ராபர்ட் பாஷ் என்றால், எல்லோருக்கும் பைக் மற்றும் கார் ஸ்பேர் பார்ட்ஸ்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த நிறுவனத்தினர், தங்களை அப்படி அடையாளப்படுத்துவதை விரும்புவதில்லை. இவர்கள் தங்களை தீர்வாளர்கள் (Solution Provider) என்றே சொல்கிறார்கள். இதற்குக் காரணம், பாஷ் நிறுவனம் வெறும் உதிரிபாகங்களை மட்டும் தயாரிப்பதில்லை, தொழில்நுட்பங்களையும் உருவாக்குகிறது. எதிர்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள் பற்றி, டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் காட்சிப்படுத்தியிருந்தது பாஷ்.

BS-6 விதிகளுக்கு மாறுவதற்கு ஐரோப்பிய நாடுகளே 9 ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்ட நிலையில், இந்தியாவில் 3 ஆண்டுகளில் மாற வேண்டிய கட்டாயம். இதனால், இங்கிருக்கும் பல நிறுவனங்களால் சொந்தமாக BS-6 தொழில்நுட்பத்தை உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில், இதுவரை 70 ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு BS-6 தொழில்நுட்பத்தை அவர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக் கொடுத்திருக்கிறது பாஷ். நாம் இந்தியாவில் பார்க்கும் பல வாகனங்களில் பாஷ் நிறுவனத்தின் BS-6 தொழில்நுட்பம்தான் இருக்கிறது. BS-6 என்றால் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் மட்டுமில்லை, அதற்கேற்ப இன்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் (EMS) உருவாக்குவது. சவாலான விஷயம்தான்.

கார்/பைக் மட்டுமில்லை, ஆட்டோவுக்கும் லீன் நாக்ஸ் ட்ரேப் உருவாக்கியிருக்கிறார்கள் இவர்கள். ஆனால், ஆட்டோவை BS-6 ஆக மாற்றுவதைவிட எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவது எதிர்காலத்தை நோக்கிய திட்டமாக இருக்கும் என்கிறார், ராபர்ட் பாஷ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சௌமித்ர பட்டாச்சாரியா.

சமீபத்தில் வெளியான டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் i-க்யூபில், பாஷ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சிஸ்டம்தான் இருக்கிறது. இது தவிர, தற்போது சிறிய கமர்ஷியல் வாகனங்கள்-பிக் அப் ட்ரக்குகளுக்கு ஏற்ப, 1 முதல் 20kW மோட்டார் மற்றும் பேட்டரிகளையும் தயாரித்துள்ளார்கள். இதைச் சிறிய பேருந்துகளில்கூட பொருத்தலாம்.

ஒரு IC இன்ஜினின் அதிகபட்ச இயங்குதிறன் (Thermal efficiency) என்பது 20-35 சதவிகிதம். ஹைபிரிட் தொழில்நுட்பம் இருந்தால், இதை 45 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்க முடியும். மைல்டு ஹைபிரிட் மற்றும் ஃபுல் ஹைபிரிட் என இரண்டு தொழில்நுட்பங்களை வைத்திருக்கிறது பாஷ். இப்போதைக்கு இந்திய நிறுவனங்களுக்கு மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து வருகிறது.

கூடவே, பாதுகாப்பு வசதிகளையும் வைத்திருக்கிறோம் என்று டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தையும் காட்சிப்படுத்தியிருந்தது. அட்டானமஸ் பிரேக்கிங், கார்னர் ரேடார், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி, டிராஃபிக் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் 2022-23-ம் ஆண்டில் இந்தியாவில் கட்டாயமாகிறது. எல்லாவற்றையும் இப்போதே காட்சிக்கு வைத்துவிட்டார்கள்.

இதேபோல எலெக்ட்ரிக் வாகனங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்க இருக்கும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கும் சில சர்வீஸ் இருக்கிறது என்கிறது பாஷ். ஒவ்வொரு காருக்கும் சார்ஜ் செய்யச் சரியான நேரம் எது, சார்ஜ் தேவையா, எப்போது தேவை என்பதையெல்லாம் ஒரே இடத்தில் காட்டும் ‘கன்வீனியன்ஸ் சார்ஜிங்’ எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இது சீனாவில் பயன்படுத்தப்படுகிறது.

இதோடு, Battery-in-the-cloud எனும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள். பேட்டரியின் சார்ஜிங், டிஸ்சார்ஜிங், வாகனத்தின் ரேஞ்ச், டிரைவர் எப்படி ஓட்டுகிறார் என்பதையெல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் அறிந்து, வாகனங்களை அதிக திறனுடன் பயன்படுத்த இது உதவும். உதிரி பாகங்களில் மட்டுமில்லை; எலெக்ட்ரிக், தொழில்நுட்பங்களிலும் பாஷ் - பாஸ்தான்!