Published:Updated:

முழங்காலும் முக்கியம்!

முழங்காலும் முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
முழங்காலும் முக்கியம்!

பாதுகாப்பு: ரைடிங் பேன்ட், Knee Guards

முழங்காலும் முக்கியம்!

பாதுகாப்பு: ரைடிங் பேன்ட், Knee Guards

Published:Updated:
முழங்காலும் முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
முழங்காலும் முக்கியம்!

- விநாயக் ராம்

நீங்க சொன்ன மாதிரி ஹெல்மெட், ரைடிங் ஜாக் எல்லாம் வாங்கியாச்சு... ஊரடங்கும் தளர்த்தியாச்சு... இப்போ ரைடிங் போலாம்தானே பாஸ்?’’ என நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது. தலை, உடலின் மேற்புறத்தைப் பாதுகாப்பதைப் பார்த்தாச்சு. கீழ்ப்பகுதி, அதாவது கால்களும் முக்கியம் அல்லவா? அதனால் இந்த மாதம் நாம் Knee Guards-ன் முக்கியத்துவம் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் கால் மூட்டில் தட்டையாக முக்கோண வடிவில் இருக்கும் எலும்புக்குப் பெயர் பட்டெல்லா. இந்த பட்டெல்லாதான் தொடை எலும்பு மற்றும் முழங்கால் மூட்டுகளை உள்ளடக்கி, மூட்டு மேற்பரப்பைப் பாதுகாக்கிறது.

விளையாட்டின்போது நிகழக்கூடிய சிராய்ப்பு மட்டும் வெட்டுகளில் இருந்து பட்டெல்லாவைப் பாதுகாக்கத்தான் விளையாட்டு வீரர்கள் வாலிபால், கபடி எல்லாம் விளையாடும்போது knee guard அணிகிறார்கள். `கில்லி’ படத்தில் விஜய் கபடி விளையாடுவதற்காக த்ரிஷா knee guard வாங்கித் தருவதைப் பார்த்திருப்பீர்கள்.

முழங்காலும் முக்கியம்!

விளையாட்டுக்கே இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்போது, நெடுஞ்சாலையில் 80 கிமீ வேகத்துக்கு மேல் ரைடிங் செய்யும் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

முழங்காலைப் பாதுகாக்க இருவகையான ரைடிங் கியர்கள் கிடைக்கின்றன. ஒன்று - கவசம் போல குறிப்பிட்ட பகுதியைப் பாதுகாக்கும் Knee Guards. இன்னொன்று - கவசங்களை உட்புறம் கொண்டு வெளியே பேன்ட் போலவே தோற்றமளிக்கும் ரைடிங் பேன்ட்டுகள்.

Knee Guards

Knee guard-களைப் பொறுத்தமட்டில் முட்டி பகுதியில் ஸ்ட்ராப் செய்ய கூடிய வகையில் இருக்கும். ஜீன்ஸ் அல்லது கார்கோ பேன்ட்டுக்கு இவற்றை அணிய வேண்டும். இது தனியாகத் தெரிவதுடன், சிறிது தூரம் நடந்தாலே மூட்டில் சரியாக ஃபிட் ஆகாமல் சற்று விலகி வந்துவிடும். இருப்பினும், புதிதாக லாங் ரைடிங் ஆரம்பிப்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

BBG, 1,800 ரூபாய்க்கு இதை விற்கிறது. அதே சமயம், Scoyco-வில் கைப் பகுதிக்கும் சேர்த்து 4 பீஸ் செட், 2,500 ரூபாய்க்குக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

முழங்காலும் முக்கியம்!

Riding Pant:

நல்ல ரைடிங் பேன்ட் எது, அதை எவ்வாறு தேர்வு செய்வது? ஒரு நல்ல ரைடிங் பேன்ட், உங்கள் தொடை, முட்டி மற்றும் முழங்காலைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும். மேலும் பந்தயம் அல்லது ஸ்டன்ட் போன்ற ஹார்ட்கோர் பைக்கிங்கில் ஈடுபடுவோர், பிறப்புறுப்பைப் பாதுகாக்கும் கூடுதல் அம்சமுள்ள ரைடிங் பேன்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீங்கள் ஒரு ரைடிங் பேன்ட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​ஜீன்ஸ் அல்லது ஃபார்மல் பேன்ட் வாங்குவதுபோலவே இடுப்பில் சரியாகப் பொருத்தி, பாதம் வரை நீளமாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். கீழ் தொடை, முழங்கால்கள், கால் ஆகிய பாகங்களைச் சரியாக மூடிப் பாதுகாக்க வேண்டும் இந்த ரைடிங் பேன்ட். உள்தொடை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ரைடிங் பேன்ட்டுகளைத் தவிருங்கள். கால்கள் சுதந்திரமாக நகர அனுமதிக்கும் வகையில், பேன்ட் வசதியாக இருக்க வேண்டும். இல்லையெனில், ரைடிங் பேன்ட்டுக்கான நோக்கமே முற்றிலும் இழக்கப்படுகிறது. எனவே, ரைடிங் பேன்ட்டை ஆன்லைனில் குத்துமதிப்பாக ஆர்டர் செய்யாமல், ட்ரையல் பார்த்து வாங்குங்கள்.

முழங்காலும் முக்கியம்!

7,500 ரூபாய் முதல் ஆரம்பமாகும் Aspida ரைடிங் பேன்ட்டுகள், CE-EN 1621-1 தரச் சான்றிதழ் பெற்றவை. சிராய்ப்பில் இருந்து பாதுகாக்கப் பெயர்போன KNOX கவசத்தைப் பயன்படுத்துவதால், நெடுஞ்சாலையில் வண்டியை விரட்டும்போது பாதுகாப்பாக உணரச் செய்கிறது.

சர்வதேச அளவில் பல நாடுகளைச் சுற்றும் மோட்டார் சைக்கிள் ரைடர்ஸ் தேர்ந்தெடுப்பது Macna ரைடிங் பேன்ட்டைத் தான். 17,000 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த ரைடிங் பேன்ட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதில் காற்றோட்டம் உள்ள மெஷ் வகை மெட்டீரியலில், நீரை எதிர்க்கும் வகையிலான லைனர்கள் பயன்படுத்தபடுகின்றன. ஒரிஜினல் லெதரில் செய்யப்பட்ட பேடிங் வெப்பத்தைத் தக்க வைக்கும். லடாக் போன்ற குளிர்ப்பிரதேசங்களுக்கு இது ஏற்றது.

ரைடிங் பேன்ட்டுக்குப் பராமரிப்பு ஏதும் தேவையில்லை. வாங்கி வைத்தால் அப்படியே இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை இது ஒருமுறை முதலீடுதான்; ஆனால் ரைடர்களுக்கு வாழ்நாள் முதலீடு!

***

* ஹெல்மெட்டுக்குத் தரக் கட்டுப்பாடுகள் போல, ரைடிங் ஜாக்கெட்டுகளுக்கு ஐரோப்பாவின் CE (Conformite' Europ'eene) அமைப்பு சான்றிதழ் அளிக்கிறது. ஆனால், இதில் 3 பிரிவுகள் உள்ளதால், வாங்கும்போது கவனம் தேவை!

CE Tested:

* CE அமைப்பின் அங்கீகாரம் பெறாமல், உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்துக்குள்ளேயே CE அளவுகோலை வைத்து ஜாக்கெட்டைச் சோதித்ததாக சொல்லப்படுவதை ‘CE Tested’ குறிக்கிறது. இவ்வகை ஜாக்கெட்டுகள் ஏறக்குறைய எந்த வகை சோதனையையும் பூர்த்தி செய்யாததற்குச் சமம். எனவே, இதை வாங்கும்போது கவனம் தேவை.

CE Certified:

* ஒரு ஜாக்கெட்டின் பேடிங்குகள் மட்டும் CE - யால் சோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டால், அதில் ‘CE Certified’ என இருக்கும் .

CE Approved:

* இந்த வகை ஜாக்கெட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை. ‘CE Approved’-ன் பொருள், ஒரு ஜாக்கெட்டின் முழுவதும் CE-யால் நேரடியாகச் சோதிக்கப்பட்டு, தேவையான தரங்களைப் பூர்த்தி செய்ததற்கான அங்கீகாரம் பெற்றவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism