ஜாவாவில் ஆரம்பித்து 1950கள் புல்லட், ராஜ்தூத் வரை வின்டேஜ் பைக்குகள் வைத்திருக்கும் பலருக்கும் ராஜனை நன்கு தெரியும். ஆம், சென்னையில் வின்டேஜ் பைக்குகளின் செல்லப் பிள்ளைதான், மெக்கானிக் ராஜன்.

60 வயதான ராஜனுக்கு, பைக் பழுது பார்ப்பதில் 50 ஆண்டு அனுபவம். ஆம், 10-வது வயதிலேயே ஸ்பானர் பிடிக்க ஆரம்பித்து விட்டார் ராஜன். இவரது அப்பா பெயர் - `ரெட் இந்தியன் தாஸ்’. ராஜனுக்கு செம மவுசு அந்த ஏரியாவில். ``அது ஒண்ணுமில்லைங்க... எங்க அப்பாருதான் காரணம். ரெட் இந்தியன் அப்படிங்கிற வின்டேஜ் பைக் வெச்சிருந்தோம்... அதான்!’’ என்கிறார் ராஜன்.

ராஜனின் தந்தை, தாத்தா அனைவருமே வின்டேஜ் பைக் மெக்கானிக்குகள்தான். 11-வது வயதில் இவரின் தந்தை, ராஜனுக்கு ஒரு பைக்கைக் கொடுத்து அதை அவரே ரெடி பண்ண வேண்டும் என கண்டிஷன் போட்டார். அதைச் செய்து முடித்தால்தான் தன் மெக்கானிக் ஷெட்டுக்குள் வர வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டார் ரெட் இந்தியன் தாஸ். தன் தந்தையின் சவாலை ஏற்று அந்த வேலையைத் தொடங்கினார் ராஜன்.

அந்த பைக், 1953 மாடலான ராயல் என்பீல்டு என்ஸைன். 2 ஸ்ட்ரோக் பைக்கான அதை ரெடி செய்வதற்கு 6 மாத காலம் ஆனதாம். இதுதான் இவரின் முதல் வின்டேஜ் பைக் அனுபவம். இங்கிருந்து தொடங்கிய பயணம் தற்போது வரை நார்டன், மேட்ச்லெஸ், ட்ரையம்ப், ஏரியல், பிஎம்டபிள்யூ என இவர் ரெடி செய்த பைக்குகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

சில மெக்கானிக்குகள் ராப்பகலாக, ஆர்வமாக வேலை செய்வார்கள். ஆனால், பிரச்னையைச் சரி செய்ய முடியாத பட்சத்தில் கடுப்பாகும் மெக்கானிக்குகளை நான் பார்த்திருக்கிறேன். லேட்டஸ்ட் மாடல்களை விடுங்கள்; வின்டேஜ் பைக்குகள் என்றால், அதில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கும்? சில பைக்குகள் சொல் பேச்சுக் கேட்காது. ஆனாலும், இன்முகத்துடனேதான் ஸ்பானர் பிடிக்கிறார் ராஜன்.

``வின்டேஜ் பைக்குகள் என்னைப் பொறுத்தவரை குழந்தை மாதிரி. அவற்றை ரெடி செய்வதற்கு அதிக கவனமும் பொறுமையும் வேண்டும். பிறந்த குழந்தையைப்போல் அதைக் கவனிக்க வேண்டும்’’ என்கிறார் ராஜன்.

வின்டேஜ் பைக்குகளுக்கு பார்ட்ஸ் கிடைப்பது மிகவும் கடினம். எனவே ராஜனே ஒரு டீமை வைத்து நிறைய பாகங்களை Re-Engineering செய்கிறார். இதைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, எப்படி பைக்கைப் பராமரிக்க வேண்டும்? ரெடி செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்குகிறார்.

சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பைக்குகள் ராஜனின் கை வண்ணத்தில்தான் உறுமிக் கொண்டிருந்தன. எந்த பைக்குகளுக்குமே வயதானதுபோல் தெரியவில்லை. ஓடவே முடியாத கண்டிஷனில் வரும் பைக்கையும், `ராஜன் கைய வச்சா அது ராங்கா போனதில்ல' என பல வின்டேஜ் பைக்குகளுக்கு மறுபிறவி கொடுத்துள்ளார். அப்படி அந்த பைக்குகள் மறுபடியும் உயிர்ப்பிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியைக் கூற வார்த்தை போதாது என்கிறார்.

வின்டேஜ் பைக் வெச்சிருக்கீங்களா?

வின்டேஜ் பைக்குகளில் பெட்ரோலுடன் சேர்த்து ஆயிலும் ஊற்ற வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐம்பது மில்லி ஆயில்தான் சரியான விகிதம்.

ஜாவா, ராஜ்தூத் போன்ற பைக்குகளில் டயர் பிரஷர் முன் வீலில் 18 psi. பின் வீலில் 13 psi இருந்தால்தான் ஹேண்ட்லிங் நன்றாக இருக்கும்.

நீங்கள் வெகுநாட்கள் பைக்கை நிறுத்தப் போகிறீர்கள் என்றால், பெட்ரோல் உடன் க்ரீஸ் சேர்த்து பைக்கின் க்ரோம் பகுதிகளுக்கு அப்ளை செய்ய வேண்டும். இது துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கும்.

எலிதான் பைக்குகளுக்குப் பெரிய வில்லன். எலிகளிடம் இருந்து பைக்கைப் பாதுகாக்க, வயர் உள்ள பகுதிகளில் நாட்டுப் புகையிலையை வைக்கலாம்.