கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

0 - 100 கி.மீ - 6.5 விநாடிகள்... இது அட்வென்ச்சரா அதிரடி பைக்கா?

கேடிஎம் 390 அட்வென்ச்சர்
பிரீமியம் ஸ்டோரி
News
கேடிஎம் 390 அட்வென்ச்சர்

ரோடு டெஸ்ட் ரிப்போர்ட்: கேடிஎம் 390 அட்வென்ச்சர்

கேடிஎம் 390 அட்வென்ச்சர்... இந்த ADV பைக்கை முதன்முறையாக நாங்கள் ஓட்டியபோது, கொஞ்ச நேரம் மட்டுமே அதனுடன் செலவிட முடிந்தது. இருந்தாலும் விடலையே... 390 அட்வென்ச்சரை ஆஃப் ரோடு - ஆன் ரோடு எனக் கலந்துகட்டி ஓட்டினோம்.

டிசைன் மற்றும் வசதிகள்

ஒரு அட்வென்ச்சர் பைக்குக்கான வடிவமைப்புடன் திடகாத்திரமாக இருக்கிறது 390 அட்வென்ன்சர். எதிர்பார்த்தபடியே, இதே இன்ஜின் திறன் கொண்ட இதர பைக்குகளைவிட இந்த ADV பெரிதாகவே உள்ளது. இதனாலேயே சாலையில் செல்லும்போது, பலரது கவனம் 390 அட்வென்ச்சர் பக்கம் வந்ததை உணர முடிந்தது. ஆனால் மெலிதான எக்ஸாஸ்ட் பைப் மற்றும் டயர்கள், கச்சிதமான க்ராஷ் Protection அமைப்பு என இந்த பைக்கைக் குறுகலாகக் காட்டுவதற்கு கேடிஎம் மெனக்கெட்டிருப்பது புரிகிறது. இதனால் ஆஃப்ரோடிங்கில் ரைடரின் கன்ட்ரோலில் பைக் இருக்கும் என்பதுடன், நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் புகுந்து புறப்பட ஏதுவாகவும் 390 அட்வென்ச்சர் உள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர்
கேடிஎம் 390 அட்வென்ச்சர்

200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெரிய ப்ளஸ் என்றாலும், கூடவே இன்ஜினின் பாதுகாப்புக்கு Belly Pan கொடுத்துள்ளது கேடிஎம். டியூக் 390-ல் இருக்கும் அதே மிரர்கள், ஸ்விட்ச்கள், ஸ்ப்ளிட் LED ஹெட்லைட், TFT டிஸ்பிளே ஆகியவை, 390 அட்வென்ச்சருக்குப் பொருத்தமாக இல்லையோ எனத் தோன்றுகிறது. எதிர்க்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் விண்ட் ஸ்க்ரீன், அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கலாம். பின்பக்கத்தில் உள்ள ஸ்ப்ளிட் LED டெயில் லைட், நீட் அண்ட் க்ளீன். 390 அட்வென்ச்சரில் உள்ள 14.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், டியூக் 390-யைவிட ஒரு லிட்டர் அதிகம். பைக்கின் தரம் மற்றும் Fit/Finish அற்புதம்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

டியூக் 390 மற்றும் RC 390-ல் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பதால், பவர்ஃபுல் பட்டாசாக வெடிக்கிறது 390 அட்வென்ச்சர். ஒருவேளை நீங்கள் இம்பல்ஸ் அல்லது ஹிமாலயனில் இருந்து இந்த பைக்குக்கு மாறினால், இந்த குணாதிசயம் பழகுவதற்குக் கொஞ்ச காலம் பிடிக்கும்.

 வைஸர் சிறுசு. பெரிய வைஸர் ஆக்சஸரீஸில் வாங்கிக் கொள்ளலாம்.,  டியூக் 390-ல் இருக்கும் அதே ஸ்விட்ச்சுகள்தான். தரம் ஓகே!
வைஸர் சிறுசு. பெரிய வைஸர் ஆக்சஸரீஸில் வாங்கிக் கொள்ளலாம்., டியூக் 390-ல் இருக்கும் அதே ஸ்விட்ச்சுகள்தான். தரம் ஓகே!

0 - 100கிமீ வேகத்தை வெறும் 6.5 விநாடிகளில் இந்த ADV பைக் எட்டிப்பிடிக்கிறது. இது டியூக் 390 விட வெறும் அரை விநாடி மட்டுமே அதிகம்! டியூக் 390 போலவே இங்கும் Bidirectional Quickshifter இருப்பதால், 390 அட்வென்ச்சரை விரட்டுவது செம அனுபவமாக இருக்கிறது. ஆனால் குறைவான வேகங்களில் இதன் செயல்பாடு, அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை. எனவே நகர்ப்புறங்களில் பயணிக்கும்போது, இது சிறிது இடைஞ்சலாக இருக்கலாம். மற்றபடி அந்த வேகங்களில் இன்ஜினின் ரெஸ்பான்ஸ் ஸ்மூத்தாகவே உள்ளது. எனவே குறைவான வேகத்தில் - அதிக கியரில் முன்பைவிடச் சிறப்பாகவே இயங்குகிறது இன்ஜின்.

ரேடியேட்டரின் அளவு பெரிதாகி இருப்பதுடன், இரு ஃபேன்கள் அதனுள்ளே இருக்கின்றன. எனவே டியூக் 390 விட 390 அட்வென்ச்சர், மிகவும் குறைவான இன்ஜின் சூட்டையே ரைடருக்குக் கடத்துகிறது. இப்போது ஆஃப் ரோடிங்குக்கு வருவோம். நிலையான பகுதிகளில் பைக் சரசரவென முன்னேறிவிடுகிறது. ஆனால் பெரிய கற்கள், சீரற்ற தரைப்பகுதியில் பைக் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறது. இதற்கு இன்ஜினின் ஆரம்பகட்ட பர்ஃபாமன்ஸ் சிறப்பாக இல்லாததே காரணம். எக்ஸாஸ்ட் சத்தம் மென்மையாகவே இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஓட்டுதல் அனுபவம்

RE ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS உடன் ஒப்பிடும்போது, 390 அட்வென்ச்சரின் சஸ்பென்ஷன் செட்-அப் கொஞ்சம் இறுக்கமாகவே உள்ளது (டியூக் 390 விட 27மிமீ சஸ்பென்ஷன் டிராவல் அதிகம்). இவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பது நெருடல்.

 சிம்பிளாக இருக்கும் டெயில் லைட், பைக்குக்கு அழகு சேர்க்கிறது.,  கி.கிளியரன்ஸ் 200 மிமீ, ஆஃப்ரோடுக்கு செம! Belly Pan இருப்பது இன்னும் ப்ளஸ்!
சிம்பிளாக இருக்கும் டெயில் லைட், பைக்குக்கு அழகு சேர்க்கிறது., கி.கிளியரன்ஸ் 200 மிமீ, ஆஃப்ரோடுக்கு செம! Belly Pan இருப்பது இன்னும் ப்ளஸ்!

ஆனால் ஸ்போர்ட்டியான ட்ரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் சிறப்பான கிரிப்பைத் தரும் Metzeler Tourance டயர்கள் இதனுடன் சேரும்போது, திருப்பங்கள் நிறைந்த சாலையில் ஓட்டுவதற்கு ஏதுவான பைக்காகவும் இந்த ADV இருக்கிறது. டியூக் 390 விட 73மிமீ அதிக வீல்பேஸ் மற்றும் பெரிய 19 இன்ச் முன்பக்க வீல் இருப்பதால், 390 அட்வென்ச்சரின் நிலைத்தன்மை அசத்தல் ரகம். உயரமான ரைடர்களுக்கும் இந்த பைக் வாட்டமாகவே உள்ளது. இந்த கேடிஎம் ADV, பவர் குறைவான ஹிமாலயனைவிட 22கிலோ எடை குறைவு என்பது செம! ஆனால் பிஎம்டபிள்யூ G310GS விட 7.5 கிலோ அதிக எடையுள்ள 390 அட்வென்ச்சர், அதைவிட 9.5bhp அதிக பவரைக் கொண்டிருக்கிறது. 855மிமீ சீட் உயரம் மிகவும் அதிகம் என்றாலும், சொகுசான சீட்கள் அந்தக் குறைபாட்டைச் சரிசெய்கின்றன. அகலமான ஹேண்டில்பார், ஆன்ரோடு பயன்பாட்டுக்கு சூப்பராக ஒத்துழைக்கிறது. ஆனால் ஆஃப் ரோடிங்கில் பைக்கில் நின்றுகொண்டு செல்ல எத்தனித்தால், தாழ்வாக வைக்கப்பட்டிருக்கும் ஹேண்டில்பார் அசௌகரியமாக உள்ளது. Switchable டிராக்‌ஷன் கன்ட்ரோல் தனது பணியைத் திறம்படச் செய்தாலும், ஒவ்வொரு முறை இன்ஜின் ஆஃப் ஆகும்போதும், அதன் செட்டிங் Default முறைக்குச் சென்றுவிடுகிறது.

டிஸ்க் பிரேக்ஸின் ஃபீட்பேக், ரைடருக்கு நம்பிக்கை தருகிறது. 60 கி.மீ-யில் செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தாலும், அடுத்த 16 மீட்டரில் பைக் அலைபாயாமல் நிற்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ்தான் காரணம். தேவைப்பட்டால் பின் வீலுக்கான ஏபிஎஸ்ஸை ஆஃப் செய்துகொள்ளலாம். இது ஆஃப்ரோடில் உதவிகரமாக இருக்கும்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர்
கேடிஎம் 390 அட்வென்ச்சர்

மைலேஜ் மற்றும் முதல் தீர்ப்பு

லிட்டருக்கு நகரத்தில் 27.9 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 35.8 கி.மீ-யும் பயணிக்கிறது இந்த 390. விரட்டி ஓட்டும்போதும்கூட, சராசரியாக 27 கி.மீ-க்கும் மேல் மைலேஜ் கிடைப்பது செம. எனவே ஃபுல் டேங்க்கில் 400 கி.மீ-யாவது செல்லலாம் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியச் சாலைகளுக்கான பக்கா செட்-அப்பில் வந்துள்ளது 390 அட்வென்ச்சர். 3.5 லட்ச ரூபாய் சென்னை ஆன்-ரோடு விலையில் களமிறங்கியிருக்கும் 390 அட்வென்ச்சர், இதைவிட மூன்று மடங்கு அதிக விலையில் கிடைக்கும் பைக்குகளில் உள்ள வசதிகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல், Bidirectional Quickshifter, TFT டிஸ்பிளே, Ride By Wire, ஆஃப் ரோடு ஏபிஎஸ், Metzeler டயர்கள் ஆகியவை உதாரணம்.

ஆனால் சர்வதேச மாடலில் இருக்கும் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் இந்திய மாடலிலும் இருந்திருந்தால், சூப்பராக இருந்திருக் ஆக்ஸசரீஸில் பெரிய வைஸர் கிடைத்தாலும், வெளிமார்க்கெட்டில் Handlebar Raisers வாங்கி, இந்த பைக்கில் அதன் உரிமையாளர்கள் பொருத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சிற்சில எர்கானமிக்ஸ் குறைபாடு, இன்ஜினின் ஆரம்பகட்ட பர்ஃபாமன்ஸ், குறைவான வேகத்தில் Quickshifter-ன் செயல்பாடு எனச் சிலக் குறைகள் இருந்தாலும், 390 - அட்வென்ச்சர் பண்ண விரும்பும் புள்ளிங்கோக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.