Published:Updated:

ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

ரீடர்ஸ் ரிவ்யூ: ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா

ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!

ரீடர்ஸ் ரிவ்யூ: ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா

Published:Updated:
நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

பத்து ஆண்டுகளுக்கு மேலாக இ-பைக் மார்க்கெட்டில் தடம் பதித்து வரும் ஹீரோ ஆப்டிமா, அதிக மூவிங்கில் இருக்கிறது. லோ ஸ்பீடில் இரண்டு வேரியன்ட், ஹை ஸ்பீடில் மூன்று வேரியன்ட் என்று ஆப்டிமாவில் மொத்தம் ஐந்து வேரியன்ட்கள் இருக்கின்றன.

இதில் டபுள் பேட்டரி, 45 கிமீ வேகம் என்று அதிக கவனம் ஈர்த்தது, ஆப்டிமா ER HS 500. கோவை கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்டிமாவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ஆப்டிமா ER அனுபவங்களை நடராஜனை இங்கே நம்முடன் பகிந்து கொண்டார்.

“சிறு வயதில் இருந்தே இயற்கை மீது எனக்கு ஆர்வம் அதிகம். வாகனச் சத்தம், புகை எல்லாம் எனக்கு எப்போதும் பகைதான். பெட்ரோல் இன்ஜின் ஸ்கூட்டர் ரேஞ்சில், குடும்பத்துடன் செல்லும் வகையில், ஒரு இ-பைக் எதிர்பார்த்துக் காத்திருந்தபோதுதான் ஆப்டிமா குறித்துக் கேள்விப்பட்டேன். பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அட்வான்ஸ் கொடுத்த இரண்டு மாதங்களில் டெலிவரி செய்தனர்.

 ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!


இதில் டபுள்ஸ் சென்றாலும் 40 கி.மீ வேகம் செல்கிறது. தனியாகச் சென்றால் அதிகபட்சம் 45 கி.மீ வேகத்தில் செல்கிறது. நானும், என் மனைவியும் இதில் மருதமலை ஏறியுள்ளோம். ஸ்பீடு சற்று குறைவாக இருந்ததே தவிர, ஏறுவதில் எந்தச் சிரமும் இல்லை.

நான் தினசரி 35 கி.மீ முதல் 50 கி.மீ செல்வேன். எனக்கு இப்போது 60 வயதாகிறது. முன்பு பைக் ஓட்டும்போது, மணிக்கட்டு வலிக்கும். எனக்கு முதுகு வலியும் இருந்தது. இந்த ஸ்கூட்டர் ஓட்டத் தொடங்கிய பிறகு அது எதுவுமே இல்லை.

இதன் ஸ்மூத்னெஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரன்னிங்கில், உண்மையிலேயே ஸ்கூட்டர் இயங்குகிறதா என்ற சந்தேகமே வந்துவிடும். எந்தச் சத்தமும், புகையோ இல்லாமல் இருப்பது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

இரண்டு பேட்டரியும் சேர்த்து மூன்று மணி நேரம் சார்ஜ் போட வேண்டும். ஒருமுறை ஃபுல் சார்ஜானால், இரண்டு நாள்களுக்கு ஓட்டிக் கொள்ளலாம். என் மனைவிக்கும் இது நன்றாக செட்டாகிவிட்டது. என் மனைவி வேகமாகச் செல்வதை விரும்ப மாட்டார். எனது மகளும் இதை அவ்வப்போது ஓட்டுகிறார்.

45 கி.மீ வேகம் என்பதால், இதை ரிஜிஸ்டர் செய்துள்ளோம். ஷோ ரூமிலேயே பதிவு செய்து கொடுத்துவிட்டனர். நான்குமுறை ஃப்ரீ சர்வீஸ் முடிந்துவிட்டது. ஒருமுறை மட்டும் பேட்டரி ஸ்டக் ஆனது. தகவல் சொன்னவுடன் வீட்டுக்கே வந்து எடுத்துச் சென்று சரி செய்து கொடுத்தனர். நான் இந்த பைக் வாங்கியபோது இன்ஷூரன்ஸ் எல்லாம் சேர்த்து ரூ.83,000 இருந்தது. இப்போது ரூ.75,000தான்.

பேட்டரிதான் முக்கியம். அதன் விலை குறையும்போது பைக்கின் விலையும் குறையும். இந்த லித்தியம் வகை பேட்டரிக்கு மூன்று ஆண்டு ரீப்ளேஸ்மென்ட் வாரன்ட்டியும், அடுத்த இரண்டு ஆண்டு சர்வீஸ் வாரன்ட்டியும் கொடுக்கின்றனர். இதில் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளது. நாம் எவ்வளவு கி.மீ பயணிக்கிறோமோ... அது தனியாகவே டிஸ்பளேவில் காட்டும். உதாரணமாக என் வீட்டில் இருந்து, ரயில்நிலையம் வரை ஆஃப் செய்யாமல் செல்கிறேன் என்றால், அந்தத் தொலைவைத் தனியாகக் காட்டும். ஆஃப் செய்து, மீண்டும் ஆன் செய்தால் மொத்த கி.மீ காட்டும்.

பேட்டரி சார்ஜ் அளவும் டிஸ்ப்ளேவில் தெரியும். பேட்டரி லோ என்றால் குறியீடு காட்டும். அதிலும் 10 கி.மீ வரை செல்லலாம். ஒரு பேட்டரியில் சார்ஜ் முடிந்தவுடன், இன்னொரு பேட்டரிக்கு மாற்ற உள்ளேயே ஒரு ஸ்விட்ச் உள்ளது. அதை அழுத்தினால் அதுவே மற்றொரு பேட்டரிக்கு மாறிவிடும். எமர்ஜென்ஸி என்றால், அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் கொடுத்துக்கூட சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

இதில் நல்ல பேலன்ஸும் இருக்கிறது. அதேபோல இதன் பிரேக்கிங்கும் ஸ்மூத்தாக இருக்கிறது. பிக்-அப் சற்று குறைவாகத்தான் இருக்கும். பொதுவாகவே, நான் ஓவர்டேக் செய்ய விரும்பமாட்டேன் என்பதால், எனக்கு அது குறையாக இல்லை. ஸ்கூட்டரை நிறுத்துகின்ற இடத்தில் எல்லாம் பலர் இந்த பைக் குறித்து ஆர்வமாகக் கேட்பார்கள். அவர்களிடம் சிறிது நேரம் விளக்கிவிட்டு, ஓட்டிப் பார்க்கவும் கொடுப்பேன். அது பிடித்து சிலர் இதே ஆப்டிமா வாங்கியுள்ளனர். இதுபோன்ற விழிப்புஉணர்வு இன்னும் நிறைய மக்களிடம் சென்று சேரவேண்டும். அப்போதுதான் காற்று மாசுப் பிரச்னை குறையும்.

இதில் ஒரே ஒரு மைனஸ் - அவசரமாகச் செல்பவர்களுக்கு இது செட் ஆகாது. அப்புறம் - இதன் டிஸ்ப்ளே சூரிய ஒளியிலும் தெரியும் வகையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏதாவது தருணத்தில் பைக் அதிக ஜம்ப் அடித்தால், பேட்டரி கனக்ஷென் வயர்களில் பிரச்னையாகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் ஏற்கெனவே ஒருமுறை பேட்டரி ஸ்டக் ஆனது. அது மட்டும்தான் நெகட்டிவ்.

சார்ஜிங்கிலும் பாக்ஸ்போல ஒரு செட்டப் இருக்கிறது. அதை பேட்டரியில் பிளக் செய்துதான் சார்ஜ் செய்ய முடியும். அதற்குப் பதிலாக மொபைல், லேப்டாப் போல அதனுடனே சேர்ந்து நேரடியாக சார்ஜ் போடும்படியாக அப்டேட் செய்தால் பயன்படுத்த இன்னும் எளிதாக இருக்கும். அதேபோல, அதிகபட்சம் 50 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!
 ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!
 ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!

இதற்கு முன்பு நான் பெட்ரோல் இன்ஜின் பைக்தான் வைத்திருந்தேன். அப்போது மாதம் சராசரி ரூ.2,500-க்கு பெட்ரோல் அடிப்பேன். இதை 8,000 கி.மீ ஓட்டியுள்ளேன். ஸ்கூட்டர் வாங்கியவுடனே இதற்கென தனி சார்ஜிங் பாயின்ட் வைத்து, அதற்கென தனி மீட்டரும் வைத்துவிட்டேன். இதுவரை 237 யூனிட் மின்சாரம்தான் ஓடியுள்ளது. இதற்கு ரூ.500 தான் கட்டணமாகச் செலுத்தியுள்ளேன். மாத அடிப்படையில் பார்த்தால் சராசரியாக சுமார் ரூ.29தான் மின் கட்டணம்.

 ஒரு நாளைக்கு 50 கிமீ... மாசத்துக்கு 29 ரூபாய்!

மாதம் ரூ.2,060 பைக்குக்கான இஎம்ஐ பெட்ரோல் காசு மிச்சத்திலேயே தவணையைச் செலுத்தி விடுகிறேன். ரூ.10 லட்சத்துக்கு கீழ் இ-கார் வந்தால் வாங்கும் ஐடியாவிலும் இருக்கிறேன். ஸ்பீடை மட்டும் சற்று கூட்டினால் ஆப்டிமாவை எந்தக் குறையும் சொல்ல முடியாது!‑

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism