‘பைக்கை சர்வீஸ்க்கு விடணும். நல்ல இடமா சொல்லுங்க!’ என ஈரோட்டில் விசாரித்தால் குமார் ஒர்க்ஷாப்பைத்தான் கை காட்டுகிறார்கள். `‘ஈரோடு வண்டிங்க மட்டுமில்ல; சென்னை, கோயமுத்தூர்னு பல ஊர்கள்ல இருந்தும் குமார் ஒர்க்ஷாப்புக்கு வண்டியை சர்வீஸ்க்குக் கொண்டு வர்றாங்க’’ என குமார் ஒர்க்ஷாப் பற்றிச் சொல்லச் சொல்ல, நமக்கு ஆர்வம் அதிகமானது. ஈரோடு ஜிஹெச் ரவுண்டானாவிலிருந்து நசியனூர் செல்லும் சாலையில் 50 மீட்டரில் ரைட் எடுத்தோம். குவிந்து கிடந்த பைக்குகளுக்கு இடையே குமாரை ஸ்பானரும் ஸ்க்ரூவுமாகப் பிடித்தோம்.

“பச்சைமுத்துங்கிறதுதான் என்னோட பேர். ஆனா, குமார்னு சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும். சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்துல கரையானூர்தான் என்னோட சொந்த ஊர். அம்மா - அப்பா விவசாயக் கூலிங்கதான். ரொம்ப வறுமையான குடும்பம். சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம, வேலை தேடி ஈரோடு ரங்கம்பாளையத்துல வந்து செட்டில் ஆனோம். என்னோட 10-வது வயசுல, ஈரோடு ஃபயர் ஸ்டேஷன் பக்கத்துல இருந்த ‘மணி ஆட்டோஸ்’ங்கிற இடத்துலதான் முதன்முதலா வேலைக்குச் சேர்ந்தேன். வாரச் சம்பளம் 10 ரூபாய்தான். ‘பெயின்ட் அடிக்கிற வேலைக்குப் போனா வாரம் 250 ரூபாய் சம்பளம் கிடைக்கும்ல. ஒர்க்ஷாப்புக்குப் போனா வீட்டுக்கு வராத’ன்னு அப்பா திட்டுவாரு. ராத்திரில டிப்போவுக்கு பஸ் க்ளீனர் வேலை பார்த்தேன்.

1994-ல் யமஹா ஸ்பெஷலிஸ்ட்டான மைதீன் பாய்கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் 2000-ல் `குமார் ஆட்டோ ஒர்க்ஸ்’ங்கிற பேர்ல சொந்தமா கடையைப் போட்டேன். பழக்கமான கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. காசுக்காக வேலை பார்க்காம, கஷ்டமரோட திருப்திதான் முக்கியம்னு நினைச்சேன். காலையில 7 மணிக்கு வந்தா நைட்டு ஒரு மணி வரைக்கும் கடையிலயேதான் இருப்பேன். ஆரம்பத்துல யமஹா பைக் மட்டும்தான் சர்வீஸ் செஞ்சுக்கிட்டு இருந்தேன். இப்போ பழைய யமஹா பைக்குக்குச் சரியான ஸ்பேர்ஸ் கிடைக்காததால, அதோட சேர்த்து ஹோண்டா, புல்லட், பஜாஜ் என எல்லா வண்டியும் சர்வீஸ் செய்றேன்.

கஸ்டமர் என்கிட்ட வண்டியை கொண்டு வந்து இந்தந்த பிரச்னையெல்லாம் இருக்குன்னுல்லாம் சொல்லமாட்டாங்க. நான் வண்டியை ஓட்டிப் பார்த்து, என்னென்ன மாத்தணும், என்ன வேலை செய்யணும்னு செஞ்சி கொடுப்பேன். ஈரோடு மட்டுமில்லாம சென்னை, பெங்களூர், கர்நாடகா, கோயமுத்தூர், சேலம், நாமக்கல் எனப் பல ஊர்கள்ல இருந்தும் என்கிட்ட சர்வீஸ்க்கு வண்டியைக் கொண்டு வருவாங்க. ஒரு சிலர் டிரெயின்ல வண்டியை அனுப்பி வைப்பாங்க. நான் சர்வீஸ் முடிச்சி ட்ரெயின்ல வண்டியை பார்சல் போட்டு விடுவேன். 80 ரூபாய் லேபர் சார்ஜ் இருந்தப்ப என்கிட்ட வண்டி விட்டவங்க, இன்னைக்கும் என்கிட்டதான் சர்வீஸ்க்கு விடுறாங்க.

ஒரு வாரத்துக்கு 40 வண்டியை சர்வீஸ் செஞ்சு அனுப்பிக்கிட்டு இருக்கேன். வர்ற வண்டிகளை சர்வீஸ் செய்ய நேரம்தான் இல்லை. ‘எப்ப பார்த்தாலும் கடை கடைன்னு இருக்கீங்க. எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க’ன்னு என் வீட்டுக்காரம்மாகூட நக்கலா சொல்லுவாங்க. எனக்கு முதல் மனைவி ஒர்க்ஷாப்தான். கனவு கூட பைக் ரிப்பேர் பண்ற மாதிரிதான் வரும்!” என்று டெஸ்ட் டிரைவுக்குக் கிளம்பி விட்டார் குமார்.

பாதுகாப்பான பயணத்துக்கு:

தினமும் பைக்கைத் துடைக்கணும். அப்பதான் வண்டியில என்ன நட்டு, போல்ட் இருக்கு இல்லைன்னு தெரியும்.

ஏர், பிரேக், பெட்ரோல், ஆயில் செக் பண்ணாம வண்டியை எடுக்கவே கூடாது.

2500 கிமீக்கு ஒரு சர்வீஸ்னு செஞ்சா வண்டியில எந்த பிரச்னையும் இருக்காது. ஆயில், பிரேக், ஏர் ஃபில்டர், கார்பரேட்டர், கிளட்ச் கேபிள், பிரேக் கேபிள் என எல்லாம் சரியா இருக்கான்னு செக் செய்யணும். வண்டி எந்த அளவுக்குக் கண்டிஷனா இருக்கோ, அந்த அளவுக்கு நம்முடைய பயணம் பாதுகாப்பானதாக இருக்கும்.