பல்ஸர் சீரிஸில் NS200 மற்றும் NS160 வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது NS125. இது பல்ஸர் சீரிஸில் பத்தாவது பைக்காகவும், NS சீரிஸின் மூன்றாவது பைக்காகவும் இருக்கிறது. என்ன இருக்கு புதிய NS125-ல்?
இன்ஜின், கியர்பாக்ஸ்: மற்ற NS மாடல் பைக்குகளில் இருப்பதுபோன்ற பல்க்கியான இன்ஜினுக்குப் பதில் புது NS125-ல், சிம்பிளான மற்றும் சிறிய 12bhp பவர் மற்றும் 11Nm டார்க்கைக் கொடுக்கக்கூடுய 124.4சிசி ஏர்கூல்டு இன்ஜின் இருக்கிறது. ஸ்டாண்டர்டான பல்ஸர் 125-ல் பயன்படுத்தப்பட்டுள்ள அதே இன்ஜின் மற்றும் கூலிங் வகைதான் புதிய NS125-யிலும்! ஆனால், பவர் மற்றும் டார்க் மட்டும் ஸ்டாண்டர்டு பல்ஸர் 125-ல் இருந்து சற்று வேறுபடுகிறது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சேஸிஸ், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகள்: பெரிமீட்டர் ஃப்ரேம் பயன்படுத்தப் பட்டுள்ள NS125-ல் சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 240mm டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130mm டிரம் ப்ரேக்கும் உள்ளன. பின்பக்கம் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை. Ns160-யைவிட 7 கிலோ எடை குறைவாக 144 கிலோவுடன் இருக்கிறது NS125. அதேபோல் 4 கிலோ ஸ்டாண்டர்டு பல்ஸரைவிட அதிகம். 179மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 805மிமீ உயரமான சீட் மற்றும் 1,353 மிமீ வீல்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது Ns160-யைவிட 19மிமீ-யும், Ns200-யைவிட 10மிமீ-யும் குறைவு.
ஸ்டைலிங்: NS சீரிஸுக்கு ஏற்றபடி சில ஸ்டைலிங்கான அம்சங்களும் NS 125-ல் உண்டு. பாடி பேனல், ஃப்யூல் டேங்க் ஆகியவை அதே NS சீரிஸ் பைக்குகள்தான்.ஸ்ப்ளிட் சீட்டும் அதே. டேங்க்கூட அதே 12 லிட்டர்தான். கலர் ஸ்கீமில் மட்டும்தான் மாற்றம்.
விலை: NS 160-யை விட 16,000 ரூபாய் குறைவாகவும், ஸ்டாண்டர்ட் பல்ஸர் 125-யை விட 20,000 ரூபாய் அதிகமாகவும் 93,690 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருக்கிறது இந்தப் புதிய பல்ஸர் NS 125.