Published:Updated:

அட்வென்ச்சர்... ரைடர்கள் கவனிங்க!

ராயல் என்ஃபீல்டு
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு

ரைடிங் கியர்ஸ்: ராயல் என்ஃபீல்டு

அட்வென்ச்சர்... ரைடர்கள் கவனிங்க!

ரைடிங் கியர்ஸ்: ராயல் என்ஃபீல்டு

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு

ஊர் ஊராகச் சுற்றும் அட்வென்ச்சர் பிரியர்களுக்கு ராயல் என்ஃபீல்டை விட்டால் ஆப்ஷன் குறைவுதான். ஹிமாயலன் வாங்கியிருப்பார்கள்; ஆனால் அட்வென்ச்சர் ட்ரிப்புக்கு ஏற்ற பாதுகாப்பான ரைடிங் கியர்களுக்கு அலைவார்கள். இனி அப்படி அலைய வேண்டியதில்லை; ராயல் என்ஃபீல்டு ஷோரூமிலேயே ரைடிங் கியர்கள் கிடைக்க இருக்கின்றன.

Knox என்றொரு ரைடிங் கியர் நிறுவனத்துடன் கூட்டு வைத்திருக்கும் RE, இனி அதன் ரைடிங் கியர்களை தனது ஷோரூமிலேயே கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது.

அட்வென்ச்சர்... ரைடர்கள் கவனிங்க!

இதில் Knox–ன் பாடி ஆர்மர்தான் ரொம்ப ஸ்பெஷல். இது இப்போது CE Level-2 தரத்துக்கு ஏற்றபடி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மைக்ரோ லாக் ஆர்மர்கள், நமது தோள்பட்டைகளையும் முழங்கைகளையும் பாதுகாக்கவல்லது. CE என்பது நம் ஊர் ISI மாதிரி ஐரோப்பியன் பாதுகாப்புத் தரத்தைக் குறிப்பது. அதில் CE Level-1–யைவிட CE Level-2–ல் பாதுகாப்பு அதிகம். இதுபோக, கைகளைப் பாதுகாக்கும் CE ஸ்டாண்டர்டு க்ளோவ்ஸ், முழங்கால்களைப் பாதுகாக்கும் Knee Guard, ரைடிங் ட்ரெளஸர்கள், ரைடிங் ஜாக்கெட்டுகள் என எல்லாமே இனி RE டீலர்ஷிப்பில் வாங்கிக் கொள்ளலாம். இதில் க்ளோவ்ஸ்கள் மொத்தம் 14 ரேஞ்ச்களில் கிடைக்கிறதாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல்.

அட்வென்ச்சர்... ரைடர்கள் கவனிங்க!
அட்வென்ச்சர்... ரைடர்கள் கவனிங்க!

விலையும் அட்வென்ச்சர் பிரியர்களுக்குக் கையைக் கடிக்காத வகையில் வைத்திருக்கிறது Knox. இந்த CE சர்ட்டிஃபைடு க்ளோவ்ஸ் 2,500–ல் இருந்து 4,500 ரூபாய் வரை இருக்கிறது. 4,900 ரூபாயில் இருந்து 6,950 வரை ரைடிங் ஜாக்கெட்டுகள் கிடைக்கின்றன. முழங்காலுக்கான Knee Gaurd–ன் விலை 3,900 ரூபாய்.

அட்வென்ச்சர்... ரைடர்கள் கவனிங்க!

ரைடிங் கியர்களை விரும்பும் அட்வென்ச்சர் ரைடர்கள், ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களுக்குப் போனால்… பணம் கொடுத்து கூடுதல் பாதுகாப்பை வாங்கி வரலாம்!அட்வென்ச்சர் ரைடர்கள் கவனிங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism