Published:Updated:

டீசல் புல்லட்னா சும்மாவா?

என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல் புல்லட்
பிரீமியம் ஸ்டோரி
என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல் புல்லட்

வின்டேஜ் கார்னர்: என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல் புல்லட்

டீசல் புல்லட்னா சும்மாவா?

வின்டேஜ் கார்னர்: என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல் புல்லட்

Published:Updated:
என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல் புல்லட்
பிரீமியம் ஸ்டோரி
என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல் புல்லட்

என்ஃபீல்டு இந்தியன் – டாரஸ் 1995 மாடல்

பெயர்: விஜயன்

ஊர்: தென்காசி

பைக்: என்ஃபீல்டு இந்தியன்-டாரஸ்

மாடல்: 1995

வாங்கிய விலை ; ரூ.68,700

வாங்கிய ஆண்டு: 1997

எரிபொருள் : டீசல்

கியர் செட்அப்: வலதுபக்கம்

பிடித்தது: மைலேஜ்....கம்பீரமான தோற்றம்... லாங் ரைடுக்கு செமையாக இருக்கிறது.

பிடிக்காதது: அதிக எடை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தென்காசி ஏரியாவுக்குப் போனால், பல நேரம் அந்த ‘டப் டுப்’ சவுண்டைக் கேட்கலாம். அது, விஜயனின் டீசல் புல்லட். ‘‘என்னது, டீசல் புல்லட்டா… இதைத்தான்யா தேடிக்கிட்டிருந்தேன்!’’ என்று விஜயனை சடர்ன் பிரேக் போட்டு, புல்லட்டும் கையுமாக மடக்கினேன். புல்லட், பார்ப்பதற்குப் புதிதாக ஜொலித்தது. ‘‘புதுசோ’’ என்று நான் சுற்றிச் சுற்றிப் பார்த்ததை வைத்து அவரே பேசத் தொடங்கினார்.

‘‘இது ஓல்டு புல்லட்டுங்க. இது ஒரு 90‘ஸ் கிட்ஸ் மாடல் புல்லட். ஆனா, இப்போ 2K பைக்ஸுக்கெல்லாம் சவால் விடுது. என் தாத்தாவோட ஞாபகார்த்தமா இதை ஓட்டிக்கிட்டு இருந்தேன். அவரோட புல்லட்தான் இது. இந்த புல்லட்டை எங்க தாத்தா ஓட்டிட்டு வரும்போது, அவருதான் எனக்கு ஹீரோ. அப்புறம் அவருக்கு வயசானதால, பத்து வருஷத்துக்கு முன்னாடி வல்லநாட்டைச் சேர்ந்த ஒருத்தருக்கு இதை தாத்தா வித்துட்டாரு. அப்பவே புல்லட் விலை 30 ஆயிரம். எனக்கு ரொம்ப வருத்தமாப் போயிடுச்சு.

என் வருத்தத்துக்கு ஆறுதலா வந்தது அந்தச் செய்தி. அந்த புல்லட்டை வாங்கினவங்க அதை விக்கப் போறதாக் கேள்விப்பட்டோம். ‘ஆஹா இந்த சான்ஸை விடக்கூடாது’னு முடிவு பண்ணிட்டு, அவருகிட்ட பேசத் தொடங்கினோம். தெரிஞ்சவங்கங்கிறதால தாத்தாகிட்ட வாங்கின அதே 30,000 ரூபாய் தந்தா போதும்னு சொன்னாங்க. யோசிக்காம உடனே வாங்கிட்டோம். புல்லட்டை நாங்களே வாங்கினதுல தாத்தா இப்போ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!

கிக்கர்... கியர் லீவர்... வலது பக்கம்...
கிக்கர்... கியர் லீவர்... வலது பக்கம்...
அனலாக் மீட்டர்... ஆம்ப் மீட்டர்...
அனலாக் மீட்டர்... ஆம்ப் மீட்டர்...
டீசல் புல்லட்னா சும்மாவா?
எடை அதிகம்; ஹேண்ட்லிங் கொஞ்சம் கஷ்டம்.
எடை அதிகம்; ஹேண்ட்லிங் கொஞ்சம் கஷ்டம்.
நல்ல மைலேஜ் கிடைக்கிறது.
நல்ல மைலேஜ் கிடைக்கிறது.


புல்லட் புதுசா வீட்டுக்கு வந்த உடனே அதை போட்டோ எடுத்து ‘கம்பேக்’ ஸ்டைலில் ஃபேஸ்புக்கில் போட்டேன்.ஒன்றரை லட்சம் வரை விலை பேசுனாங்க. அப்பதான் தெரிஞ்சது; டீசல் புல்லட்டோட மவுசு என்னன்னு! புதுசு புதுசா நிறைய மாடல் புல்லட் வந்தாலும், பழைய புல்லட் வாங்கிறதுக்குத் தனிக்கூட்டமே இருக்கு!

புல்லட் வீட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாசமா அதைப் பயன்படுத்தவே இல்லை. ஆனா பார்க்கும்போதெல்லாம் பழைய ஞாபகங்கள் வந்து போகும். இப்பதான் கிட்டத்தட்ட 38,700 ரூபாய் வரை செலவு பண்ணி இதை புதுசா மாத்தினோம்.தென்காசியில் ஒரு மெக்கானிக் ஷாப்லதான் வண்டியை ரெடி பண்ணோம். வண்டியோட மாடல்ல கை வைக்கல. வெளித்தோற்றத்தை மட்டும் கொஞ்சம் மாத்தினேன். புல்லட்டோட ஒரிஜினல் கலரை மாத்திட்டேன். அப்புறம் இப்போ இருக்கிற புது மாடல் புல்லட்ல இருக்கிற மாதிரி சைடுல சேஸி நம்பர் மெக்கானிக்கே வச்சுட்டாரு. சைடு மிரர் இல்லாததால அதையும் ரெட்ரோ ஸ்டைல்லயே ஃபிட் பண்ணோம். தாத்தா அவருக்கு ஏற்றமாதிரி செல்ஃப் ஸ்டார்ட் ஃபிட் பண்ணிருந்தாரு. அது எனக்குத் தேவைப்படாததால எடுத்துட்டோம். ஸ்பேர் பார்ட்ஸுக்காக எங்கேயும் அலையல. எல்லாத்தையும் மெக்கானிக்கே பாத்துக்கிட்டாரு. பொதுவா பழைய வண்டினாலே அடிக்கடி மக்கர் பண்ணும். ரொம்பச் செலவு வைக்கும் அப்டின்னு சொல்லுவாங்க. ஆனா இது அப்படி இல்ல; புது வண்டி மாதிரிதான் ஓடுது! இதுவரைக்கும் பெரிய செலவெல்லாம் வைக்கலை! இப்போவும் இதுல லாங் ரைடு போறதுன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்! இந்த புல்லட்டாலதான் இப்போ எனக்கே எங்க ஏரியாவுல மவுசு! பின்னே.. டீசல் புல்லட்னா சும்மாவா?’’ என்றார் விஜயன்.

டீசல் புல்லட்னா சும்மாவா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism