கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

120–வது வயதில் ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ராயல் என்ஃபீல்டு

இரண்டே நிமிடங்களில் 120 பைக்ஸ் விற்பனை!

ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் இப்போதைக்கு டாப்மோஸ்ட் சீனியர், ராயல் என்ஃபீல்டு நிறுவனம். 1901–ல்தான் பிறந்தது இந்நிறுவனம். 1956–ல் சென்னையில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியது ராயல் என்ஃபீல்டு. இப்போது இந்த மாதத்தோடு RE-க்கு 120–வது வயது. அதைக் கொண்டாடும் பொருட்டு, இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் 650 பைக்குகளின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், வெறும் இரண்டே நிமிடங்களில் சொல்லி வைத்தாற்போல் அதன் வயதையொட்டி 120 பைக்குகளை ஆன்லைன் மூலம் விற்றுத் தீர்த்து விட்டதுதான் ஹாட் டாபிக்.

தனது ட்வின் 650சிசி பைக்குகளான இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் பைக்குகள் – தலா 60 எண்ணிக்கையில் 2 நிமிடங்களில் விற்றிருக்கின்றன.

120–வது வயதில் ராயல் என்ஃபீல்டு!

இந்த அன்னிவெர்சரி எடிஷன்கள் ஃபுல் பிளாக் தீமில் செம ஸ்போர்ட்டியாக இருப்பதோடு மட்டுமில்லாமல், எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ், டேங்க்கில் கைவேலைப்பாடு கொண்ட 120 ஆண்டு பேட்ஜ், 5 ஆண்டுகளுக்கு எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்று ஒரு முழு பேக்கேஜாக இதை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த லிமிட்டெட் எடிஷன் வெறும் 480 பைக்குகள்தான் தயாராகுமாம். அதில் இப்போதே 120 பைக்குகள் சோல்டு அவுட்.

இதோடு மட்டுமல்லாமல், கையாலேயே மேனுவலாகச் செய்யப்பட்ட ஹேண்ட் க்ராஃப்டட் ஹெல்மெட்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது RE. ISI, DOT, ECE என்று ட்ரிப்பிள் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பயங்கரப் பாதுகாப்போடு ரெடி செய்திருக்கிறதாம் ராயல் என்ஃபீல்டு. இதுவும் லிமிட்டெட் எடிஷன்தான். இதையும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.