Published:Updated:

1.5 லட்சத்துக்கு பைக் வாங்கப் போறீங்களா? புல்லட், Yezdi-க்குப் போட்டியா வருது டிவிஎஸ் ரோனின்!

TVS Ronin

ஏபிஎஸ்–லேயே மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். அர்பன், ரெயின் என்று இரண்டு மோடுகள். மழை நேரத்திலும் நல்ல கிரிப் கிடைக்கும். இதில் கேடிஎம் மாதிரி ஸ்லிப்பர் க்ளட்ச் ஆப்ஷனும் உண்டு. இதனால், அதிகமான வேகத்தில் குறைந்த கியரில் போகும்போது, ‘படார்’ என நாக்கிங் இருக்காது.

1.5 லட்சத்துக்கு பைக் வாங்கப் போறீங்களா? புல்லட், Yezdi-க்குப் போட்டியா வருது டிவிஎஸ் ரோனின்!

ஏபிஎஸ்–லேயே மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். அர்பன், ரெயின் என்று இரண்டு மோடுகள். மழை நேரத்திலும் நல்ல கிரிப் கிடைக்கும். இதில் கேடிஎம் மாதிரி ஸ்லிப்பர் க்ளட்ச் ஆப்ஷனும் உண்டு. இதனால், அதிகமான வேகத்தில் குறைந்த கியரில் போகும்போது, ‘படார்’ என நாக்கிங் இருக்காது.

Published:Updated:
TVS Ronin
ஸ்கூட்டரில் ஆரம்பித்து ஸ்போர்ட்ஸ் பைக், ரேஸ் பைக், கம்யூட்டர் பைக் என எல்லா வெரைட்டிகளிலும் டிவிஎஸ் நிறுவனத்தில் உண்டு. க்ரூஸரிலும் ஆஃப் ரோடிலும் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. இப்போது க்ரூஸர் செக்மென்ட்டில் நச்சென ஒரு பைக்கை இறக்கி இருக்கிறது டிவிஎஸ். அது, ரோனின்.

சென்ற தடவை ஆட்டோ எக்ஸபோவில் ஜேப்பலின் (Zappelin) என்றொரு பைக்கைக் காட்சிப்படுத்தி இருந்தது. அந்த ஜேப்பலின் பைக்தான் இப்போது ரோனின் (Ronin) என்ற பெயரில் வந்திருக்கிறது.

டிவிஎஸ் ரோனின் பைக், நேற்று ஜூலை மாதம் நல்ல அதிரடி விலையில் இறங்கியிருக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக – ரூ.1.49 லட்சத்தில் இருந்து 1.69 லட்சம் வரை பொசிஷன் செய்திருக்கிறது டிவிஎஸ். ரோனினில் மொத்தம் 3 வேரியன்ட்கள். பேஸ் (ரூ.1.49 லட்சம்), பேஸ் ப்ளஸ் (ரூ.1.56 லட்சம்), மிட் (ரூ.1.69 – 1.71 லட்சம்). இது சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

TVS Ronin
TVS Ronin

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யமஹா FZ-X, ஹோண்டா ஹைனெஸ் CB350, பல்ஸர் 250, டொமினார் 250, புல்லட் க்ளாஸிக், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர், ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350 போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக வரவிருக்கிறது ரோனின். அப்படியென்றால்… இது ஒரு குவார்ட்டர் லிட்டர் இன்ஜினா! கிட்டத்தட்ட அதே! 225 சிசியில் இதைக் கொண்டு வந்திருக்கிறது டிவிஎஸ்.

ரோனினில் வேற என்னென்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரெட்ரோவா… மாடர்னா?

இதை ஒரு ஸ்க்ராம்ப்ளர் பைக் மாதிரியே வடிவமைத்திருக்கிறது டிவிஎஸ். இதன் பழைய காலத்து ரெட்ரோ ஸ்டைல் கொண்ட வட்ட வடிவ ஹெட்லைட்ஸ் அப்படித்தான் இருக்கிறது. இந்த ஹெட்லைட்டுக்கு உள்ளே ஒரு புதுமை. T வடிவத்தில் எல்இடி டிஆர்எல் பளபளக்கிறது. இது இரவு நேரத்தில் பக்காவாக இருக்கலாம். சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுத்திருக்கிறார்கள்.

கஃபே ரேஸர் பைக் என்றும் ரோனினைச் சொல்லலாம். இதன் சீட்டிங் பொசிஷனும், சிங்கிள் பீஸ் சீட்டும், லாங் ரைடுக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்ட ஃபுட் பெக்ஸும், கறுப்பு அடிக்கப்பட்ட இன்ஜின் கேஸிங்கும் அப்படித்தான் இருக்கின்றன. இதன் பெட்ரோல் டேங்க், ஒரு கண்ணீர்த் துளி மாதிரி இருக்கிறது. கறுப்பு நிற எக்ஸாஸ்ட்டுக்கு மேலே, End Can வரை சில்வர் கலர் டிப் கொடுத்திருப்பது ஸ்டைல். இதன் ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் தகதகவென மின்னுகின்றன.

ஸ்க்ராம்ப்ளர் என்பதால், மட் கார்டு அகலமாக இருக்கிறது. சேறு சகதிகள் இருக்கும் ஆஃப்ரோடு என்றாலும் சிரமமில்லாமல் பயணம் செய்யலாம். இன்ஜினுக்குக் கீழே அண்டர் பெல்லி பேன் கொடுத்திருக்கிறார்கள். ஸ்பீடு பிரேக்கர்களில் இருந்து இது இன்ஜினைப் பாதுகாக்கும். இதன் மல்ட்டி ஸ்போக் அலாய் வீல்கள், செம மாடர்ன்!

TVS Ronin | டிவிஎஸ் ரோனின்
TVS Ronin | டிவிஎஸ் ரோனின்

கலர் ஆப்ஷன்களிலும் கலக்குகிறது ரோனின். பேஸ் வேரியன்ட்டுக்கு Lightning Black மற்றும் Sigma Red கலர்கள். பேஸ் ப்ளஸ் வேரியன்ட்டுக்கு டெல்டா புளூ மற்றும் Stargaze பிளாக் ஷேடு கலர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன் டாப் எண்ட் வேரியன்ட்தான் பலரின் சாய்ஸாக இருக்கலாம். காரணம், பழைய காலத்து ரெட்ரோவும் மில்லினியல் மாடர்னும் கலந்தடிக்கும் கிரே (Galactic Grey) மற்றும் ஆரஞ்ச் (Dawn Orange) நிறம் பார்ப்பதற்கே டால் அடிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைசேஷன் ஆப்ஷனும் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். ரோனினை உங்கள் விருப்பத்திற்கே டிவிஎஸ்–ஸிடமே சொல்லி கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

வசதிகளில் சொல்லியடிக்கும் ரோனின்!

இதில் முழுக்க முழுக்க எல்இடி மயம் என்பது ஸ்பெஷல். வட்ட வடிவ ஹெட்லைட்டில் இருந்து இரவு நேரங்களில் பல மீட்டர் தூரங்களுக்கு இந்த எல்இடி லைட்டிங் பீய்ச்சி அடிக்கும். இதில் யுஎஸ்பி சார்ஜரும் இருக்கிறது. இதிலுள்ள டிவிஎஸ்–ன் Smart Xonnect எனும் வசதி கொண்ட புளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன்தான் இதில் ரொம்ப ஸ்பெஷல். இந்த ஸ்க்ரீனிலேயே நம் மொபைலுக்கு வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ் அலெர்ட்கள் தெரியும். இதில் கார்களைப் போல் வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிகளும் கொடுத்திருக்கிறார்கள். இதில் டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் இருப்பதால், வழி தெரியாத இடங்களில் திருப்பத்துக்குத் திருப்பம் நமக்கு வழி காட்டும் பைக்.

இதில் ஏபிஎஸ் – சிங்கிள் மற்றும் டூயல் சேனல் ஆப்ஷன் இருக்கிறது. டாப் எண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் கிடைக்கும். ஏபிஎஸ்–லேயே மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். அர்பன், ரெயின் என்று இரண்டு மோடுகள். மழை நேரத்திலும் நல்ல கிரிப் கிடைக்கும். இதில் கேடிஎம் மாதிரி ஸ்லிப்பர் க்ளட்ச் ஆப்ஷனும் உண்டு. இதனால், அதிகமான வேகத்தில் குறைந்த கியரில் போகும்போது, ‘படார்’ என நாக்கிங் இருக்காது.

இது ஒரு 225.9 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வ் கொண்ட இன்ஜின். இப்போது வால்வுகளை அதிகப்படுத்துவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். மைலேஜுக்கு இதுதான் உறுதுணையாக இருக்கும்.
TVS நிறுவனம்
TVS நிறுவனம்
இதில் பவர் 20.4bhp மற்றும் 19.93Nm டார்க் இருக்கிறது. பிக்–அப் நன்றாகவே இருக்கலாம். டாப் ஸ்பீடு 130 கிமீ போனால், க்ரூஸர்கள் ரோனினை விரும்புவார்கள். ஆயில் கூல்டு இன்ஜின் இருப்பதால், கால்களில் இன்ஜின் சூடு தெரியாது என்று நினைக்கிறேன்.

இதில் இன்டக்ரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மோட்டார் இருப்பதால், செம ஸ்மூத்தான ரைடு கிடைக்கும். குளிர்காலத்திலும் ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்காது. என்ன, இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இருக்கிறது. யெஸ்டி போன்ற போட்டியாளர்களிடம் 6 ஸ்பீடு இருக்கிறது.

இதன் சஸ்பென்ஷன்தான் அதிக கவனம் ஈர்க்கும் என்று நினைக்கிறேன். அந்த 41மிமீ தங்க நிற ஃபோர்க்குகள் … கையாளுமைக்குப் பெயர் பெற்ற Showa Forks அருமை. பின் பக்கம் கேஸ் சார்ஜ்டு மோனோ ஷாக் சஸ்பென்ஷன். அதனால், மேடு பள்ளங்களில் நல்ல பலன் இருக்கும். இதன் 17 இன்ச் அலாய் வீல்கள், டூயல் பர்ப்பஸ் டயர்கள். இரு பக்கமும் டிஸ்க்குகள்… அதுவும் டூயல் சேனல் ஏபிஎஸ் பலரது ஆப்ஷனாக இருக்கலாம். இதன் வீல்பேஸ் 1,357 மிமீ. அதனால், வளைத்துத் திருப்பி ஓட்ட வசதியாகவே இருக்கும். இதன் எடை 160 கிலோ. அதனால், எடை குறைந்தவர்களும் எளிதில் கையாளலாம்.

க்ரூஸர்களுக்கான ஆசையைத் தீர்த்துட்டீங்க… அப்படியே ஆஃப்ரோடு பக்கம் எப்போ வருவீங்க டிவிஎஸ்!?