Published:Updated:

“புல்லட் பீட்தான் என் ஹார்ட் பீட்!”

சத்தியநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சத்தியநாராயணன்

நம்ம ஊரு மெக்கானிக்: கோவை

தெருவுக்குத் தெரு மெக்கானிக் ஷாப்கள் வந்தாலும், ஒவ்வொரு பைக்குக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கதான் செய்கின்றனர். அதிலும் ஆண்களின் ஆல் டைம் க்ரஷ் லிஸ்ட்டில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட் ஸ்பெஷலிஸ்ட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோவையின் மோஸ்ட் வான்டட் புல்லட் ஸ்பெஷலிஸ்ட் மெக்கானிக் சத்தியநாராயணன், 30 ஆண்டுகள் அனுபவம்... மாநிலம் கடந்த கஸ்டமர்கள் என்று கவனம் ஈர்த்து வருகிறார். சித்தாபுதூர் பகுதியில் உள்ள அவரது வொர்க்ஷாப்புக்குச் சென்றோம். புல்லட் ஒன்லி வாசகம், புல்லட் புகைப்படங்கள், பிறந்த மேனியில் புல்லட்கள் என்று ஒரே புல்லட் வாசம்.

ஒரு 350சிசி புல்லட்டை சர்வீஸ் செய்து கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் சத்தியநாராயணன். “எனக்குச் சொந்த ஊரு கோயம்புத்தூர்தான். 8-வது வரைக்கும் படிச்சேன். 16 வயசுல புல்லட்லதான் பைக் ஓட்டிப் பழகினேன். அப்பாதான், ஒரு புல்லட் வொர்க்ஷாப்ல சேர்த்துவிட்டார். என் குருநாதர் பெயர் அசோகன். அவருக்கு அசிஸ்டென்ட்டா இருந்தேன். எனக்குக் கொடுத்த வேலையை நல்லா செஞ்சு நம்பிக்கையை வர வெச்சேன். அதுக்கப்புறம், கேரளாவில் 5 வருஷம் ஒரு புல்லட் வொர்க்ஷாப்ல இருந்தேன். அப்புறம் 2000-ல் இங்கே சொந்தமா வொர்க்ஷாப் தொடங்கினேன். கவனம் எல்லாம் புல்லட்லயே இருந்ததால, வேற எந்த பைக் மேலயும் என் கவனம் போகல. இப்ப ஒரு நாளுக்கு ரெண்டு பைக் ஜெனரல் சர்வீஸ் பண்ணுவேன். இன்ஜின் நல்லா ட்யூன் பண்ணுவேன். எனக்குத் திருப்தியா இருந்தா மட்டும்தான் வண்டியை டெலிவரி கொடுப்பேன்.

சத்தியநாராயணன்
சத்தியநாராயணன்

லோக்கல்ல மட்டும் எனக்கு 250 கஸ்டமர் இருப்பாங்க. ஒட்டன்சத்திரம், ராஜபாளையம்னு தமிழ்நாட்ல நிறைய இடங்கள்ல கஸ்டமர் இருக்காங்க. இதுபோக கேரளால திருவனந்தபுரம், ஹைதராபாத், அசாம்லயும் எனக்கு கஸ்டமர் உண்டு. அசாம், ஹைதராபாத், கேரளால இருந்து ட்ரெய்ன்ல பைக்கைப் போட்டு விடுவாங்க. நான் சர்வீஸ் பண்ணிட்டு, திரும்பி பைக்கை ட்ரெய்ன்ல பார்சல் பண்ணி அனுப்பிடுவேன். லண்டனிலும் எனக்கு ஒரு கஸ்டமர் இருக்கார். அவர் சொந்த ஊர் கோயம்புத்தூர்தான். 3 புல்லட் வாங்கி, என்னோட கன்ட்ரோல்லதான் விட்ருக்காரு. எப்பவாச்சு இங்க வரப்ப, புல்லட் எடுத்துட்டுப் போவார். இன்னொரு கஸ்டமர், நம்மகிட்ட சர்வீஸ் பண்ணி கோயம்புத்தூர் to நேபாளம் புல்லட்ல ட்ராவல் பண்ணாரு. அதுல எந்தப் பிரச்னையும் வரலனு சந்தோஷப்பட்டாரு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சத்தியநாராயணன்
சத்தியநாராயணன்

லோக்கல்ல ஒரு புல்லட் அடிக்கடி கம்ப்ளைன்ட் வந்துருக்கு. அந்த வண்டி ஓனர் - ஷோ ரூம், தெரிஞ்ச வொர்க்ஷாப்னு விட்டு 5 தடவை பேட்டரி மாத்தி ஏகப்பட்ட ஆயிரங்கள் செலவழிச்சுருக்காரு. அப்படியும் பிரச்னை சரியாகல. நண்பர் மூலமா நம்மகிட்ட வந்தார். சின்ன எலெக்ட்ரானிக் பிரச்னைதான். 350 ரூபாய்ல பிரச்னை முடிஞ்சது. அவரு ரொம்ப ஹேப்பி.

புல்லட்னாலே கெத்துதான். இதோட ஸ்மூத்னஸ் ரொம்ப ஸ்பெஷல். நான் புல்லட்ல எல்லா மாடலும் ஓட்டிருக்கேன். 60 - 62 மாடல்தான் செமயா இருக்கும். அதுகிட்ட எதுவுமே நிக்க முடியாது. அப்ப இருந்த செக்மென்ட்டும், இப்ப இருக்க செக்மென்ட்டும் வேற! சர்வீஸ்லயும் பழைய மாடல்ல நிறைய சவால் இருக்கும். பெரிய அனுபவம் இருந்தா மட்டும்தான் வண்டியப் புரிஞ்சுக்கிட்டு, கை வைக்க முடியும்! புல்லட் பீட்தான் என் ஹார்ட் பீட்னுகூட சொல்லலாம்! ஐ லவ் புல்லட்!” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புல்லட்டை ஒழுங்கா பராமரிங்க!

“பழைய புல்லட்ல பராமரிப்பு அதிகம். லேட்டஸ்ட் புல்லட்ல அவ்வளவா இல்லை. ஆனா சில விஷயம் நோட் பண்ணுங்க. இதில் செயினுக்கு கவர் இல்லாம ஓப்பன்லதான் இருக்கும். இதனால, செயின் சீக்கிரம் சூடாகிடும். 10 நாளுக்கு ஒரு தடவை, செயினுக்கு ஆயில் விடணும். 3,000 to 4,000 கி.மீ-க்கு ஆயில் மாத்திடுங்க. பலர் இப்ப 5,000 - 6,000 கி.மீ வரை ஓட்றாங்க. அது தப்பு பாஸ். திடீர்னு வண்டி எங்கயாச்சு நின்னுடுச்சுனா, ப்ளக் ஏதாவது ஷார்ட் ஆகிருக்கானு பார்க்கணும். பேட்டரியில் இருந்து வண்டிக்கு கரன்ட் வருதானு ஃப்யூஸ் செக் பண்ணனும். அதேமாதிரி, லாங் ட்ரிப் அடிக்கறவங்க, ஒரு ப்ளக் ஸ்பேர் வெச்சுக்கணும். டூல்ஸ் இருக்கானு செக் பண்ணிட்டு எக்ஸலேட்டர் கேபிள், க்ளட்ச் கேபிள் கைல வெச்சுக்கணும். செயின் லாக் வெச்சுக்கறதும் சேஃப்!” என்கிறார் சத்தியநாராயணன்.