Published:Updated:

வீட்டுக்கே வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலை, எவ்வளவு மைலேஜ்?!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

டெஸ்லா நிறுவனத்தின் ஃபார்முலாவையே ஃபாலோ செய்யும் ஓலா நிறுவனம், ஆன்லைனில் நேரடி புக்கிங் மற்றும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே ஸ்கூட்டரை கொண்டுபோய் கொடுக்கும் சிஸ்டத்தைக் கொண்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் ஒரு பைக்கோ/காரோ வாங்க வேண்டும் என்றால், முதல் வேலையாக என்ன செய்வோம்? அந்த வாகனத்தின் ஷோரூம்/டீலர்ஷிப்பைத் தேடி அலைந்து, புக் செய்ய ஓடுவோம் இல்லையா?! ஆனால், புது வரவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இனி அப்படிப்பட்ட விற்பனை முறை இல்லையாம். ‘‘ஓலா ஸ்கூட்டர் வீட்டைத் தேடி வரும்’’ என்கிறார்கள் ஓலா நிறுவனத்தினர். ''ஆமாம், நாங்கள் டீலர்ஷிப்களையே திறக்கப்போவதில்லை'' என்கிறார்கள்.

எல்இடி ஹெட்லைட்ஸ்
எல்இடி ஹெட்லைட்ஸ்

'ஓலா லெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் ஆரம்பம்’ என்று அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே 1 லட்சம் ஸ்கூட்டர்கள் புக்கிங் ஆனதால் ரொம்பவே தெம்பாக இருக்கிறது ஓலா நிறுவனம். டெஸ்லா நிறுவனத்தின் ஃபார்முலாவையே ஃபாலோ செய்யும் ஓலா நிறுவனம் ஆன்லைனில் நேரடி புக்கிங் மற்றும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே ஸ்கூட்டரை கொண்டுபோய் கொடுக்கும் சிஸ்டத்தைக் கொண்டு வருகிறது. DTC (Direct to Customer) என்று இந்த நடைமுறைக்குப் பெயர் வைத்திருக்கிறது ஓலா. மெர்சிடீஸ் பென்ஸும் இப்போது இந்த DTC நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஸ்கூட்டர் சர்வீஸுக்கு மட்டும் சர்வீஸ் சென்டர்கள் திறக்கப்பட இருக்கிறது. ஆனால், சர்வீஸ் புக்கிங்கை ஆன்லைனிலேயே செய்யலாம். அவர்களே வந்து வாகனத்தை எடுத்துக்கொண்டுபோய் சர்வீஸ் செய்து திரும்பத் தருவார்களாம்.

hyper charging
hyper charging

சார்ஜிங் எப்படி?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சர்வீஸை விட சார்ஜிங் மிக மிக முக்கியம். ஓலா ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய இரண்டு வழிகள் உண்டு. வழக்கமான ஹோம் சார்ஜர் மூலம் 5A பவர் ஸாக்கெட்டில் சார்ஜ் ஏற்றுவது ஒரு வகை. இதற்கு ஃபுல் சார்ஜிங் செய்ய சுமார் 4 – 5 மணி நேரம் ஆகலாம் என்கிறார்கள். ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் ஏற்ற 3 – 4 யூனிட்கள் செலவாகலாம். இந்த சாதா சார்ஜர், அநேகமாக ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலையோடே வரலாம்.

இன்னொரு ஆப்ஷன் – ஹைப்பர் சார்ஜர். இது வெறும் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 75 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்குமாம். இந்தியா முழுக்க 400 நகரங்களில் ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்களை விரைவில் நிறுவ இருக்கிறதாம் ஓலா. இப்போதைக்கு 100 நகரங்களில் ஹைப்பர் சார்ஜிங் பணி நிறைவடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். எந்தெந்த இடம் என்று தெரியவில்லை. இந்த ஹைப்பர் சார்ஜருக்கு ஆன்ரோடு விலையிலிருந்து எக்ஸ்ட்ராக ரூ.20,000 – 25,000 வரை கட்ட வேண்டியிருக்கலாம்.

தமிழ்நாட்டில் தயாரான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குத் தயார்... என்ன ஸ்பெஷல், என்ன விலை?
அதிகமான பூட் ஸ்பேஸ்
அதிகமான பூட் ஸ்பேஸ்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன ஸ்பெஷல்?

தமிழ்நாட்டில் தயாராகும் ஸ்கூட்டர் என்பதுதான் ஓலாவின் முதல் ஸ்பெஷல். மேலும், ஓலாவில் ‘செக்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று சொல்லக் கூடிய பல அம்சங்கள் உண்டு. உதாரணத்துக்கு, இதன் பூட் ஸ்பேஸ் 50 லிட்டர். இதில் 2 ஹெல்மெட்களை வைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இந்த ஸ்கூட்டரின் எடை 80 கிலோவுக்குள்தான் இருக்கும் என்பதால், கையாள ஈஸி. பின் பக்கம் டிஸ்க் பிரேக்கும் உண்டு. புளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஜிபிஎஸ், டச் ஸ்க்ரீன், எல்இடி ஹெட்லைட்ஸ் எனப் பல சிறப்பம்சங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இல்லாத அளவு இதன் டிரைவ் ரேஞ்ச் 130–150 கிமீ வரை இருக்குமாம்.

இந்த ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலையை இன்னும் அறிவிக்கவில்லை ஓலா. இருந்தாலும், இதன் ஆன்ரோடு விலை 1.25 லட்சத்துக்குள் இருக்கலாம் எனத் தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான FAME-II (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) மானியம் கிடைக்கும் பட்சத்தில், இந்த ஸ்கூட்டரின் விலை இன்னும் குறையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு