Published:Updated:

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்... இது வேற மாதிரி புல்லட்!

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்... இது வேற மாதிரி புல்லட்!

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!

ப்ளஸ்: சுறுசுறுப்பான ரைடு அண்ட் ஹேண்ட்லிங், இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், விலை

மைனஸ்: க்ளட்ச் ஹெவியாக இருக்கிறது; பின் பக்க சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதுபோல் இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டின் ஹன்ட்டர், நமது மோட்டார் விகடன் வாசகர்கள் மத்தியில், ஸ்பை ஷாட்டில் அதிகமாக அடிபட்ட பைக். அப்போதிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த பைக்குக்கு! காரணம், வேறெதுவுமில்லை. ராயல் என்ஃபீல்டு! அவ்வளவுதான்.

RE-ன் இந்தியப் புகழ்பெற்ற J ப்ளாட்ஃபார்ம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இதை அறிமுகம் செய்திருந்தது ராயல் என்ஃபீல்டு. அதில்தான் மாடர்னாக க்ளாஸிக் 350 புல்லட்டும், மீட்டியார் 350–யும் ரெடியாகின. இதற்கு நல்ல வரவேற்பு மக்களிடத்தில். அப்படி இருக்க ஹன்ட்டருக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா என்ன? ஓட்டுவதற்கு ஈஸியாக, பார்ப்பதற்கு ஸ்டைலாக வந்திருக்கும் ஹன்ட்டர் எப்படி இருக்குனு பார்க்கலாம்!

டிசைன், ரெட்ரோவா… மெட்ரோவா?

ஹன்ட்டர், ஒரு டிபிக்கல் ஆன மாடர்ன் ரெட்ரோ பைக். ராயல் என்ஃபீல்டு என்பதால், இதற்கு புல்லட் அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. பலர் இதை, `ஹன்ட்டர்னு ஒரு புல்லட் வந்திருக்காமே’ என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். இதன் வட்ட வடிவ ஹெட்லைட்தான் இந்த ரெட்ரோவுக்கு ஆதாரமே! இந்த பெட்ரோல் டேங்க்கில் ஒரு சிறப்பு – என்னவென்றால், இது ஒரு கண்ணீர்த்துளி போன்ற டிசைனில் இருக்கிறது. பக்கவாட்டில் சின்ன சைடு பேனல்கள்.

இதன் ஓவர்ஆல் சில்ஹோவுட்டை வைத்துப் பார்க்கும்போது, இதை ஒரு பக்கா ஸ்க்ராம்ப்ளராகத்தான் நினைப்பார்கள். இது வேறெந்த புல்லட் பைக்குகளிலும் இல்லாத சில எர்கானமிக்ஸ் டிசைன்கள் இதில் உண்டு. முழங்கால் வைப்பதற்கு recesses அமைப்பு, வித்தியாசமாக இருக்கிறது. அதேபோல், அந்த பக்கவாட்டு சைடு பேனல்களும் புதுசு. மீட்டியாரைப்போல், இதில் ஏகப்பட்ட ஆக்சஸரீஸ் வசதிகளை அள்ளித் தெளித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இதன் ஃப்ளாட் சீட் டிசைன், உட்கார்ந்து ஓட்ட வசதியாகவே இருக்கிறது. பில்லியன் ரைடரும் நன்றாக உட்காரும்படி இருக்கிறது.

இதன் அளவுகளை வைத்துப் பார்க்கும்போது, இது புல்லட்டை விட சிறுசு. இருந்தாலும், இது ஒரு 181 கிலோ எடை கொண்ட ஜாம்பவான் பைக். புல்லட் ஓட்டுபவர்கள் இதை எளிதாகக் கையாளலாம்.

இந்த ஜாம்பவானுக்கு பலத்தைக் குறைப்பது, இதன் சின்ன 17 இன்ச் வீல்கள்தான். இது இந்த பைக்குக்குச் சிறுசு! ஆனால், இதில் ஸ்டைலில் புகுந்து விளையாடுகிறது ஹன்ட்டர். இதில் Dapper Ash என்றொரு கலர் ஸ்கீமை முயற்சி செய்து பாருங்கள். நச்சென இருக்கும். இதில் டாப் எண்டான மெட்ரோ மாடலில் சில போல்டு லெட்டரிங்குகள் கவன ஈர்ப்பாக இருக்கும். லோயர் எண்டான ரெட்ரோ மாடலில் நீட் அண்ட் க்ளீன் பெயின்ட் ஸ்கீம் இருக்கிறது. இதன் இரட்டைக் குடுவ டயல்களும் ரெட்ரோ ஸ்டைலில் நன்றாக இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!

வசதிகள் குறைவா… நிறைவா?

இதை வசதிகளே இல்லாத பைக் என்றும் சொல்ல முடியாது; வசதிகளில் வாய் பிளக்கவும் வைக்கவில்லை. இதில் நீட்டாக டிசைன் செய்யப்பட்ட ஒரு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உண்டு. இந்த டிஸ்ப்ளேவில் ட்ரிப்பர் நேவிகேஷன், நீங்கள் வேண்டுமானால் ஆப்ஷனலாக வாங்கிக் கொள்ளலாம்.

டாப் எண்டான மெட்ரோ வேரியன்ட்டில் ஹஸார்டு லைட்கள் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி எல்இடி இல்லை. இரண்டு மாடல்களுமே ஹாலோஜன் பல்புகளில்தான் எரிகின்றன. ஆனால், நமக்குத் தெரிந்து பெர்சனலாக எல்இடி லைட்டிங் செட்அப்பைவிட, ஹாலோஜன் பல்புகள்தான் பளிச்! எனவே, கவலை வேண்டாம்! மெட்ரோவில் அலாய் வீல்கள் செம ஸ்டைலிஷ். டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. ட்யூப்லெஸ் டயர்கள் மெட்ரோவில் மட்டும்தான்.

லோ எண்ட் ஹன்ட்டரில் நார்மலான ஸ்போக் வீல்கள்; ஸ்லிம்மான டயர்கள்; பின் பக்கம் டிஸ்க் இல்லாமல் டிரம்; சிங்கிள் சேனல் ஏபிஎஸ், அடிப்படையான இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ட்யூபுலர் ரியர் கிராப் ஹேண்டில், ஹாலோஜன் பிரேக் லேம்ப், பழைய ஸ்டைல் செவ்வக வடிவ இண்டிகேட்டர்கள் – இப்படி எல்லாமே அடிப்படை வசதிகள்தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பிராக்டிக்கலாகவும், நீட்டாகவும் இருக்கிறது ரெட்ரோ.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

எடுத்த எடுப்பிலேயே இந்த ஹன்ட்டரை ஸ்போர்ட்டி என்று சொல்லிவிட முடியாது. இதிலிருப்பது மீட்டியார் 350 மற்றும் க்ளாஸிக்கில் இருக்கும் அதே இன்ஜின் செட்அப்தான். (20.2bhp) பவர் மற்றும் (27 Nm) டார்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அப்படியே மீட்டியாரும் க்ளாஸிக்கும். ஆனால், இந்த ஹன்ட்டரில் இதன் சைஸுக்கும் அளவுக்கும் ஏற்ப இந்த இன்ஜினைக் கொஞ்சம் மேப்பிங் செய்திருப்பதாகச் சொல்கிறது ராயல் என்ஃபீல்டு. ஏற்கெனவே க்ளாஸிக் மற்றும் மீட்டியார் வந்தபோதும் இதைத்தான் செய்தது ராயல் என்ஃபீல்டு. அது ஒர்க்அவுட்டும் ஆகியது. ஆம், பழைய புல்லட்களை ஒப்பிடும்போது இரண்டிலும் அதிர்வுகள் ரொம்பவே குறைவாக இருந்ததுதானே! இந்த ஹன்ட்டரிலும் அப்படித்தான்; பெரிதாக அதிர்வுகளே தெரியவில்லை. இதன் இன்ஜின் ரெஸ்பான்ஸ், அதிகமாகவே இருக்கிறது. குட்டையான இதன் எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் பீட் சத்தம், ஸ்போர்ட்டியாக கொஞ்சம் தடிமனாகத் தடதடப்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், புல்லட் பிரியர்களுக்குப் பிடிக்க வேண்டும்! எனக்கு இதன் பீட் பிடித்திருக்கிறது.

மற்ற RE பைக்குகளின் அதே பெர்ஃபாமன்ஸ் அனுபவத்தைத்தான் ஹன்ட்டரும் தருகிறது. இதன் மைலேஜும் மற்ற பைக்குகளைப்போலவே 36 கிமீ என்கிறது ராயல் என்ஃபீல்டு.

நெடுஞ்சாலைகளில் இதை விரட்டும்போது, 80 – 85 கிமீ வரை செம ஃபன்னாக இருக்கிறது ஹன்ட்டர். 100 வரை எந்த அரிபுரியும் இல்லாமல் நிம்மதியாகப் போக முடிகிறது. 120 கிமீ வருவதற்கு லேசாகத் திணறினாலும், இன்ஜின் ஸ்மூத்தாகவே இருக்கிறது. அட, முக்கியமாக வைப்ரேஷன்களே இல்லை. 120 கிமீ–க்கு மேல் ஹன்ட்டரை முறுக்க முடியவில்லை.

க்ளாஸிக் மற்றும் மீட்டியாரைப்போல, உறுதியான லோ மற்றும் மிட் ரேஞ்ச் டார்க் விஷயத்தில் பட்டையைக் கிளப்புகிறது ஹன்ட்டர். டாப் ஸ்பீடு இன்னும் எதிர்பார்ப்பார்களே மக்கள்! அதேபோல், சிட்டிக்குள் ஓட்ட இதன் க்ளட்ச்சும் கொஞ்சம் வில்லனாக இருக்கும்போல் தெரிகிறது. கொஞ்சம் லைட் வெயிட்டாக இருந்திருக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் எப்படி?

இதன் ஈஸி ஹேண்ட்லிங்குக்கு முதலில் இதன் சீட் உயரத்தைச் சொல்லலாம். 790 மிமீ என்பது சரியான உயரம். அதேநேரம், 6 அடி உயரமானவர்களும் முழங்கால் ஹேண்டிலில் இடிக்காத வண்ணம், இதன் குறுகலான பெட்ரோல் டேங்க் மற்றும் ரைடிங் பொசிஷனை வடிவமைத்திருப்பது சூப்பர்.

இதன் எடை 181 கிலோ. இது க்ளாஸிக் 350–யைவிட 14 கிலோ எடை குறைவு. அட, இதன் ரெட்ரோ வேரியன்ட் இன்னும் எடை குறைவு. இது 178 கிலோ எடைதான். மெட்ரோ வேரியன்ட்டில் சென்டர் ஸ்டாண்ட் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்றவற்றால் இந்த எடைக் கூடல் இருந்திருக்கலாம்.

அதனால், புல்லட் ஓட்டிப் பழகியவர்கள், இதைக் கையாள எளிதாக இருக்கும். இதன் சேஸியிலும் நன்றாக வேலை பார்த்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. என்னதான், 17 இன்ச் சின்ன வீல்கள் இருந்தாலும், ஓட்டுவதற்கு செம சுறுசுறுப்பாக இருக்கிறது ஹன்ட்டர். இன்னொரு காரணம், இது க்ளாஸிக்கைவிட 20 மிமீ வீல்பேஸும் கம்மி. கூடவே, இதன் ஸ்டீயரிங் ரேக் ஆங்கிளையும் 25 டிகிரிக்கு ஷார்ப் செய்திருக்கிறது RE. அதனாலும் சிட்டிக்குள் கட் அடித்து ஓட்டும்போது, நம்மையே சுறுசுறுப்பு ஆக்குகிறது ஹன்ட்டர் 350.

மீட்டியார், க்ளாஸிக்கின் அதே ப்ளாட்ஃபார்ம், அதே முன் பக்க சேஸிதான் என்றாலும், இதன் பின் பக்க சேஸியில் கை வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. பின் பக்க ஃப்ரேமைக் கொஞ்சம் சின்னதாகவும், ஒரு புது சப் ஃப்ரேமும் கொடுத்திருக்கிறார்கள். மீட்டியார் மற்றும் க்ளாஸிக்கின் ஃபுட் பெக்குகள் கொஞ்சம் எடை அதிகமாக இருக்கும். இந்த ஹன்ட்டரில் அப்படி இல்லை. எடை குறைவு. முன்னோக்கி இல்லாமல், க்ரூஸருக்கு ஏற்ற பொசிஷனில்.. அதாவது இதைக் கொஞ்சம் பின்னோக்கி பொசிஷன் செய்திருக்கிறார்கள். அதனால், லாங் ரைடிங் ஜாலியாக இருக்கலாம். எனக்கு இதை ஓட்டும்போது, இன்டர்செப்டர் ஞாபகம் வந்தது. காரணம், இதன் ரைடிங் மற்றும் ஃபுட் பெக் பொசிஷன் அப்படித்தான் இருந்தது. நிறைய பேருக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

இதன் காரணமாக, ஒரு 250 சிசி நேக்கட் பைக்கை ஓட்டினால் எப்படி இருக்கும்… அப்படித்தான் இந்த ஹன்ட்டரை ஓட்டும்போது உணர்ந்தேன். ரியர் சஸ்பென்ஷன் மட்டும் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், இது பெரிய குறை இல்லை. இதன் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ், ஹன்ட்டருக்குப் பெரிய மைனஸாக இருந்து விடக் கூடாது. வெறும் 150 மிமீதான். இருந்தாலும், நாங்கள் இதை ஓட்டியவரை எந்த ஸ்பீடு பிரேக்கர்களிலும் தட்டவில்லை என்பது நன்று! ஆனால், க்ளாஸிக் 350 இதில் கில்லி!

ஹன்ட்டர் வாங்கலாமா?

மொத்தம் ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இரண்டு வேரியன்ட்களில் வந்திருக்கின்றன. இதில் ரெட்ரோதான் விலை குறைந்த வேரியன்ட். இதன் ஆன்ரோடு விலை 1.74 லட்சம். மெட்ரோ டாப் எண்டின் விலை 1.94 லட்சம். இதிலேயே மோனோ டோன் ஆப்ஷன் தேர்ந்தெடுத்தால், விலை குறையும். இது டிவிஎஸ் ரோனின் பைக்குக்கு இணையான விலை. அதாவது, ஒரு 225 சிசி வாங்கும் விலையில் ஒரு 350 சிசி ராயல் என்ஃபீல்டு வாங்கிவிடலாம். அதேபோல், ஹோண்டாவின் CB350RS பைக்கைவிட பல ஆயிரங்கள் குறைவு என்பதும் ப்ளஸ். பெரிதாக டாப் ஸ்பீடு எகிற முடியாது; சிட்டிக்குள் கொஞ்சம் ஹெவியான க்ளட்ச்; லேசான இறுக்கமான ரியர் சஸ்பென்ஷன் என்று சின்னக் குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… இந்தச் சுறுசுறுப்பான ஹன்ட்டர், நிறைய வாடிக்கையாளர்களை ஹன்ட் செய்யலாம் என்பதுதான் உண்மை.

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்...
இது வேற மாதிரி புல்லட்!