் படித்தது மாதிரி எனக்கு என் ஸ்கூட்டரில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. டெலிவரி கொடுத்ததிருந்தில் இருந்து சர்வீஸ், ஓட்டுதல் வரை எல்லாமே எனக்குப் பக்கா! ஒரு பாகம் பழுதடைந்ததும், மறுநாளே சரி செய்து கொடுத்துவிட்டார்கள். நான்தான் இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்யவில்லை. 840 ரூபாய் ஆனது. ஸ்டார்ட்அப் நிறுவனம் என்பதால், சில குறைகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். முக்கியமாக, அந்த டெக்னிக்கல் அப்டேட்! இதன் விலை 1.41 லட்சம். அவர்கள் சொன்ன எல்லா வசதிகளுடன் – டெலிவரி காலத்தைக் குறைத்து, லேசாக விலையையும் குறைத்தால்… ஓலாவை எல்லோரும் புக் செய்துவிடுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism