Published:Updated:

”ஸ்பானர் பிடிக்காத வாழ்க்கை எனக்குப் பிடிக்காது!”

லட்சுமணன்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமணன்

நம்ம ஊரு மெக்கானிக் - திருச்சி லட்சுமணன்

”ஸ்பானர் பிடிக்காத வாழ்க்கை எனக்குப் பிடிக்காது!”

நம்ம ஊரு மெக்கானிக் - திருச்சி லட்சுமணன்

Published:Updated:
லட்சுமணன்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமணன்

"டூவிலரை சர்வீஸ் பண்ணணும்... எந்த மெக்கானிக்கிட்ட கொடுக்கலாம்" என திருச்சியில் கேட்டால், பலரும் கை காட்டுவது மெக்கானிக் லட்சுமணனைத்தான்.

திருச்சி உறையூரில் உள்ள எஸ்.வி திருமண மண்டபம் அருகில் உள்ளது அந்த ஒர்க் ஷாப். "லட்சுமணன் என்கிறதுதான் என்னோட பேரு. 'பூரி'ங்கிறது என்னோட பட்டப்பேரு. ஆனா, இப்போ 'மெக்கானிக் பூரி' ன்னு சொன்னாத்தான் எல்லாருக்குமே தெரியும். திருச்சி நேஷனல் காலேஜ்ல பிஏ கணிதம் படிச்சிட்டு இருந்தப்பதான், இந்தத் தொழிலுக்கு வந்தேன். பல கால அனுபவத்துக்குப் பிறகுதான் சொந்தமாக ஒர்க்‌ஷாப் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல பஜாஜ் மற்றும் யமஹா ஆத்ரைஸ்ட் மெக்கானிக்கா இருந்தேன். சரியான ஸ்பேர்ஸ் கிடைக்காததால, எல்லா வண்டியும் சர்வீஸ் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

பைக் வேலை செய்யும்போது, இன்ஜின் ஃபிட்டிங்கில் எனக்குத் திருப்தி வரலைன்னா... அப்படியே விட்டு போட்டுட்டுத் தூங்கிடுவேன். தெம்பா எழுந்து வந்து வேலை செய்யும்போது, இன்ஜின் நான் சொல்ற பேச்சைக் கேட்க ஆரம்பிக்கும். எனக்கு முழுத் திருப்தி கிடைக்கிற வரைக்கும் விடமாட்டேன். எனக்குத் திருப்தி ஏற்பட்டால் மட்டும்தான், கஸ்டமருக்கு பைக்கை டெலிவரி கொடுப்பேன். இல்லைன்னா, கூடுதலாக கொஞ்ச நாளானாலும் கேட்டு துல்லியமா வேலை பார்த்துத்தான் அவங்க கையில் கொடுப்பேன். வண்டியோட சத்தம் ஒரு நாள் கேட்கலைன்னாலும், எனக்குப் பசி, தூக்கம் வராது!'' என்கிறார். அது மட்டுமில்லை; அந்த ஏரியாவின் பைக் அட்வைஸரும் லட்சுமணன்தானாம். புதிதாய் டூ-வீலர் வாங்குபவர்கள் இவரின் அட்வைஸ்படி கேட்டுத்தான் நடக்கிறார்களாம்.

நம்ம ஊரு மெக்கானிக்
நம்ம ஊரு மெக்கானிக்

தினமும் டூ-வீலரைக் கவனிங்க!

பைக் பராமரிப்பில ரெண்டு உண்டு. ஒண்ணு, நாமே செய்கிற தினசரிப் பராமரிப்பு. அடுத்ததா,ரெகுலர் மெக்கானிக் சர்வீஸ். இதில், தினசரிப் பராமரிப்பை ஒழுங்காகச் செய்து வந்தாலே, சர்வீஸ் செலவு குறையும். இல்லைன்னா பல ஆயிரத்துக்கு இழுத்துவிட்டும்.

டெய்லியும் வண்டியைத் துடைக்கணும்; அப்படிச் செய்தாலே வண்டியில் என்ன பிரச்சனைன்னு நாமே கண்டுபிடித்து விடமுடியும்.

தினமும் காலையில செல்ஃப் ஸ்டார்ட் பண்ணாதீங்க. வண்டியோட ஆயுள் குறைந்துவிடும். அதுக்கு முன்பு ஐந்தாறு முறை வண்டியை கிக் செய்தாலே போதும்; இன்ஜினுக்கு நல்லது.

மனிதர்களுக்கு இதயம் எப்படியோ, அதுபோல பைக்குகளுக்கு இன்ஜின். ஆயில் குறைகிறதா என்று தினம்தோறும் கவனிப்பது நல்லது.

பைக்குகளுக்கு செயின் ஸ்ப்ராக்கெட் ரொம்பவும் முக்கியமானது. செயின் டைட்டாகவும் இருக்கக் கூடாது, தளர்வாகவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தா அதிக விலை கொடுத்து செயின் ஸ்ப்ராக்கெட்டை மாத்தவேண்டியிருக்கும். இதனைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், மைலேஜ், பிக்-அப் போன்ற பிரச்னைகள் வரும்.

"ஒரு வாரத்துக்குக் குறைந்தது 20 வண்டிக்கு மேல சர்வீஸ் செஞ்சு அனுப்பிட்டு இருக்கேன். வர்ற எல்லா வண்டிகளையும் என்னால சர்வீஸ் செய்ய முடியல. என் மகள், `ஏம்ப்பா, உனக்கு வயசாச்சில்லப்பா. கொஞ்சம் வீட்டிலிருந்து ரெஸ்ட் எடுக்கலாம்ல?’ என அடிக்கடி அட்வைஸ் பண்ணுவா. அதுக்கு, `அம்மாடி, ஸ்பேனர் தொடாம என்னால இருக்க முடியலடா; அப்புறம் வண்டியோட சத்தம் என் காதுல கேட்கல்லைனா எனக்குச் சரியா தூக்கம் வரமாட்டுதுடா' எனச் சொல்லியிருக்கேன்.

36 வருஷமா மெக்கானிக் தொழில்ல இருக்கேன். இதுவரையிலும் 100 பேருக்கும் மேல எங்கிட்ட தொழில் கத்துக்கிட்டு சொந்தமா கடை வச்சிருக்காங்க. அதுல ஏகப்பட்ட பேரு, என்னோட பெயர் சொல்ற மாதிரி தொழில் சுத்தமா செஞ்சிட்டு வராங்க; இதுவே பெருமைதானே?’’ என்றார், இந்த 68 வயது இளைஞன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism