Published:Updated:

புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 BS-6
பிரீமியம் ஸ்டோரி
News
டிவிஎஸ் அப்பாச்சி RR 310 BS-6

ரோடு டெஸ்ட் ரிப்போர்ட்: டிவிஎஸ் அப்பாச்சி RR 310 BS-6

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-க்கு முன்பாகவே, தனது அப்பாச்சி RR 310 பைக்கின் BS-6 வெர்ஷனை அறிமுகப்படுத்தி விட்டது டிவிஎஸ். அப்போது அந்த பைக்கை, சென்னையில் உள்ள MMRT ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது லாக்டவுனால் அமலுக்கு வந்த விதிகள் தளர்வுகளைப் பெற்றுள்ள நிலையில், அதே பைக்கை நம் ஊர்ச் சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். முந்தைய BS-4 மாடலில் இருந்த குறைகளை இதில் களைந்திருக்கும் டிவிஎஸ், புதிதாகத் தொழில்நுட்பத்தையும் இதில் சேர்த்துள்ளது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த ஃபுல் ஃபேரிங் பைக்கைச் சிறப்பானதொரு தயாரிப்பாக மாற்றியுள்ளனவா?
புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

முன்பிருந்த Phanthom Black நிறத்துக்குப் பதிலாக, Titanium Black கலர் ஆப்ஷனை வழங்கியுள்ளது டிவிஎஸ். டூயல் டோன் கலர், ஒரு பைக்கை எந்தளவுக்கு மாற்றிக் காட்டும் என்பதற்கு, RR 310 பெரிய உதாரணம். அதற்கு பைக்கில் ஒட்டப்பட்டுள்ள Decals துணைநிற்கின்றன. மேலும் ஃபேரிங்கின் உட்பகுதி, Gloss Black ஃபினிஷுக்கு மாறிவிட்டது. இதில் கீறல்கள் விழாமல் பராமரிப்பது கொஞ்சம் கடினம் என்றாலும், அது ப்ரீமியமாகக் காட்சியளிக்கிறது. இதற்கு மேலே அமைந்திருக்கும் விண்ட் ஸ்க்ரீன், கழட்டி மாட்டக்கூடியது. எனவே இந்தப் பகுதியைச் சுத்தப்படுத்துவது சுலபமாகி இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
LCD டிஸ்ப்ளேவுக்குப் பதில் வெர்ட்டிக்கல் TFT ஸ்க்ரீன் இடம் பிடித்துள்ளது.  RR 310 பைக்கிலிருக்கும் 312.2சிசி Reverse Inclined இன்ஜின், ரெட்லைன் வரைக்குமே சீரான ஆக்ஸிலரேஷனைத் தருகிறது.  KYB நிறுவனத்தின் சஸ்பென்ஷன் பேக்கேஜ் பழசு.. 17 இன்ச் Michelin Road 5 - ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் புதுசு  அப்பாச்சியின் எக்ஸாஸ்ட் சத்தம் செம!
LCD டிஸ்ப்ளேவுக்குப் பதில் வெர்ட்டிக்கல் TFT ஸ்க்ரீன் இடம் பிடித்துள்ளது. RR 310 பைக்கிலிருக்கும் 312.2சிசி Reverse Inclined இன்ஜின், ரெட்லைன் வரைக்குமே சீரான ஆக்ஸிலரேஷனைத் தருகிறது. KYB நிறுவனத்தின் சஸ்பென்ஷன் பேக்கேஜ் பழசு.. 17 இன்ச் Michelin Road 5 - ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் புதுசு அப்பாச்சியின் எக்ஸாஸ்ட் சத்தம் செம!

BS-4 மாடலில் Vertical LCD மீட்டர் இருந்த நிலையில், BS-6 மாடலில் 5 இன்ச் TFT டிஸ்பிளே இடம்பிடித்துள்ளது. பைக்கை ஆன் செய்யும்போது, மீட்டரில் வரும் Start Lights & Animation சூப்பர் ரகம். இதில் பல தகவல்கள் தெளிவாகத் தெரிவதுடன், புளுடூத் கனெக்ட்டிவிட்டி இருப்பதும் சிறப்பு (நேவிகேஷன். ரைடு டேட்டா, ஃபோன் கால் செய்வது, வாகனத்தின் கண்டிஷன் ஆகியவையும் உண்டு). பைக்கில் இருக்கும் 4 ரைடிங் மோடுகளுக்கு ஏற்ப, டிஸ்ப்ளேவும் மாறுவது அழகு. இடதுபுற ஸ்விட்ச்சின் உதவியுடன், இந்த டிஸ்ப்ளேவைக் கட்டுப்படுத்தலாம். 3 லட்ச ரூபாய்க்குட்பட்ட பைக்கில் இதுபோன்ற அம்சங்கள் இருப்பது Sweet Surpriseதான்.

புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

4 ரைடிங் மோடுகளுடன், ரைடு பை வயர் த்ராட்டில் தொழில்நுட்பமும் RR 310 பைக்கில் அறிமுகமாகிவிட்டது. Rain, Urban, Sport, Track எனப்படும் இவை, பைக்கின் பவர் டெலிவரி & ஏபிஎஸ் செயல்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. எதிர்பார்த்தபடியே Rain & Urban மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் டல்லாக இருப்பதுடன், 25.8bhp பவர் - 2.5kgm டார்க் மட்டுமே இங்கே வெளிப்படுகிறது (9,000 ஆர்பிஎம் ரெட்லைன்). பைக்கின் அதிகபட்ச பவர், நெரிசல்மிக்க நகர்ப்புறங்களில் தேவைப்படாது என்பதால், இவை அங்கே உதவிகரமாக உள்ளன. தவிர இதர அப்பாச்சி பைக்குகளில் இருக்கும் Glide Through Plus வசதி, இதிலும் வழங்கப்பட்டிருப்பது நன்மையே. இதுவே Sport & Track மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் துல்லியமாக இருப்பதுடன், முழுமையான 34bhp பவர்@9,700rpm - 2.73kgm@7,700rpm டார்க் அப்படியே கிடைக்கிறது (11,000 ஆர்பிஎம் ரெட்லைன்).

புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

சீரான நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும்போது, இவை ரைடருக்கு உறுதுணையாக இருக்கின்றன. இதனை டூரிங் பைக்காகவும் பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள் என்பதால், சராசரியாக 30bhp பவரை மட்டும் வெளிப்படுத்தும்படி ஒரு ரைடிங் மோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் (Cruise என்ற பெயர் இதற்குப் பொருந்தும்). 0 - 100கிமீ வேகத்தை 7.1 விநாடிகளில் Sport மோடும், 9.76 விநாடிகளில் Urban மோடும் எட்டிப்பிடிக்கின்றன. BS-4 மாடலுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ் என்றே இதைச் சொல்லலாம் (0-60மிமீ வேகம்: 3.06 விநாடிகள்). ஏனெனில் முன்பைவிட 4.5 கிலோ அதிக எடையை, இது சுமக்கவேண்டியிருப்பது கவனிக்கத்தக்க அம்சம் (174 கிலோ). மற்றபடி RR 310 பைக்கிலிருக்கும் 312.2சிசி Reverse Inclined இன்ஜின், ரெட்லைன் வரைக்குமே சீரான ஆக்ஸிலரேஷனைத் தருகிறது. முன்பிருந்ததைவிட க்ளிப் ஆன் ஹேண்டில்பார் - ஸ்ப்ளிட் சீட்கள் - அலாய் ஃபுட் பெக்ஸ் ஆகியவற்றில் மிகக் குறைவான அதிர்வுகளே தெரிகின்றன.

புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

ஓட்டுதல் அனுபவம்

பைக்கின் சிவப்பு நிற ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - Bybre பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ் (முன்: 300மிமீ, பின்: 240மிமீ) - KYB நிறுவனத்தின் சஸ்பென்ஷன் பேக்கேஜ் (முன்: USD, பின்: மோனோஷாக்) ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 17 இன்ச் Michelin Road 5 - ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் புதிது (முன்: 110/70 - ZR17, பின்: 150/60 - ZR17). முந்தைய Hard Compound Pilot Street டயர்களுடன் ஒப்பிடும்போது, இவை Soft Compound ரகம் என்பது பெரிய ப்ளஸ். எனவே ரேஸ் டிராக் போலவே, வழக்கமான சாலைகளிலும் இவற்றின் ரோடு க்ரிப் அற்புதம். எனவே RR 310-யைத் திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவது, சிறப்பானதொரு அனுபவம் எனலாம். 1,365மிமீ வீல்பேஸ் இருப்பதால், RR 310-ன் நிலைத்தன்மை வாவ் ரகம். மேலும் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், எப்படிப்பட்ட ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஆனால் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க், இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நகர்ப்புறங்களில் 33.66கிமீ (Urban) - 32.55 கிமீ (Sport) மற்றும் நெடுஞ்சாலைகளில் 37.21 கிமீயும் மைலேஜ் தந்தது RR 310. பைக்கின் பெர்ஃபாமன்ஸுடன் ஒப்பிட்டால், இது நல்லதொரு எண்ணிக்கைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே!

றிமுகமான நாளில் இருந்தே, பைக் ஆர்வலர்களிடம் ஆல்ரவுண்டர் பைக் என்ற அந்தஸ்த்தை RR 310 பெற்றிருப்பது தெரிந்ததே! அதற்கேற்ப நகரம் - நெடுஞ்சாலை - ரேஸ் ட்ராக் என இதை ஓட்ட முடிவது செம. இதைவிட இருமடங்கு இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளைவிட, இந்த ஃபுல் ஃபேரிங் பைக்கின் Road Presence சிறப்பாக உள்ளது என்பதே நிதர்சனம். மேலும் தொழில்நுட்பத்தில் RR 310, புதிய உச்சத்தை எட்டிவிட்டது. BS-4 மாடலைவிட 12,000 ரூபாய் அதிக விலையில் BS-6 களமிறங்கியது என்றாலும், இடையே பைக்கின் விலையைத் தனது போட்டியாளர் போலவே 5,000 ரூபாய் வரை டிவிஎஸ் உயர்த்தியது நினைவிருக்கலாம். 2.45 லட்ச ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் RR 310, தற்போது MRF Revz C1 டயர்களுடன் கிடைக்கும் RC 390 பைக்குடன் போட்டி போடுகிறது. எனவே மொத்தமாகப் பார்க்கும்போது, சூப்பர் ஸ்போர்ட் ரைடிங் பொசிஷன் மற்றும் அதிகப்படியான பவர் வேண்டும் என்பவர்களுக்கு, அந்த கேடிஎம் பைக் ஏற்புடையதாக இருக்கும். மற்றபடி அதைவிட 8,184 ரூபாய் குறைவான விலையில் கிடைக்கும் டிவிஎஸ் பைக்கே, தினசரிப் பயன்பாட்டுக்கும் உகந்தபடியான பிராக்டிக்கல் தேர்வாக இருக்கும்.